
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள். அப்படி அதிகமாக கவனம் செலுத்தும் போது பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தால் குழந்தைகள் தான்.
பெற்றோர்கள் கண்டிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டதான் வேண்டும். ஆனால், அதுவே நஞ்சாக மாறி விடக் கூடாது இல்லையா?
சில பெற்றோர்கள் குழந்தைகளை ரொம்ப நல்ல பராமரிக்கிறோம் என்று நினைத்து கொண்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் கெடுவதற்கு அவர்களே காரணமாகி விடுகிறார்கள்.
குழந்தை சிறிது ஒல்லியாக இருந்தால் போதும், யார் என்ன சொன்னாலும் அதை வாங்கி திணிப்பார்கள். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக இதை வாங்கி கொடு, அதை வாங்கி கொடு என்று சொல்லும் அனைத்தையும் வாங்கி கொடுப்பார்கள்.
கண்ணில் கண்டதையும், காதால் கேட்டதையும் மாறி மாறி வாங்கி கொடுப்பார்கள். ஆனால், குழந்தையோ அப்படியே இருக்கும். எது கொடுத்தாலும் சிறிது நாள் கழித்து தானே வேலை செய்யும். இதை அறியாமல் இவர்கள் மேலும் மேலும் வாங்கி கொடுத்து கொண்டே இருப்பார்கள். விளைவு ஒரு சில வருடத்திற்கு பிறகு குழந்தை பின்விளைவுகளின் காரணமாக மிகவும் குண்டாகி விடும். பிறகு இவர்கள் மறுபடியும் ஒல்லியாவதற்கு உரிய முறையை கையாளுவார்கள்.
ஒரு நாளைக்கு பல முறை சாப்பாட்டை திணித்து பசியை உண்டு பண்ணி விட்டு இப்போது பசித்தாலும் சாப்பாடே கொடுக்காமல் diet என்ற முறையை கையாளுவர்கள்.
ஒருபக்கம் இந்த மாதிரி கதை என்றால் இன்னொரு பக்கம் சில பெற்றோர்கள் குண்டாக இருக்கும் குழந்தையை பலதரப் பட்ட நபர்களின் பேச்சை கேட்டி கொண்டு குழந்தையை ஒல்லியாக்கி விடுவார்கள். பிறகு மறுபடியும் அச்சச்சோ...குழந்தை இத்தனை ஒல்லியாட்டாளே/னே என்று யாராவது சொல்ல ஆரம்பித்தால் மறுபடியும் processing reverseல் போகும். ஆக மொத்தத்தில் மனதளவிலும் உடல் ரீதியாகவும் கிண்டலான வார்த்தைகளாலும் பாதிக்கப் படுகிறவர்கள் குழந்தைகள் தான்.
இதைப் போல அதிகமாக சிந்திக்கும் மற்றும் பராமரிக்கும் பெற்றோர்களுக்கு சில வேண்டுகோள்கள்:
1. உங்கள் குழந்தை ஒல்லியாக இருந்தால் பரவாயில்லை. ஆரோக்கியமாக இருந்தால் போதுமே! எல்லோரிடமும் ஆலோசனை கேட்டு பின்பற்றாதீர்கள்.
2. உங்கள் குழந்தை குண்டாக இருந்தால் மற்றவர்களின் ஆலோசனைக் கேட்டு சாப்பாட்டை குறைக்காதீர்கள். தேவையான மற்றும் அவசியமான உணவை கொடுங்கள். மேலும் அவர்களை ஊக்கபடுத்தி வீட்டை கூட்டுவது, துடைப்பது போன்ற உடற்பயிற்சி வேலைகளை செய்ய சொல்லுங்கள். முடிந்த வரை நடந்து செல்லும் பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள்.
3. பெற்றோர்களே குழந்தைகள் குண்டாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுங்கள். ஒல்லியாக இருந்தாலும் BMI மற்றும் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஏன் வீணாக கவலைப் பட வேண்டும். குண்டாக இருந்தால் மருத்துவர் கூறும் அறிவுரையை பின்பற்றினாலே போதும். மிகவும் underweight ல் இருந்தால் மருத்துவரின் அறிவுரைப் படி supplimetsஐ கொடுங்கள். அதிகமாக கொடுத்தால் பின்விளைவு அதிகமாக இருக்கும்.
அன்பார்ந்த பெற்றோர்களே, இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். ஊர் வாயை நம்மால் மூட இயலாது. நீங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற பாசத்தை வைத்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமே இல்லை.
ஆகவே, தயவு செய்து குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் சரி குண்டாக இருந்தாலும் சரி, மனதை போட்டு அலட்டி கொள்ளாமல் சீரான ஒரே வழியை கையாளுங்கள். பலதரப்பட்ட சோதனையை முயற்சி செய்யாதீர்கள். ஒரே வழியை கையாண்டால் நாளடைவில் பலன் நிச்சயமாக அதுவும் ஆரோக்கியமான முறையில் கிடைக்கும்.