சமையலறை இனி ‘ஸ்மார்ட்’ ஆகும்! இடத்தை மிச்சப்படுத்தும் 10 சூப்பர் அலமாரி டிசைன்கள்!

kitchen-storage-ideas
kitchen-storage-ideas
Updated on

மையலறை என்பது ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாகும். தினசரி வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் இடம் என்பதால், அது சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பது அவசியமாகிறது. சீரற்ற அமைப்புடன் இருக்கும் சமையலறை, வேலைப்பளுவை அதிகரிப்பதோடு, நேரத்தையும் வீணாக்குகிறது. சமையலறையில் சரியான அலமாரி வசதிகள் இல்லாதபோது, பொருட்கள் தேடி எடுக்க நேரம் ஆகும், மேசை இடம் சிதறலாகி விடும், வேலை நடுவே தடுமாற்றமும் ஏற்படும். இதனால் சமையல் அனுபவமே சற்று சிரமமாக மாறும் நிலை உருவாகலாம். இதனைத் தவிர்க்க சில எளிய, பயனுள்ள அலமாரி வடிவமைப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

 சுவர் மசாலா ரேக் (Wall Spice Rack)

சுவரில் பொருத்தப்படும் மசாலா ரேக்குகள், மசாலா பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்க உதவுகின்றன. இதன் மூலம் மேசை இடம் மிச்சமாகும் மற்றும் சமையல் செயல்முறை எளிதாகும்.

 மூலை அலமாரி (Corner Shelf)

சமையலறையின் மூலைப் பகுதிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் விடப்படுகின்றன. அவற்றை அலமாரிகளாக மாற்றுவதன் மூலம் கூடுதல் சேமிப்பு இடத்தைப் பெறமுடியும்.

காய்கறி அடுக்கு (Vegetable Rack)

வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை தனித்தனி அடுக்குகளில் சேமிப்பது, அவற்றின் பசுமையை பேண உதவுகிறது. காற்றோட்டம் கிடைப்பதாலும் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

 சிங்க் மேல் ரேக் (Over Sink Rack)

சிங்க் மேல் பொருத்தப்படும் ரேக்குகள், தட்டுகள் மற்றும் சமையலறை உபகரணங்களை ஒழுங்காக வைத்திருக்க உதவுகின்றன. இது சிறிய சமையலறைகளுக்கு சிறந்த தீர்வாகவும் அமைகிறது. மேசை இடத்தை மிச்சப்படுத்தி, சமையலறையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

 தொங்கும் பானை ரேக் (Hanging Pot Rack)

பாத்திரங்களை தொங்கவைத்து வைத்தால், அலமாரி இடம் மிச்சமாகும். மேலும் சமையலறைக்கு ஒரு அழகிய தோற்றத்தையும் அளிக்கிறது.

 உருளும் சேமிப்பு அடுக்கு (Rolling Storage Rack)

இவை நகர்த்தக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால், குறுகிய இடங்களிலும் பயன்படுத்த முடியும். பாட்டில்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு இது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
கேசரோலில் சப்பாத்தி ஏன் ஈரமாகிறது? சூடாகவும் 'டிரை' ஆகவும் வைத்திருக்க இதோ சிறந்த வழிகள்!
kitchen-storage-ideas

மரத்தாலான திறந்த அலமாரி (Wooden Open Shelf)

மர அலமாரிகள் சமையலறைக்கு இயற்கையான தோற்றத்தை வழங்குகின்றன. அழகான ஜாடிகள், தட்டுகள் வைத்தால் அலங்காரமாகவும் பயன்படுத்தலாம்.

 மைக்ரோவேவ் சேமிப்பு அடுக்கு (Microwave Shelf)

மைக்ரோவேவ் சுற்றிலும் கூடுதல் அலமாரி அமைப்பதன் மூலம், இடத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

 அலமாரியின் கீழ் தொங்கும் ரேக் (Under Cabinet Rack)

இந்த வடிவமைப்பு தினசரி பயன்படுத்தும் குவளைகள், துணிகள் போன்றவற்றை எளிதாக எடுக்க உதவுகிறது.

 தொழில்துறை குழாய் அலமாரி (Industrial Pipe Shelf Design)

இரும்பு குழாய் மற்றும் மரம் கொண்டு செய்யப்படும் இந்த அலமாரி, சமையலறைக்கு உறுதியான மற்றும் எளிய வடிவம் தருகிறது. பொருட்களை ஒழுங்காக வைக்கவும், இடத்தை சிறப்பாக பயன்படுத்தவும் உதவுகிறது. இந்த பழைய வடிவமைப்பு நவீன மற்றும் அழகான தோற்றத்தை வழங்குகிறது.

 சமையலறையை அழகாகவும் ஒழுங்காகவும் மாற்ற பெரிய செலவுகள் தேவையில்லை. சரியான அலமாரி வடிவமைப்புகள் மூலம் இடத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் சமையல் வேலைகளை எளிதாக முடிக்க, வசதியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com