ஜப்பானியர் வீடுகள் எப்போதுமே பளபளக்க இந்த 8 ரகசியப் பழக்கங்கள்தான் காரணமா?

Genkan முதல் Danshari வரை உங்கள் வீட்டைத் தினமும் சுத்தமாக வைத்திருக்க உதவும் எளிய வழிமுறைகள்.
ஜப்பானிய பழக்கங்கள்
ஜப்பானிய பழக்கங்கள்Gemini image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

ஜப்பானிய வீடுகள் மிக சுத்தமாக இருப்பதற்குக் காரணம் குழந்தைகளாக இருக்கும்போதே மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் தான். மேலும் சுத்தத்திற்குப் பெயர் பெற்றவர்கள் ஜப்பானியர்கள். அவர்களின் என்னென்ன 8 பழக்கங்கள் சுத்தத்திற்கு உதவுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.

1. காலணிகள் வாசலிலேயே இருக்கட்டும்

ஒவ்வெரு ஜப்பானிய வீட்டிலும் ஜென்கான் என்ற சிறிய நுழைவாயில்படி இருக்கும்‌ உள்ளே நுழைவதற்கு முன் காலணிகளை அதில் கழற்றி வைப்பார்கள். வெளியே தரையில் அழுக்கு அடைவதே இல்லை. இந்தியாவில் நுழைவாயிலில் ஒரு சாதாரண பாயும், காலணிவைக்கும் அலமாரியும் இந்த வேலையைச் செய்துவிடும்.

2. கழிப்பறைக்கு தனி செருப்புகள்

பல வீடுகளில் குளியலறைக்கு மட்டுமே ஒரு ஜோடி செருப்பு வைக்கப்படும்‌ வேறு எங்கும் அதை அணிவதில்லை. இது வீடு முழுவதும் கிருமிகள் பரவுவதை தடுப்பதாகும்‌. உங்கள் குடும்பத்தினர் வெறுங்காலுடன் நடமாடும்வராக இருந்தால் இதை முயற்சிப்பது நல்லது.

3. ஓசோஜி ஆண்டு இறுதி மாபெறும் தூய்மைப்பணி

புத்தாண்டுக்கு முன்பு ஜன்னல்கள், அலமாரிகள் மற்றும் யாரும் கவனிக்காத இடங்கள் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. இது வீட்டைப் புதுப்பிப்பது புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகிறது.

4. வேறு வேலை செய்துகொண்டே சுத்தம் செய்தல்

தேனீர் மேடையில் சிந்தும் போது மேடையைத் துடைப்பது, பல் துலக்கியவுடன் கழிவுகள் தொட்டியை உலர்த்துவது இந்த சிறிய வேலைகள் ஒரு நிமிடம்தான் எடுத்துக் கொள்ளும்.‌ மேலும் இவை அழுக்கு சேர்ந்து வார இறுதியில் ஒரு பெரிய வேலையாக மாறுவதைத் தடுக்கிறது. அவ்வப்போது சுத்தம் செய்வதால் நம் சுமை குறைக்கப்படுகிறது.

5. குறைவாக சுத்தம் செய்தால் குறைவான பொருட்கள் கிடைக்கும்

தன்ஷாரி என்பது நீங்கள் பயன்படுத்தாத பொருட்களை விட்டு விடுவது. மேலும் உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே வாங்குவதால் குறைந்த பொருட்கள் இருக்கும் போது சுத்தம் செய்வதும் எளிதாகிவிடும்‌. கனஅலமாரிகளில் மேடைகளில் குறைவாக பொருட்கள் இருந்தால் தூசி தட்ட வேண்டியதும் குறைவாக இருக்கும்‌. இதனால் உங்கள் சிரமம் குறையும்.

இதையும் படியுங்கள்:
அடுப்பு பக்கத்துல இந்த அழுக்கு இருக்கா? பூச்சி தொல்லை முதல் தீ அபாயம் வரை எச்சரிக்கை!
ஜப்பானிய பழக்கங்கள்

6. தினமும் வீட்டைக் காற்றோட்டமாக்குதல்

கெட்ட காற்றை வெளியேற்ற குளிர்காலத்தில் கூட ஜன்னல்கள் திறக்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள் அடிக்கடி வெயிலில் காயவைக்கப்படுகின்றன. இதன் மூலம் பருவ மழைகாலத்தில் ஏற்படும் ஈர வாடை நீக்குகிறது. மேலும் ஈரவாடையால் ஏற்படும் பூஞ்சைகளையும் இது நீக்குகிறது.

ஜப்பானிய பழக்கங்கள்
ஜப்பானிய பழக்கங்கள்Gemini image

7. எளிய மென்மையான சுத்திகரிப்பான்கள்

கடுமையான பொருட்கள் நிறைந்த அலமாரிகளுக்குப் பதிலாக சமையல் சோடா, வினீகர் மற்றும் சாதாரண வெந்நீர் இவற்றையே நம்ப வேண்டும்.‌ சிலர் தரை விரிப்புகளில் பயன்படுத்திய தேயிலையை தன் தூவுகிறார்கள்.‌ இது மலிவானது. எளிதானது.

இதையும் படியுங்கள்:
வீட்ல ஊதுபத்தி ஏத்துற பழக்கம் இருக்கா? அப்போ இத மொதல்ல படிங்க!
ஜப்பானிய பழக்கங்கள்

8. குழந்தைகள் தங்கள் இடத்தை சுத்தம் செய்கிறார்கள்.

ஜப்பானியப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் வகுப்பை தாங்களே பெருக்கித் துடைப்பார்கள்.‌ அது வீட்டிலும் தொடர்கிறது.‌ உங்கள் பிள்ளைகள் தாங்கள் படிக்கும் மேசையை தாங்களே ஒழுங்குபடுத்தி காலணிகளை அந்தந்த இடத்தில் கழட்டி வைத்தால் சுத்தம் செய்வது போராட்டமாக இல்லாமல் இயல்பான ஒன்றாக மாறிவிடும். இப்படி சுத்தம் செய்வதில் மேற்கூறிய எட்டு ஜப்பானிய வழக்கங்களை மேற்கொள்வதால் உங்கள் வீடு தூய்மையாகி நல்ல ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

உங்கள் வீட்டை வார இறுதியில் மட்டும் பெரிய வேலையாகச் செய்யாமல், தினமும் சிரமமின்றி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் ஜப்பானிய பழக்கங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com