பொங்கல் பண்டிகை வந்து விட்டது. அனைவரது வீடுகளிலும் சுத்தம் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கும். அதற்குக் கொஞ்சம் மெனக்கெட்டால், அடுத்த முறை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். அதற்கான சில எளிய ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
எப்படி சுத்தம் செய்வது? என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு அதற்கு தேவையான பொருட்களை வாங்க...
1. சமையலறையில் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாட்டில்கள் அல்லது oil dispenser வைக்கும் இடம் எப்போதும் எண்ணெய் படிந்து காணப்படும். இதைத் தவிர்க்க, ஒரு பழைய டிபன் பாக்ஸ் டப்பாவில் ஒரு news paper அல்லது சிறு துணியை வைத்து, அதன் மேல் oil dispenserஐ வைத்தால் போதும். படியும் எண்ணெயை அந்த துணி இழுத்துக் கொள்ளும். அவ்வப்போது மாற்றினால் மட்டும போதும்; பிசுபிசுப்பு தன்மை இருக்காது.
2. பூஜை அறையில் ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வைக்கும்போது, அதன் சாம்பல் கீழே விழுந்து இருப்பதால் சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். அதற்கு ஒரு தட்டில் ஊதுபத்தி standஐ வைத்து, சாம்பல் தட்டிலேயே விழுமாறு செய்தால், தினசரி தட்டை எடுத்து சுத்தம் செய்து கொள்ளலாம்.
3. பூஜை அறையில் விளக்கு ஏற்றப் பயன்படுத்தும் தீக்குச்சி மற்றும் ஊதுபத்தி எரிந்த பின் உள்ள குச்சிகளை, ஒரு சின்ன பிளாஸ்டிக் sweet boxஐ பயன்படுத்தி அதில் போட்டு வைத்தால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.
4. குழந்தைகளின் பழைய பனியன் துணிகளை சின்னச் சின்னதாக வெட்டி, ஒரு பெட்டியில் போட்டு பூஜை அறையில் வைத்துக்கொண்டால், விளக்கு ஏற்றிய பின் கைகளில் உள்ள எண்ணெயை துடைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை பிளாஸ்டிக் அல்லது சில்வர் வாட்டர் பாட்டில்களில் போட்டு, மூடி வைத்து உபயோகிக்கலாம்.
6. பூஜை அறையில் சாமி படங்களுக்கு போடப்படும் காய்ந்த பூக்கள் மற்றும் எலுமிச்சை பழம் போன்றவற்றை அகற்ற, ஒரு கூடை அல்லது பேசின் பயன்படுத்திக் கொண்டால் தரையில் சிதறாமல் இருக்கும்.
7. சில்வர் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் ஊற்றி உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தால், அவற்றை தூக்கி எறியாமல், சோம்பு, சீரகம் போன்ற மசாலா பொருட்களை நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
8. சமையல் அறை சுவர்கள் மற்றும் சமையல் மேடையை சுத்தம் செய்ய, சோடா மண் மற்றும் வினிகர் கலந்த நீரில் கொஞ்சம் dishwashing liquid சேர்த்து பயன்படுத்தினால் எளிதாக சுத்தமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ளது போல் சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வாங்க...