வீட்டில் அதிகமாக எண்ணெய் பயன்படுத்தி சமைக்கப்படும் தோசைக்கல் மற்றும் கடாயின் ஓரங்களில் நாள்பட்ட எண்ணெய் கறை தேங்கி பிசுபிசுப்பாக இருப்பதைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருக்கும். அத்தகைய நாள்பட்ட எண்ணெய் கறைகளை வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே புதியதை போல சுத்தம் செய்யும் எளிய வழிமுறை குறித்து இப்பதிவில் காண்போம்.
உங்கள் வீட்டில் இது போன்ற தோசைக்கல் மற்றும் கடாய் இல்லையென்றால், உடனே வாங்க...
தேவையான பொருட்கள்: ஷாம்பு பாக்கெட் - 1, டூத் பேஸ்ட் - 2 ஸ்பூன் அளவு, பேக்கிங் சோடா - 2 ஸ்பூன் அளவு, தண்ணீர் - தேவையான அளவு, ஸ்டீல் ஸ்கிரப் – 1.
சுத்தம் செய்யும் முறை: முதலில் எண்ணெய் பிசுக்கு அதிகமுள்ள தோசைக்கல் அல்லது கடாயை அடுப்பில் வைத்து ஆவி பறக்கும் அளவுக்கு நன்கு சூடுபடுத்த வேண்டும். பிறகு எண்ணெய் பிசுக்கு பாத்திரம் நன்கு சூடு ஏறியதும் அதில் சிறிய ஷாம்பு பாக்கெட்டை பிரித்து பரவலாக ஊற்ற வேண்டும். அதன் பிறகு பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட் அடுத்தடுத்து சேர்க்க வேண்டும். இப்போது அரை டம்ளர் தண்ணீரை அதில் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றிய உடன் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் முழுவதும் பொங்கி வரும்.
இப்போது ஸ்க்ரப்பர் வைத்து சூடான பாத்திரத்தை நன்கு தேய்க்க வேண்டும். பாத்திரம் சூடாக இருக்கும் என்பதால் ஸ்கிரப்பரை நேரடியாக தேய்க்க முடியாது. அதற்கு ஃபோர்க் ஸ்பூனை எடுத்துக்கொண்டு அதில் ஸ்டீல் ஸ்க்ரப்பரை குத்திக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரம் முழுவதையும் நன்கு தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்க்கும்போது பாத்திரத்தில் படிந்துள்ள பிசுபிசுப்பான கறைகள் முழுவதும் நீங்க ஆரம்பிக்கும்.
வருடக்கணக்காக படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்குகள் ஒருமுறை தேய்த்தால் போகாது என்பதால் திரும்பத் திரும்ப இதே முறைப்படி செய்யும்போது எவ்வளவு மோசமான கறையாக இருந்தாலும் சுத்தமாகி பாத்திரம் பளிச்சிடும்.
புதியது போல மாறிய தோசைக்கல் மற்றும் கடாயை வருடக்கணக்காக சுத்தம் செய்யாமல் இருப்பதை விடுத்து, மாதத்திற்கு ஒருமுறை மேற்கூறியது போல் டீப் கிளீன் செய்யும்பொழுது எப்பொழுதுமே புதியது போல பளிச்சென காட்சி தரும்.
உங்கள் வீட்டில் இது போன்ற தோசைக்கல் மற்றும் கடாய் இல்லையென்றால், உடனே வாங்க...