மருந்துப்போலி தரும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Know about the benefits of placebo?
Know about the benefits of placebo?https://englishpluspodcast.com

ரு மனிதனுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி என்று நோய் வரும்போது மருத்துவரிடம் சென்று காண்பித்து ஊசி போட்டுக் கொண்டோ அல்லது அவர் தரும் மாத்திரையை உட்கொண்டோ நோயை சரி செய்து கொள்கிறார்.

டாக்டர் தந்த மாத்திரை தன்னுடைய நோயை போக்கும் என்று ஒரு மனிதன் தீவிரமாக நம்புவதால்தான் அவரது நோய் குணமாகிறது. சிலருக்கு சில மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. மருந்து மாத்திரை எதுவும் சாப்பிடாமலேயே ஒருவருடைய நோய் குணமானால் அதற்கு பெயர்தான் மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்று உளவியல் கூறுகிறது.

ஒரு மருந்தோ அல்லது மாத்திரையோ சரியாக வேலை செய்ய வேண்டும் என்றால் அதை உட்கொள்ளும் நபர் அதை தீவிரமாக நம்ப வேண்டும். அவரது நம்பிக்கையே பாதி நோயை குணமாக்கி விடுகிறது. சிலர் தூக்கம் வரவில்லை என்று மருத்துவரிடம் தூக்க மாத்திரை கேட்பார்கள். அவர் தூக்க மாத்திரை தராமல் சாதாரண வைட்டமின் மாத்திரையைக் கொடுத்து, 'இதை உட்கொள்ளுங்கள் உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்' என்று சொன்னால் அதை நம்பி சாப்பிடும் நபரும் நன்றாகத் தூங்குவார். உண்மையில் இது தூக்க மாத்திரை இல்லை. வெறும் வைட்டமின் மாத்திரைதான் என்ற உண்மை அந்த நோயாளிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பிளாஸிபோ எஃபெக்ட்’ என்பது தகுந்த மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் கூட அவரது நோய் சரியாவதைத்தான் குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
கோடையை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் 10 சூப்பர் உணவுகள்!
Know about the benefits of placebo?

மருந்துப்போலி பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?

சிலருக்கு சில மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, இந்த சிகிச்சை முறை கொலஸ்ட்ரால், சர்க்கரை போன்ற நோய்களை கட்டுப்படுத்தாது, உடம்பில் இருக்கும் கட்டிகளை குறைக்காது. ஆனால், மூளை சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளை குறைக்கும். உடலில் ஏற்படும் வலிகளை குறைக்கும். மன அழுத்தம் தொடர்பான தூக்கமின்மை, சோர்வு, குமட்டல், வாந்தி போன்றவற்றிற்கு இது சிறந்த சிகிச்சை முறையாக இருக்கும்.

மருத்துவர்கள் இந்த மருந்துப்போலியை எல்லாருக்கும் பரிந்துரைப்பது இல்லை. இதனால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. ஆனால், இதை எல்லா வகையான நோய்களுக்கும் அவசர சிகிச்சைக்கும் பயன்படுத்தக் கூடாது. ஆபத்தில்லாத சாதாரண உடல் அசௌகரியங்களுக்கு பயன்படுத்தலாம். மாத்திரை அலர்ஜி உள்ளவர்களுக்கும் இது நன்றாக வேலை செய்யும். அதேசமயம் அவர்களது ஒற்றை தலைவலி, லேசான காய்ச்சல், உடம்பு வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்றவை கட்டுப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com