Garlic paste
Garlic paste

ரெடிமேட் பூண்டு விழுது உடலுக்கு ஆரோக்கியம் தருமா?

Published on

பூண்டு பலரது அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு அவசியமான பொருள் ஆகும். அந்தப் பூண்டு விரைவில் கெட்டுப் போய் வீணாகாமல், வீட்டில் வைத்து எப்படிப் பராமரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சரியான முறையில், உலர்ந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும் பூண்டுகள், 3 முதல் 6 மாத காலம் வரையில் நன்றாக இருக்கும். பூண்டை அரைத்து நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்வது இப்போது பலரின் வழக்கமாகி விட்டது. ஆனால், நறுக்கிய பூண்டு ஓரிரு நாட்கள் மட்டுமே நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் பயத்தை போக்குவது தாயின் கையில்தான் இருக்கிறது!
Garlic paste

உரித்த பிறகு பூண்டு கருப்பு அல்லது பழுப்பு நிறத்துக்கு மாறும். அதிலிருக்கும் நன்மை செய்யும் நுண்பொருட் களும் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல், சரியாகப் பக்குவப்படுத்தப்படாமல், கருப்பு நிறமாகி கெட்டுவிடும். பூண்டுகளின் உள்ளே நுழையும் பாக்டீரியாக்களும், அதன் வித்துக்களும் (spores) boutulism என்னும் நோயைக் கொடுக்கிறது.

இத்தொற்று ஏற்பட்டால், முகம், கண்கள், கழுத்து, வாய் போன்ற உறுப்புகளைக் கட்டுப்படுத்தும் தசைகளை இறுக்கமாகி, அவ்விடங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பூண்டு அல்லது இஞ்சி, பூண்டு விழுது ரெடிமேட் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படும் நிலையில், வீட்டு உபயோகத்திற்கும் பரவலாகப் பயன்படுத்தும் நிலையில், உணவகங்களில் அதிகளவு உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த விழுதில், தரமற்ற பூண்டுகளைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்லாமல், இந்த ரெடிமேட் பூண்டு விழுதில், சோடியம் மெட்டா பை சல்பேட், சிட்ரிக் அமிலம், சோடியம் பென்சோயேட் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுதான் பயன்பாட்டுக்கு வருகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Garlic paste

எனவே, எப்போதும், பூண்டை அளவாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், சரியான முறையில் பாதுகாத்துப் பயன்படுத்துவது, உடலுக்கு நன்மை அளிக்கும். பூண்டை மட்டுமல்ல, நம் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் எல்லாமே பாதுகாப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவுதான் நம் ஆரோக்கியத்தின் அடித்தளம் என்பதை உணர்ந்தாலே போதும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மீது நமக்கு அக்கறை தன்னால் வரும்.

logo
Kalki Online
kalkionline.com