குழம்புல காரம் ஓவரா? இந்த 7 மேஜிக் பொருளைப் போடுங்க, எல்லாம் சரியாயிடும்!

Cooking Tips
Cooking Tips
Published on

கிச்சன்ல புதுசா ஏதாவது சமைச்சுப் பார்க்குறதுனா உங்களுக்குப் பிடிக்குமா? அப்படி செய்யும்போது சில சமயம் சின்னச் சின்ன தவறுகள் நடப்பது சகஜம்தான். குறிப்பா, தெரியாம மிளகாய்ப் பொடியை கொஞ்சம் அதிகமா போட்டுட்டா, அவ்வளவுதான். 

வீட்ல எல்லாரும் "அப்பாடா, என்ன காரம்!"னு சொல்லுவாங்க. இனிமே அந்த கவலையே வேணாம். குழம்புல காரம் அதிகமாயிட்டா, அதை எப்படி சுலபமா சரி பண்றதுன்னு சில சூப்பர் டிப்ஸ் இருக்கு. 

காரத்தைக் குறைக்கும் சூப்பர் ஹீரோக்கள்!

1. தக்காளி: எந்தக் குழம்பா இருந்தாலும் சரி, காரம் அதிகமாயிட்டா நீங்க கண்ணை மூடிட்டு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்னா அது தக்காளிதான். ஒண்ணு அல்லது ரெண்டு தக்காளியை நல்லா அரைச்சு, குழம்புல சேர்த்து ஒரு கொதி விட்டா போதும். காரம் குறைஞ்சு, குழம்போட சுவையும் சூப்பரா ஆகிடும்.

2. உருளைக்கிழங்கு: இது ஒரு கிளாசிக் ஐடியா! சாம்பார், கறிக்குழம்பு மாதிரி குழம்புகள்ல காரம் அதிகமாயிட்டா, ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, தோலைச் சீவிட்டு, சின்ன சின்ன துண்டுகளா வெட்டி குழம்புல போடுங்க. உருளைக்கிழங்கு ஒரு ஸ்பாஞ்ச் மாதிரி, அதிகப்படியான காரத்தை உறிஞ்சிக்கிட்டு, குழம்பையும் கொஞ்சம் திக்காக்கிடும்.

3. தயிர்: காரக்குழம்பு, வத்தக்குழம்பு மாதிரி குழம்புகள்ல காரம் கூடிடுச்சா? ஒரு ரெண்டு ஸ்பூன் கெட்டித் தயிரை எடுத்து நல்லா கடைஞ்சு, குழம்புல சேர்த்துக் கலக்குங்க. காரம் உடனே குறைஞ்சிடும். பனீர் கிரேவி மாதிரி டிஷ்களுக்கு தயிருக்கு பதிலா ஃப்ரெஷ் க்ரீம் கூட சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
பச்சைத் தக்காளிக்காய் சட்னி மற்றும் குழம்பு! வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம்!
Cooking Tips

4. எலுமிச்சை சாறு: காரமான குழம்புல, காரத்தைக் குறைக்க இன்னும் கொஞ்சம் புளியைக் கரைச்சு ஊத்தக் கூடாது. அப்படி செஞ்சா, குழம்போட மொத்த சுவையும் மாறி, ஒரு மாதிரி பச்சை வாசனை அடிக்கும். அதுக்கு பதிலா, கடைசியா குழம்பை இறக்கும்போது, கொஞ்சமா எலுமிச்சை சாறு பிழிஞ்சு விட்டா, காரம் பேலன்ஸ் ஆகிடும்.

5. சர்க்கரை (அ) வெல்லம்: ரசம் மாதிரி ஐட்டங்கள்ல மிளகு, மிளகாய் எல்லாம் சேர்த்து காரம் அதிகமாகிடுச்சா? கவலையே வேணாம். அதுல ஒரு சின்ன துண்டு வெல்லம் அல்லது ஒரு அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்து பாருங்க. காரம் மாயமா மறைஞ்சிடும்.

6. பால்: பிரியாணி, நெய் சோறு மாதிரி சாத வகைகள்ல காரம் அதிகமாயிட்டா என்ன பண்றது? காய்ச்சி ஆற வச்ச பாலை எடுத்து, சாதத்துக்கு மேல லேசா தெளிச்சு விடுங்க. காரம் குறைஞ்சு, சுவையும் இன்னும் அருமையா இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுடச்சுட 'சாதம் குழம்பு' - கொங்கு மக்களின் பிரியமான பருப்பு சாதம்!
Cooking Tips

7. தண்ணீர்: குழம்பு ரொம்ப திக்கா இருக்கு, காரமும் அதிகமா இருக்குன்னு நினைச்சா மட்டும், தேவைப்பட்டா கொஞ்சம் வெந்நீர் சேர்த்துக்கலாம். மத்தபடி, மேலே சொன்ன டிப்ஸ்களை யூஸ் பண்றதே பெஸ்ட். ஏன்னா, அதிகமா தண்ணி ஊத்தினா குழம்போட சுவை குறைஞ்சிடும்.

இனிமே குழம்புல காரம் கூடிடுச்சுன்னு பயப்படாம, இந்த டிப்ஸை பயன்படுத்தி சரி பண்ணிடுங்க. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com