புத்திசாலி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம். ஏன் தெரியுமா?
அறிவாளியாக பெண்களுக்கும் தங்களின் மதிப்பு என்ன என்பது தெரியும். தன்னைப்போல் புத்திசாலியாக இருக்க வேண்டுமென்றும், உணர்ச்சி ரீதியாக தங்களைப்போல் அறிவாளியாக இருக்கவேண்டும் என்றும், தன்னைப் போன்று பெரிய இலக்கு இருக்கவேண்டும் என்று தங்களுக்கு வரக்கூடிய கணவர் பற்றிய எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருக்கும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் அப்படி இருப்பதில்லை இதனால் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்.
தைரியமான, துணிச்சலான, புத்திசாலியான பெண்களைப் பார்க்கும்போது சில ஆண்களுக்கும் பயம் ஏற்பட்டுவிடுகிறது. தன்னை விட உயர்ந்த வளாகவோ, தன்னைவிட அவள் மேலாக வளர்ந்து விடுவாளோ என்ற பயத்தினால் ஆண்களுக்கு இந்தமாதிரி பெண்களை தவிர்த்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அறிவாளியான பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நல்ல முதிர்ச்சியான உறவுதான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் அறிவை விட அழகுதான் தேவைப்படுகிறது. ஒரு புத்திசாலியான பெண்ணைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு நிறைய நேரம் எடுக்கும். இதற்கு பெரும்பாலான ஆண்களுக்கும் பொறுமை இருப்பதில்லை. இதனால் நல்ல அறிவு உள்ள பெண்களை அவர்கள் அணுகுவதில்லை.
புத்திசாலிப் பெண்கள் காதலில் விழுவதற்கு முன் தன்னுடைய காரியரை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார். இதனால் அவர்கள் தங்கள் வேலையில் வளர்கின்றார்களே தவிர, காதல் வாழ்க்கையில் பெரிதாக ஈடுபடுவதில்லை.
தவறான ஆட்களை செலக்ட் செய்து விரும்பத்தகாத ரிலேஷன்ஷிப்பில் சிக்குவதைவிட தனியாகவே இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் யாருடன் காதல் கொள்கிறோம் என்பதில் மிகத்தெளிவாக உள்ளார்கள்.
ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் எந்த மாதிரியாக பொய் சொல்வார்கள், எந்த மாதிரியாக நடிப்பார்கள் என்பதை இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இப்படி இவர்களை எளிதாக ஏமாற்றமுடியாததால் காதல் அமைவது கடினமாகும்.
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் என்றால் சமைக்க வேண்டும்,வீட்டு வேலை செய்ய வேண்டும், கணவனுக்குக் கீழ்படிதல் வேண்டும் என்ற கலாசார எதிர்பார்ப்புகள் உள்ளன.
ஆனால் புத்திசாலிப் பெண்கள் தங்களுக்கு சம உரிமை மற்றும் சுயமரியாதையை எதிர்பார்க்கிறார்கள். இது பெரும்பாலான ஆண்களுக்கும் புரியாததால் புத்திசாலிப் பெண்களுக்கு ஏற்ற ஆண்மகன் கண்டுபிடிக்க கடினமாக இருக்கிறது.