தொப்பையை குறைப்பது இனி ரொம்பவும் ஈசிதாங்க!

தொப்பை
Belly
Published on

யிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கியக் காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதுதான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. இன்னும் சிலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இதுவரை போனது போகட்டும், இனி தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிதுதான். தொப்பையைக் குறைக்க மிகவும் சுலபமான பத்து வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும், அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்துவிடும்.

2. உப்பை, சர்க்கரை: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாகத் தங்கிவிடும். எனவே, உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும்போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில், உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே, ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகோடா: அவகோடாவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும், இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: சிட்ரஸ் சத்து அதிகமுள்ள பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமான் திருக்கரங்களில் ராகு, கேது காட்சி தரும் திருத்தலம் தெரியுமா?
தொப்பை

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும், பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரி பழங்கள்: பெர்ரி பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில், அதில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், தொப்பையால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப பழங்களை அதிகம் சாப்பிட்டால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com