உங்க கிச்சன் கேபினெட் பிசுபிசுன்னு 'ஹாய்' சொல்லுதா? 5 நிமிஷத்துல 'பை பை' சொல்ல இந்த 4 வழிகளே போதும்!

Kitchen cabinet
Kitchen cabinet
Published on

நம்ம வீட்டு சமையலறைதான் நம்ம ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். ஆனா, அந்த சமையலறையைச் சுத்தமா வச்சுக்கறது இருக்கே, அது ஒரு பெரிய சவால். அதிலும் குறிப்பாக, நாம தினமும் தாளிக்கிற தாளிப்பு, வறுக்கிற வறுவல்... இதுல இருந்து வர்ற எண்ணெய் ஆவி, நேராகப் போய் ஸ்டவ்க்கு மேலே இருக்கிற அலமாரிகள்ல தான் படியும். கொஞ்ச நாள்ல அது ஒரு மாதிரி மஞ்சள் நிறத்துல, தொட்டாலே கையில ஒட்ற மாதிரி பிசுபிசுன்னு ஆகிடும். இதைப் பார்க்கும்போது சமைக்கிற மூடே போயிடும். ஆனா, இந்தப் பிசுக்கை நீக்க நீங்க பெரிய விலை கொடுத்து கெமிக்கல் எதுவும் வாங்க வேண்டாம். நம்ம வீட்டுலேயே இருக்கிற சில எளிய பொருட்களை வச்சே அதைச் சுலபமா சரிபண்ணிடலாம்.

1. சுடுதண்ணீர், சோப் மற்றும் வினிகர்!

இதுதான் முதல் மற்றும் ரொம்ப சுலபமான வழி. ஒரு பாத்திரத்துல, கை பொறுக்கிற சூட்டுல நல்லா வெந்நீர் எடுத்துக்கோங்க. அதுல, நீங்க பாத்திரம் கழுவ பயன்படுத்துற லிக்விட் சோப்பு ஒரு ஸ்பூன் ஊத்துங்க. அந்தக் கலவையோட, ஒரு அரை கப் வெள்ளை வினிகரையும் சேர்த்துக் கலக்குங்க. 

இப்போ, ஒரு மைக்ரோஃபைபர் துணியை இதுல முக்கி, நல்லா பிழிஞ்சிட்டு, அந்த எண்ணெய் பிசுக்கு படிஞ்ச கேபினெட்டுகளை அழுத்தித் துடைங்க. சூடான நீரும், சோப்பும் அந்த பிசுக்கை இளக்கிவிடும், வினிகர் அதை முழுசா வெட்டி எடுத்துடும். கடைசியா, சுத்தமான தண்ணியில நனைச்ச துணியால ஒரு தடவை துடைச்சு எடுத்தா, கேபினெட் 'பளிச்' ஆகிடும்.

2. பேக்கிங் சோடா பேஸ்ட்

எண்ணெய் பிசுக்கு ரொம்ப நாளா படிஞ்சு, கொஞ்சம் கெட்டியா, கரையா இருக்கா? அப்போ நம்ம ஹீரோ பேக்கிங் சோடாதான். ஒரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் பேக்கிங் சோடாவைப் போட்டு, அதுல சில சொட்டு தண்ணீர் விட்டு, ஒரு திக்கான பேஸ்ட் மாதிரி குழைச்சுக்கோங்க. 

இந்த பேஸ்ட்டை, பிசுக்கு இருக்கிற இடங்கள்ல தடவி, ஒரு 10 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க. அதுக்கப்புறம், ஒரு பழைய டூத் பிரஷ் அல்லது மென்மையான ஸ்க்ரப்பர் வச்சு லேசா தேய்த்தாலே போதும், அந்தக் கறை மொத்தமா பெயர்ந்து வந்துடும். இது மர அலமாரிகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதையும் படியுங்கள்:
அட! ஐந்தே நிமிடங்களில் 'பளிச்' கிச்சன்! என்ன மேஜிக்கோ?
Kitchen cabinet

3. எண்ணெயால் எண்ணெயை எடுப்பது!

 "முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்"னு சொல்ற மாதிரி, ரொம்ப நாளா காஞ்சு போய், பிசின் மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கிற பிசுக்கை, சாதாரண தண்ணி சோப்பால எடுக்க முடியாது. அப்போ, ஒரு துணியில கொஞ்சமா சமையல் எண்ணெயை தொட்டு, அந்தப் பிசுக்கு மேல தேயுங்க. அந்தப் பழைய, காய்ந்த பிசுக்கு, இந்த புது எண்ணெயில கரைஞ்சு இளகி வர்றதை நீங்களே பார்க்கலாம். 

4. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல் எண்ணெய்!

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழத்தோல்ல இயற்கையாகவே எண்ணெய் பிசுக்கை கரைக்கிற சக்தி இருக்கு. இந்தத் தோல்களைக் கொண்டு பிசுக்கு படிஞ்ச இடங்கள்ல நேரடியா தேய்க்கலாம். அல்லது, சில கடைகளில் 'ஆரஞ்சு ஆயில் கிளீனர்' கிடைக்கும். அதை வாங்கி ஸ்ப்ரே பண்ணித் துடைக்கலாம். இது பிசுக்கை நீக்குறது மட்டுமில்லாம, உங்க சமையலறை முழுக்க ஒரு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
சமையல் வேலை ரொம்ப சுலபமா மாற, இந்த 10 கிச்சன் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Kitchen cabinet

கிச்சன் கேபினெட்டை சுத்தம் பண்றது ஒன்னும் பெரிய கஷ்டமான வேலையே இல்லை. மாசக்கணக்கா விட்டுட்டாத்தான் அது பெரும்பாடா தெரியும். வாரத்துக்கு ஒருமுறை இப்படி லேசா துடைச்சுவிட்டாலே போதும், உங்க கிச்சன் எப்போதுமே புதுசு மாதிரி ஜொலிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com