
1. மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றின் ஜாரை வெளியே எடுக்கும்போது சுவிட்சை அணைத்து விட்டு எடுக்கவும்.
2. இண்டக் ஷன் ஸ்டவ் பயன்படுத்தும்போது அதில் திரவப்பொருட்கள் பொங்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. ஒருபோதும் ஈரமான கைகளால் மின் சாதனங்களைக் கையாளக் கூடாது. இதற்காகவே சமையலறையில் கைகளைத் துடைத்துக்கொள்ள ஒன்றிரண்டு டவல்கள் வைத்துக் கொள்ளவும்.
4. மின் சாதனங்களை இயக்கும்போது ஷாக் ஏற்படாமல் இருக்க அவசியம் ரப்பர் மிதியடியை போட்டுக்கொள்ள வேண்டும்.
5. முடிந்தவரை அடிக்கடி பயன்படுத்தும் மின் சாதனங்களுக்கு தனித்தனி பிளக் பாயின்ட் இருந்தால், ஒன்றைப் பிடுங்கி இன்னொன்றுக்கு செருகும் அவஸ்தை இருக்காது என்று மட்டுமல்ல, ரிஸ்கும் குறையும்.
6. அதுபோல், அதிக மின்சாரம் இழுக்கும் மின் உபகரணங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல் ஒன்றுக்கு பிறகு மற்றொன்றை இயக்கவும். உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் மைக்ரோவேவ் அவன், மிக்ஸி இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்க வேண்டாம்.
7. வீட்டில் லோ வோல்டேஜ் ஏற்படும் சமயங்களில் சமையலறையில் உள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்தினால் அவை சீக்கிரமாகப் பழுதாகி விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
8. சமையலறையில் மின் சாதனங்களை ஒன்றோடொன்று இடித்தபடி வைக்காமல் போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
9. மின்சார உபகரணங்களை தயார் செய்வதற்கு முன்னால் அதிலுள்ள சுவிட்சும் சுவர் சுவிட்சும் ஆஃப் நிலையில் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
10. மின் உபகரணங்களை கையாளும்போது வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் சமையலறையில் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
11. சமையலறையில் பயன்படுத்தும் மின் உபகரணங்கள் பழுதாகி விட்டால், சுயமாக அதை ரிப்பேர் செய்ய முற்படாமல் மின் உபகரணங்களை ரிப்பேர் செய்யும் கடையில் கொடுத்து சரி செய்ய வேண்டும்.
12. விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று எண்ணி மலிவு விலையில் கிடைக்கும் மின் உபகரணங்களை உங்கள் தேவைக்கு வாங்க வேண்டாம்.