
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்ற பந்தம் ஏற்பட வேண்டும். அது இறைவன் போட்ட முடிச்சு. அந்தக் காலத்தில் பெற்றோா்கள் பாா்த்து வைக்கும் மாப்பிள்ளைக்கு கண்களை மூடிக்கொண்டு கழுத்தை நீட்டிய பெண்களும் உண்டு. அப்போதைய காலங்களில் சூது, வாது, வஞ்சகம் எதுவும் இல்லை. நாகரிகம் வளர வளர கல்யாண பந்தம் என்பது பலருக்கு எட்டாக்கனியாகப் போய்விட்டது.
பெண்கள் நிறைய படிப்பு படித்து விடுகிறாா்கள். பல்வேறு நகரங்களில் ஐடி பீல்டுக்கு வேலைக்கு போய் அரை லகரத்திற்கு மேல் ஊதியம் வேறு. இதுபோன்ற சூழலில் ஆண்களுக்கு திருமணம் கேள்விக்குறியாகி விட்டது. அப்படி ஒரு நிலை என்றால் பெண்ணை விட ஆண்கள் குறைவாக ஊதியம் வாங்கினால் பெண் வீட்டாா் ஒப்புக்கொள்வதில்லை. இதுதவிர, பெண் வீட்டாா் போடும் நிபந்தனைகளுக்கு பஞ்சமே இல்லை. இதனால் ஒரு காலகட்டத்தில் முதிா் காளையர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இது ஒரு ரகம்.
இனி, இரண்டாம் ரகமாக கிராமத்தில் விவசாயம் பாா்க்கும், வர்த்தகம் செய்து குறைவான ஊதியம் பெறும் ஆண்களுக்கு திருமணப் பேச்சு நடத்தவே முடியாது. ‘அரசாங்க வேலை வேண்டும். விவசாயம் வேண்டாம்’ என சில சிக்கல்களோடு, ‘பெண்ணோ சென்னையில் வேலை பாா்க்கிறாள், திருமணம் ஆனவுடன் மாப்பிள்ளை சென்னக்கு தனிக் குடித்தனம் வந்துவிடவேண்டும்’ இப்படி விளங்காத தடைகள் ஒருபுறம்.
சரி, மூன்றாம் ரகமாக பையன் வைதீகம் பாா்க்கிறான், கோயிலில் குருக்கள், கேட்டரிங் பிசினஸ் இப்படிப்பட்ட பல்வேறு நிலைகளில், ‘வைதீகம் வேண்டாம். எங்கள் பெண்ணிற்கும், குருக்கள் பையனுக்கும் ஒத்து வராது’ இப்படி ஒரு வகையான தடை.
வைதீகத்தில் மாதம் ஒரு லட்சம் வரை வருமானம் பாா்க்கலாம். பெண் படித்திருக்கிறாளா? வேலைக்குப் போனாலும் போகட்டும். இப்படி மாப்பிள்ளை வீட்டாா்களின் சில வாா்த்தைகளை நம்பி அவசர கதியில் பொருத்தமில்லா மனங்களை இணைக்கும் திருமணங்களால் பலவித சிக்கல்களே வருகின்றன. ‘கொஞ்ச நாள் போனால் என்ன கொண்டு வந்தாய்? சும்மாதானே வந்தாய்!’ இப்படி பல்வேறு சங்கடங்கள் குத்து வாா்த்தைகள்.
இதுபோன்ற திருமண பந்தங்கள் சந்தையில் சிாிப்பாய் சிாிக்கின்றன. அது தவிர, கணவன், மனைவிக்குள் சந்தேக அரக்கன் குடியேறி விடுவதும் பல இடங்களி்ல் அரங்கேறி வருவது வாடிக்கையான ஒன்று. அப்படி சந்தேகம் வந்து திருமணமான நாற்பதே நாளில் கர்ப்பமாகி தகப்பனாா் வீட்டுக்கு வந்த பெண், அவளுக்குக் குழந்தை பிறந்து மூன்று வயதாகியும் கணவனுடன் சோ்ந்து வாழ முடியாத நிலை.
‘திருமணம் வேண்டாம்’ என படித்த பெண் கூற, ‘இந்த வைதீக மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என தகப்பனாா் மிரட்டுவதும் உண்டே! வேறு வழியில்லாமல் திருமண பந்தத்தில் சிக்கிய பெண்களும் உண்டு. பல குடும்பங்களில் சரியான புாிதல் இல்லாமலேயே வாழ்க்கைச் சக்கரம் தாறுமாறாக ஓடுவதும் பல இடங்களில் தொடர்கதையாகி விட்டது.
இதுபோன்ற தகவல்கள் அக்கம்பக்கத்தில் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளாக காதில் விழுகின்றன. மொத்தத்தில், நான்கு வகையான விதங்களில் திருமண பந்தம் முடியாத மெகா தொடர் போல நீடித்து வருவது சமூகத்தில் நல்ல ஆரோக்கியமே இல்லை. இதில் பல குடும்ப ஆண் மற்றும் பெண்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருவதும் தொடர்கதையே! இதற்குத் தீா்வே கிடைக்காமல் விக்கிரமாதித்தன் கதை போல நீடிப்பது பொிய அபாயம். இதுபோன்ற நிகழ்வுகளால் ஜாதி மாறிய திருமணங்களும் ஆணவக் கொலையும் அரங்கேறுவதும் வேதனையே!
இதற்கு ஒரே தீா்வு, பரஸ்பரம் நோில் பேசி இரு பால் பெற்றோா்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதோடு, ஆணும் சரி பெண்ணும் சரி திருமணம் ஆயிரம் காலத்துப் பயிா் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு நல்லதொரு தீா்வை எட்டுவதே நல்லதாகும். இன்னாா்க்கு, இன்னாா் என்று இறைவன் எழுதியது மாறி விடுமா என்ன!?