Vehicles unwanted noise
Vehicles unwanted noise

உங்கள் வாகனங்களில் தேவையற்ற சத்தமா? கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்…

Published on

புதிய வாகனங்களுக்கும், அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் இடையே அதிகம் வேறுபாடுகள் இருக்கும். முதலில் நாம் உணர்வது பழைய வாகனங்களில் எழும் தேவையற்ற சத்தங்களே. அந்தச் சத்தத்தோடு நாம் வாகனத்தை இயக்கலாம். அடுத்தடுத்த நாட்கள் அதே சத்தம் தொடர்ந்தால்? வாகனங்களில் வரும் என்ஜின் ஒலி முதல் டயர் சுற்றும் ஒலி வரை என்று பல சந்தர்ப்பங்கள் மூலம் நம்முடன் வாகனங்கள் தொடர்புகொள்கின்றன.

சில நேரங்களில் அந்த ஒலியில் மாற்றங்களை உணர்ந்தும் அதைப் புறக்கணிப்பதும் பல கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சில சத்தங்கள் தீங்கற்றதாகத் தோன்றினாலும்; அவை பெரும்பாலும் ஒரு பிரச்னையின் தொடக்கத்தைத்தான் குறிக்கின்றன. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது எதிர்பாராத நேரங்களில் நிகழும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்க உதவும்.

சிக்கலைக் குறிக்கும் பொதுவான சத்தங்கள்:

  • மிகவும் கவனிக்கப்படாத முக்கியமான ஒலிகளில் ஒன்று பிரேக் சத்தம் (Brake sound). இது பெரும்பாலும் தேய்ந்துபோன பிரேக் பேட்களைக் குறிக்கிறது. வாகனம் நிறுத்தும் திறனைப் படிப்படியாக குறைக்கும். பின்னாளில் மோதல்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
எதிர்மறை ஆளுமைப் பண்புகளின் தாக்கத்தை எப்படித்தான் கையாள்வது?
Vehicles unwanted noise
  • காரை ஒரு பக்கம் திருப்பும்போது ஒரு கிளிக் சத்தம் (clicking noise) எழும்; இது CV joints செயலிழப்பதைக் குறிக்கிறது. அபாயகரமான நேரங்களில் காரின் கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கும்.

  • மற்றொரு ஆபத்தான ஒலி கார் குறைந்த வேகத்தில் செல்லும்போதும் சில தேவையற்ற சத்தங்களை உணர்வது. அது சில நேரங்களில் கார் சக்கரத்தில் உள்ள தளர்வான நட்டுகளாலும் (loose lug nuts) ஏற்படக்கூடும். இது அடுத்தக்கட்டத்தில் சக்கரம் கழண்டுப் போவதற்கும் வழிவகுக்கும்.

  • பைக்குகளைப் பொறுத்தவரை சைலன்ஸரில் (Silencer) வரும் ஒரு வித வெடிக்கும் சத்தங்கள்(Popping sounds) பைக்கின் எரிபொருள் அமைப்பு சிக்கல்களை(fuel system issues) குறிக்கலாம். இது செயல்திறன், ஓட்டுனர் பாதுகாப்பைப் பாதிக்கும்.

  • இன்ஜினில் எழும் அரைக்கும் சத்தம்(Grinding noise) என்ஜின் உள் சேதத்தைக் குறிக்கிறது. இது நம்மால் புறக்கணிக்கப்பட்டால் வாகனம் ஓடுகின்றபோது திடீர் செயலிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

  • சலசலக்கும் சத்தங்கள்(Buzzing sounds) பெரும்பாலும் மின் செயலிழப்புகளைக் குறிக்கின்றன. இது எதிர்பாராத மின் இழப்புக்கு (Horn sound or sensors) வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவை பழி வாங்க சீனா கையில் எடுக்கும் நீர் ஆயுதம்!
Vehicles unwanted noise

இந்த சிறிய சிக்கல்கள் அவசரச் சூழ்நிலைகளில் நம்மை கைவிட்டுவிடுமா?

ஒரு வாகனத்தின் நல்ல நிலை மிக முக்கியமானது. திடீரென அதிக அழுத்தத்துடன் பிரேக் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேய்ந்துபோன பிரேக் பேடுகள் என்ன செய்யும் என்று யோசித்துப் பாருங்கள். முன்னால் ஆபத்து இருக்கிறது என்று திடீரென நீங்கள் காரைத் திருப்ப முயற்சிக்கும்போது, காரின் CV joints இணைப்புகள் பழுதடைந்து இருந்தால், கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். இப்படிப்பட்ட சிறிய பிரச்னைகளும் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளாக மாறக்கூடும்.

தடுப்பு நடவடிக்கைகள்:

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு வழக்கமான பராமரிப்பு, ஆரம்பகால சரிபார்ப்பு முக்கியம். உங்கள் வாகனத்தில் வரும் சத்தங்களை உணருங்கள். ஏதேனும் அசாதாரண ஒலிகளை உணர்ந்தால் உடனடியாக அது என்ன என்று கண்டுபிடியுங்கள். அது காராக இருந்தாலும் சரி, பைக்காக இருந்தாலும் சரி... அனைத்திலும் தேய்மானம் இருக்கும். அதை பற்றி விழிப்புடன் இருந்து பழுதுகளை நீக்கிவிட்டாலே போதும்... நமது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com