தினமும் தலைக்குக் குளிப்பது ஆரோக்கியமான விஷயமா?

தினமும் தலைக்குக் குளிப்பது ஆரோக்கியமான விஷயமா?

ன்றைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்னை பெரும்பாலானவர்களுக்கு பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. முடி வளர்ச்சியை வைத்துதான் உங்கள் உடல் உட்புறத்தில் என்ன நடக்கிறது என்று கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

சரியான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருந்தாலோ தலைமுடி உதிர்வு ஏற்படும். தலைக்கு ரசாயனம் கலந்த ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது, அதிக சூடான வெந்நீரில் குளிப்பது, ஹேர் டிரையர் பயன்படுத்துவது, ப்ளீச் செய்வது, தலைச்சாயம் பூசுவது இவற்றையெல்லாம் செய்தால் கண்டிப்பாக முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும்.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் இந்தப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார்கள். முப்பது வயது ஆவதற்குள் தலை முடி உதிர்ந்து சிலருக்கு வழுக்கையும் விழுந்து விடுகிறது. முடிந்தவரை தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதே நல்லது. தலைமுடியை இயற்கையான வழியில் பராமரித்து வந்தாலே இந்தப் பிரச்னையிலிருந்து நாம் மீண்டு விடலாம்.

இனி, தினமும் தலைக்குக் குளித்தால் தலைமுடி உதிருமா? அல்லது வேறு ஏதாவது பிரச்னை ஏற்படுமா? என்பது குறித்து பார்ப்போம்.

1. முடியின் தன்மையைப் பொறுத்தே ஒருவர் தினமும் தலைக்குக் குளிக்க வேண்டும்.

2. தலையில் அரிப்பு, பொடுகு தொல்லை, அதிக வியர்வை ஏற்பட்டால் தினமும் தலைக்குக் குளிக்கலாம்.

3. தலை முடி வறட்சியாக இருந்தாலோ, முடி கடினமாக இருந்தாலோ தினமும் தலைக்குக் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

4. அதற்காக வாரத்திற்கு ஒருமுறை தலைக்குக் குளிப்பது தவறான விஷயம்.

5. தலைக்குக் குளிக்கையில் ஷாம்பூவை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

6. தலை குளிக்கும்போது நன்றாக முடியை அலச வேண்டும். தண்ணீர் மட்டும் ஊற்றிக்கொண்டு தலைக்குக் குளித்தால் அழுக்கு தலையில் அப்படியே தேங்கி இருக்கும். இதனால் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும்.

7. ரசாயன ஷாம்பூக்களை தவிர்த்து, சியக்காய் அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பது உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, முடிக்கும் போஷாக்காகும்.

8. டென்ஷன், மன அழுத்தம் கூட தலை முடி உதிர்வுக்குக் காரணமாகும். அதனால் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com