நம்ம வீட்ல நாம எவ்வளவுதான் சுத்தபத்தமா இருந்தாலும், எங்கிருந்தாவது ஒரு எறும்புப் படை கிளம்பி வந்துடும். நாம அறியாம கீழ சிந்துற ஒரு சின்ன பிஸ்கட் துண்டு போதும், கொஞ்ச நேரத்துல அங்க ஒரு பெரிய எறும்புப் பேரணியே நடக்கும். சர்க்கரை டப்பாவில் ஆரம்பிச்சு, நம்ம துணி வைக்கிற அலமாரி வரைக்கும் அதுங்களோட ராஜ்ஜியம் தான்.
வெயில் காலம், மழைக்காலம்னு எந்தப் பாகுபாடும் இல்லாம, வருஷம் முழுக்க இந்தத் தொல்லை இருந்துட்டே இருக்கும். இதுக்காக நாம எறும்பு சாக்பீஸ், பவுடர்னு வாங்கிப் போட்டாலும், அதுங்க வேறொரு ரூட்ல வந்து நம்மள வெறுப்பேத்தும். இனி இந்த கவலை வேண்டாம்.
எறும்புகளால் வரும் எரிச்சல்!
எறும்புகள் பார்க்கத்தான் சின்னது, ஆனா அதுங்க பண்ற அட்டகாசம் இருக்கே, சொல்லி மாளாது. சர்க்கரை, மாவு, பருப்பு டப்பாக்களுக்குள் புகுந்து, அதை மொத்தமா வீணாக்குவது ஒரு பக்கம்னா, சில சமயம் நிலைக்கதவு, ஜன்னல் மரங்களையே அரிக்க ஆரம்பிச்சுடும். நிம்மதியா ஒரு இடத்துல துணியைக்கூட வைக்க முடியாது, அதுக்குள்ள நூற்றுக்கணக்கான எறும்புகள் குடியேறி இருக்கும்.
நாம அதைக் கவனிக்காம அந்த உடையை போட்டுட்டா போதும், உடம்புல அங்கங்க கடிச்சு தடிப்பு தடிப்பா ஆகிடும். வீட்ல சின்னக் குழந்தைகள் இருந்தா இன்னும் மோசம். தரையில விளையாடிட்டு இருக்குற குழந்தைகளை கடிச்சு வெச்சுடும். இந்த மாதிரி நமக்கு எல்லா விதத்திலயும் தலைவலியைக் கொடுக்கிற எறும்புகளை விரட்ட, ஒரு நிரந்தரமான வழி இல்லையானு நாம எல்லாரும் யோசிச்சிருப்போம்.
எறும்புகள் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கிறதுக்கும், சரியான பாதைல போறதுக்கும் ஒருவிதமான வாசனை திரவத்தை (Pheromones) தான் பயன்படுத்தும். ஒரு எறும்பு உணவு இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டா, அது போற வழியில இந்த வாசனைத் தடத்தை விட்டுட்டே போகும். அதை மோப்பம் பிடிச்சுதான் மற்ற எறும்புகளும் சாரை சாரையா ஒரே லைன்ல வரும்.
ஆனா, விக்ஸ் மாதிரியான தைலங்கள்ல இருக்கிற கற்பூரம், மென்தால், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றோட வாசனை ரொம்பவே ஸ்ட்ராங்கானது. இந்த வாசனை, எறும்புகளோட வாசனைத் தடத்தை மொத்தமா அழிச்சிடும், அதுகளைக் குழப்பமடையச் செஞ்சுடும். அதுகளுக்குப் பாதை தெரியாம திணற ஆரம்பிக்கும். அதனால, இந்த வாசனை இருக்கிற இடத்துக்கே வர பயப்படும்.
இதை பயன்படுத்துறது ரொம்பவே சுலபம். ஒரு இயர் பட்ஸ் எடுத்துக்கோங்க. அதுல கொஞ்சமா தைலத்தை தொட்டு, உங்க வீட்ல எறும்பு வரிசை எங்க ஆரம்பிக்குதோ, அந்த இடத்துல ஒரு கோடு மாதிரி மெல்லிசா இழுத்து விடுங்க. முக்கியமா, சமையல் மேடை ஓரங்கள், ஜன்னல் ஓரங்கள், கதவு நிலைகள், சர்க்கரை டப்பா வைக்கிற இடத்தைச் சுற்றி, சுவரோரங்கள்ல இதைத் தடவி வைக்கலாம்.
எறும்புகள் வீட்டுக்குள்ள வர்ற வழியைக் கண்டுபிடிச்சு, அந்த இடத்துல தடவி வெச்சீங்கன்னா, அதுங்க வீட்டுக்குள்ள வர்றதையே நிறுத்திடும். நிறைய தடவணும்னு அவசியம் இல்லை, லேசா தடவினாலே அந்த வாசனைக்குப் பலன் கிடைக்கும்.
பாதுகாப்புதான் முக்கியம். வீட்ல குழந்தைகள் இருந்தா, விஷத்தன்மை கொண்ட எறும்புப் பொடி, சாக்பீஸ் போன்றவற்றை பயன்படுத்துறது ரொம்ப ஆபத்தானது. குழந்தைகள் அதைத் தொட்டுட்டு கைய வாயில வெக்க வாய்ப்பிருக்கு. ஆனா, இந்த தைலம் முறை ரொம்பவே பாதுகாப்பானது.
இனிமே எறும்புத் தொல்லைக்காக டென்ஷன் ஆகாம, இந்த சிம்பிளான, செலவே இல்லாத, பாதுகாப்பான வழியை முயற்சி செஞ்சு பாருங்க. உங்க வீட்டை எறும்புகள் எட்டிக் கூட பார்க்காது.