"கல்யாணம் ஒரு தலைவலியா? சீனப் பெண்கள் மாதிரி ஒரு 'கென்ஸ்' புக் பண்ணுங்க, ஜாலியா இருங்க!"

kens
kens
Published on

"நல்லா படி, ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடு" - இதுதானே நம்ம ஊர்ல தலைமுறை தலைமுறையா பெண் பிள்ளைகளுக்குச் சொல்ற அட்வைஸ். குடும்பம், கணவர், குழந்தைகள்... இதுதான் ஒரு பெண்ணோட முழுமையான வாழ்க்கைன்னு நாம நம்பறோம். 

ஆனா, நம்ம பக்கத்து நாடான சீனாவுல, இப்போ ஒரு புது டிரெண்ட் புயலைக் கிளப்பிட்டு இருக்கு. அங்க இருக்கிற சில பெண்கள், "ஐயோ, எங்களுக்குக் கணவரே வேண்டாம், ஆனா ஒரு 'கென்ஸ்' (Kens) மட்டும் இருந்தா போதும்"னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. யாருப்பா இந்த 'கென்ஸ்'? எதுக்கு இப்போ இவங்க இவ்வளவு வைரல் ஆகிட்டிருக்காங்க? வாங்க, தெரிஞ்சுக்கலாம். 

யார் இந்த 'கென்ஸ்'?

இந்த 'கென்ஸ்' அப்படிங்கறவர் யாருன்னா, அவர் ஒரு கணவரும் இல்லை, காதலனும் இல்லை. சட்டப்படி அவர் ஒரு புரொபஷனல் உதவியாளர். இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, ஒரு 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. காலையில் எழுந்து காபி போடுவது, சமைக்கிறது, பாத்திரம் கழுவுறது, வீட்டைச் சுத்தம் பண்றது, துணி துவைக்கிறதுன்னு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வாராம். 

இது மட்டும் இல்லை, "எனக்கு போர் அடிக்குது, ஷாப்பிங் போகணும்"னா, கூடவே கை நிறைய பைகளுடன் வருவாராம். ஆபீஸ்ல இன்னைக்கு ஒரே டென்ஷன், மனசு சரியில்லை, யார்கிட்டயாவது பேசி ஆறுதல் தேடணுமா? அதற்கும் இவர் ரெடி. உட்கார்ந்து ஆறுதலா நாலு வார்த்தை பேசுவாராம். அதாவது, ஒரு துணைகிட்ட இருந்து எதிர்பார்க்கிற எல்லா விதமான உதவிகளையும், உணர்வுப்பூர்வமான ஆதரவையும் இவர் கொடுப்பார். ஆனா, இது எல்லாமே ஒரு வேலை.

இதையும் படியுங்கள்:
இது புதுசு! No Sugar Diet : விரைவான எடை இழப்புக்கு ஒரு தொடக்க வழிகாட்டி!
kens

கல்யாணத்தை விட இது ஏன் பெஸ்ட் என்கிறார்கள்?

"அட, இதுக்கு கல்யாணமே பண்ணிட்டுப் போயிடலாமே, எதுக்கு இப்படி ஒரு ஆளை வேலைக்கு வைக்கணும்?"னு நமக்குத் தோணும். ஆனா, சீனப் பெண்கள் யோசிக்கிற விதமே வேற. அவங்களுக்கு முக்கியம் அவங்களோட சுதந்திரமும், மன நிம்மதியும். ஒரு கல்யாணம்னு ஆகிடுச்சுன்னா, அங்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், வாக்குவாதங்கள், சண்டைகள், சமாதானங்கள், மாமியார்-நாத்தனார் பஞ்சாயத்துன்னு ஆயிரம் இருக்கும். 

"நான் ஏன் என் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து, ஒருத்தர் கூட சண்டை போட்டுக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கணும்?"னு அவங்க நினைக்கிறாங்க. இப்போ பல பெண்கள் நல்லா படிச்சு, கை நிறைய சம்பாதிக்கிறாங்க. அவங்க தனியா வாழ விரும்புறாங்க. இந்த 'கென்ஸ்' சிஸ்டம்ல, அவங்கதான் பாஸ். காசு கொடுக்குறாங்க, வேலை நடக்குது. எந்த விதமான வாக்குவாதமும் கிடையாது. "இதைச் செய்" என்றால், உடனே பதில் கேள்வி இல்லாமல் நடக்குதாம். இதனால் மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு ஃபீல் பண்றாங்க.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்! இந்த வருடம் இது புதுசு... கார்ட்டூன் கம்பி மத்தாப்பு!
kens

இது ஒரு புது பிசினஸ்!

இது ஏதோ ஒன்னு ரெண்டு பேர் செய்ற விஷயம் இல்லை. சீனாவில் இது ஒரு பெரிய சேவைத் தொழிலாவே வளர்ந்து வருதாம். இளம், பார்க்க அழகாக இருக்கும் ஆண்களை இந்த 'கென்ஸ்' பணிக்கு அமர்த்துறாங்க. எப்போது கூப்பிட்டாலும் சேவைக்குத் தயாராக இருக்கணுமாம். இந்த விஷயம் எப்படி உலகத்துக்கே தெரிஞ்சதுன்னா, ஒரு டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர் இதைப்பற்றி ஒரு வீடியோ போட, அது பயங்கர வைரல் ஆகிடுச்சு. 

உலகெங்கிலும் உள்ள மக்கள் இதைப்பத்தி ஆச்சரியமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது சும்மா ஒரு வேடிக்கையான வீடியோவா மட்டும் பார்க்க முடியலை. இன்றைய தலைமுறைப் பெண்களின் மனநிலை எப்படி இருக்கு, சமூகம் எவ்வளவு வேகமா மாறிக்கிட்டு இருக்கு என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணமா இருக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com