எண் 12க்கு இத்தனை சிறப்பா? அடேங்கப்பா!

number 12
Number 12
Published on

பன்னிரெண்டு என்பது மிகமிக உயர்வான எண். இந்த எண் பல்வேறு கலாச்சாரங்களில் முக்கிய எண்ணாகவும் குறியிடாகவும் கருதப்படுகிறது. அவைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  • ஒரு நாளை இரண்டாகப் பிரித்தால் பகல், இரவு என்று பிரிக்கலாம். இதிலே பகல் 12 மணி நேரம். இரவு 12 மணி நேரம்.

  • அதைப் போலவே ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள்.

  • வான மண்டலத்தை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளாகப் பிரித்து இருக்கிறார்கள்.

  • ஒருவருடைய ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு பாவம் என்பார்கள். இதில் 12-ம் பாவம் என்பது வாழ்வின் நிறைவைக் குறிப்பது. மோட்ச பாவம், விரய பாவம் என்பார்கள். பிறவிச்சுழல் தொடர்கிறதா, நிறைவடைகிறதா என்பதைத் தெரிவிக்கும் பாவம் இது.

  • 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விழா கும்பமேளா ஆகும். இது பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜயின் மற்றும் நாசிக் மாநிலங்களில் நடைபெறும். இந்த ஆண்டு மகா கும்பமேளா நடைபெற்றது.

  • கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடைபெறும்.

  • கோவில்களில் கோபுரங்களுக்கு குடமுழக்கு விழா (கும்பாபிஷேகம்) 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

  • பன்னிரண்டு முக ருத்ராட்சம் என்பது துவாதச ஆதித்த ஸ்வரூபம் ஆகும். இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளி தரும். பன்னிரெண்டாம் எண் குரு பகவானின் ஆதிக்கம் கொண்டதால், ஆற்றலும், செல்வ வளமும் தந்திடும். இதை அணிவதால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.இயேசுபிரானிடம் 12 அப்போஸ்தலர்கள் இருந்தனர். யூத மதத்தில் இஸ்ரேலின் 12 கோத்திரங்கள் உள்ளன.

  • இஸ்லாமிய மதம் 12 இமாம்களை கொண்டுள்ளன.

  • மேற்கிந்திய இசையில் 12 ஸ்வரங்கள் உள்ளன.

  • சீன மதத்தில் 12 விலங்கு ராசிகள் உள்ளன.

  • ஒரு அடியில் 12 inches இருக்கின்றன.

  • ஒரு டசனின் எண்ணிக்கை 12 ஆகும்.

  • நீலகிரியில் நீலகுறிஞ்சி மலர் 12 வருடத்திற்கு ஒருமுறை தான் பூக்கும்.

  • திருமாலைப் போற்றி பாடிய ஆழ்வார்களின் எண்ணிக்கை 12.

இதையும் படியுங்கள்:
ஆன்மா புனிதமானது என்பதை தீர்மானிப்பவை எவை என்பது தெரியுமா?
number 12
  • வைணவர்கள் திருமாலின் 12 திரு நாமத்தை சொல்லி 12 இடங்களில் நாமத்தை இட்டுக் கொள்வார்கள். அவை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா மற்றும் தாமோதரா ஆகும்.

  • இறந்தவர்களுக்கு 12ம் நாளில் தான் திதி செய்வோம்.

  • பள்ளிக்கூடத்தின் கடைசி வருட படிப்பு 12ஆம் வகுப்பாகும்.

  • கடிகாரத்தின் அலகு எண் 12 வரை இருக்கும். அதுமட்டுமில்லாமல் பன்னிரெண்டில் வரும் போது தான் இரண்டு முட்களும் ஒன்றாக சேர்ந்திருக்கும்.

  • நம் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு 12 கரங்கள் உள்ளன.

  • ஜூபிடர் கோள் சூரியனைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகும்.

  • தமிழில் மொத்தம் 12 உயிரெழுத்துக்கள் உள்ளன.

    சிறப்பான இந்த 12 எண்ணிலேயே நாமும் நல்ல காரியங்களை செய்து நன்மையை பயக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தோசைக் கல்லில் அடிக்கடி தோசை ஒட்டிக் கொள்கிறதா? இதோ நச்சுன்னு சில டிப்ஸ்! 
number 12

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com