ஸ்டைலு ஸ்டைலுதான்... ஆனால் அது தேவையா? அது வெறும் பகட்டுப் பொருளா?

Style
Style
Published on

ஸ்டைல் என்பது அனைவரின் வாழ்விலும் பின்னிப் பிணைந்த ஒரு விஷயம். முடி சீவுவதில் தொடங்கி நம் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும் எந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்தும்போதும்  நமக்கான உரிய பாணி அதாவது நம் ஸ்டைல் வெளிப்படுகிறது. அதை எப்போ, எப்படி உணர்வோம். என்பதைப்  பற்றி தெரிந்து கொள்வோம். 

ஸ்டைல் தான் நமக்கான அடையாளமா?

ஸ்டைல் என்பது தனிநபர்களின் ஆளுமை, விருப்பத்தேர்வுகள், மனநிலையை வெளிப்படுத்த அனுமதிக்கும் சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக செயல்படுகிறது. உணவு அல்லது தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவையாக இது  இல்லாவிட்டாலும், உலகிற்கு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள இந்த இந்த ஸ்டைல் தான் பெரும் அளவில் உதவுகிறது. இதன்மூலம் தனிநபர்கள் தங்குளுக்கான அடையாளங்களை உருவாக்கி, பிறரிடமிருந்து தனித்து நிற்க்கின்றனர். இந்த ஸ்டைல் பற்றிய விழிப்புணர்வு இளமைப் பருவத்தில் தான் அதிகமாக விருப்பப்படும் ஒன்றாக உள்ளது.

ஸ்டைலுக்கு வயது வரம்பு இருக்கா?

ஸ்டைலுக்கு வயது வரம்பு கிடையாது. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே எவ்வாறு ஸ்டைலாக்க நினைக்கிறார்களோ அதையே பின்பற்றலாம். ஆனால் பொதுவாக டீனேஜ் வயதில் தான் இதில் அதிக கவனம் செலுத்த தொடங்குவோம். அதன்மூலம் நமக்கு உண்டாகும் சமூக தொடர்புகளும், சுய பிரதிபலிப்பும் நமக்கான ஸ்டைலை வெளிக்கொண்டுவரும். வயதிற்கேற்ற தனிப்பட்ட ரசனை, வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரப் போக்குகளால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, தன்னை தானே ஸ்டைல் செய்து கொள்ளும் வழக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

இதையும் படியுங்கள்:
நாய்கள் ஏன் மனிதர்களின் செருப்பை கடிக்கிறது தெரியுமா?
Style

நீங்கள் ஸ்டைலாக இருப்பதாக நீங்களே உணர்ந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு நேர்மறையான மனநிலை மற்றும் மன அமைதிக்கு நீங்கள் பின்பற்றும் ஸ்டைல் பெரிதும் பங்களிக்கும். தனிநபர்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றி நன்றாக உணரும் போது, அது அவர்களின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும். இறுதியில் அதுவே ஒட்டுமொத்த வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் பின்பற்றும் ஸ்டைல் என்ற பாணி தான் அவர்களின் சமூகத் தொடர்புகளை மிகவும் வசதியாகவும் உறுதியுடனும் வழிநடத்த உதவுகிறது.

இதில் உள்ள நன்மை, தீமை என்னென்ன?

நன்மைகள் என பார்த்தால், ஒருவர் தனக்கான தனிப்பட்ட ஸ்டைல் பாணியை வளர்ப்பது தன்னம்பிக்கையை மேம்படுத்தலாம், பிறர் முன் நேர்மறையான தோற்றத்தை உருவாக்கலாம் மற்றும் தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறக்கலாம். இது ஒருவரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. தனித்துவ உணர்வை ஒவ்வொருவருக்குள்ளும் வளர்க்கிறது.

இதையும் படியுங்கள்:
குப்பையில் வீசி எறியும் பயன்படுத்திய டீ தூளில் இத்தனை நன்மைகளா?
Style

இதையே எதிர்மறையாக பார்த்தால், ஒருவர் தோற்றத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது, தனிப்பட்ட எதார்த்த வாழ்க்கையை மறந்து பொருட்களின் மேலுள்ள சிந்தனைக்கு அதிக கவனம் செலுத்த வழிவகுப்பது, தற்போதைய ஃபேஷன் காலத்திற்கேற்றவாறு இருக்க வேண்டும் அல்லது சமூகத்தில் எல்லாரும் என்ன எதிர்பார்க்கிறார்கள் அதற்கேற்றார் போல் செயல்படலாம் என்று நினைப்பு அதிகரிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். இவை அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம். சில நேரங்களில் வாழ்க்கையின் அர்த்தமுள்ள தருணங்களையும் உங்களால் உணர முடியாமல் போய்விடும். கூடுதலாக, மற்றவர்களுக்காக ஸ்டைலான ஆடை மற்றும் ஆபரணங்களில் முதலீடு செய்வது, நிதி ரீதியாகவும் பெரும் சுமையை உங்களுக்கு உருவாக்கலாம்.

எனவே, ஸ்டைல் என்பதை ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் தனிப்பட்ட தேர்வாக பார்க்க வேண்டும். சுய வெளிப்பாடு மற்றும் சமூக நடைமுறைக்கு இடையே உள்ள சமநிலையை புரிந்துகொள்வது  மூலம், ஒருவர் தான் பின்பற்றும் ஸ்டைலால் தனிப்பட்ட வாழ்க்கையில் நன்மையை மட்டும்தான் அனுபவிப்பார். அதனால் வரும் தீமையின் பிடியில் சிக்காமலும் இருப்பார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com