சுவாரசியமான 12 மூளைப்பயிற்சிகளைத் தெரிந்து கொள்வோம்!

அக்டோபர், 13 தேசிய மூளைப் பயிற்சி தினம்
National train your brain day
National train your brain day
Published on

னித மூளை பல அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது. மூளையை பயிற்றுவிக்கும் செயல்கள், அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அவை பல்வேறு உத்திகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது.

அறிவாற்றல் பயிற்சிகள்:

புதிர்கள் மற்றும் விளையாட்டுகள்: சுடோகு அல்லது குறுக்கெழுத்துகள் போன்ற புதிர்களில் ஈடுபடுவது சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை மேம்படுத்தும்.

நினைவக விளையாட்டுகள்: நினைவகத்திற்கு சவால் விடும் செயல்பாடுகள் தொடர்பான விளையாட்டுகளும் மூளைக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

உடற்பயிற்சி:

ஏரோபிக் பயிற்சி: இது உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. புதிய நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் ஓடுதல், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளும் மூளைக்கு மிகுந்த பயன் தரும்.

புதிய திறன்களை கற்றுக் கொள்வது: புதிய திறன்களை கற்றுக் கொள்வது. எடுத்துக்காட்டாக புதிய மொழியை கற்றுக்கொள்வது, புதிய பொழுதுபோக்கைக் கையாள்வது, இசைக் கருவிகளைக் கற்றுத் தேர்ச்சி பெறுவது போன்றவை அறிவாற்றல் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த உதவும்.

படித்தல் மட்டும் எழுதுதல்: நல்ல நூல்களை வாசிப்பது மற்றும் ஆக்கப்பூர்வமாக எழுதுவது, புரிந்து கொள்ளும் திறன் போன்றவை விமர்சன சிந்தனை மேம்படுத்தும்.

சமூகத் தொடர்பு: பிறருடன் உரையாடல்களில் ஈடுபடுதல், மூளையைத் தூண்டுகிறது. பிறருடன் யோசனைகளை பற்றி விவாதிப்பது மூளைக்கு மிகுந்த நன்மை பயக்கும். குழு செயல்பாடுகள், கிளப் அல்லது குழு விளையாட்டுகளில் பங்கேற்பது சமூகத்திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனநல சவாலையும் ஊக்குவிக்கிறது.

நினைவாற்றல் மட்டும் தியானம்: நினைவாற்றலைப் பயிற்சி செய்வது கவனத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும். உணர்ச்சிக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும். மூளையில் கட்டமைப்பு மாற்றங்களுக்கு வழிவகுக்கும். அதுபோலவே தியானப் பயிற்சிகள், ஆழ்நிலை தியானம் போன்ற நுட்பங்கள் ஒட்டுமொத்த அறிவாற்றலையும் மேம்படுத்தும்.

ஊட்டச்சத்து: மூளைக்கு உகந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மூளைக்கு நன்மை தரும். அதேபோல நன்கு நீரேற்றமாக உடலை வைத்திருப்பதும் அறிவாற்றல் செயல் திறனுக்கு முக்கியமானது. நீரிழப்பு செறிவு மற்றும் நினைவாற்றலை பாதிக்கும்.

தரமான தூக்கம்: உடலுக்கும் மனதுக்கும் போதுமான ஓய்வு தர வேண்டும். நினைவக ஒருங்கிணைப்பு மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு தூக்கம் இன்றி அமையாது. வழக்கமான நேரத்தில் உறங்கச் செல்வது மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. குறுகிய குட்டித் தூக்கம் அறிவாற்றல் செயல்களில் விழிப்புணர்வையும் செயல் திறனையும் மேம்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எக் காபியில் இருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
National train your brain day

மன அழுத்த மேலாண்மை: யோகா, ஆழ்ந்த சுவாசம் தசைத் தளர்வுகள் போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். அறிவாற்றல் மேம்பாடு அதிகரிக்கும். மேலும் பணிகளை திறம்பட நிர்வகிப்பது பதற்றத்தை குறைத்து கவனத்தை மேம்படுத்தும்.

தொடர்ச்சியான கற்றல்: வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்வது, வகுப்புகளில் சேர்வது, பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்வது, மூளையை ஈடுபாட்டுடன் மாற்றி அமைக்கும்.

கவனச் சிதறல்களை குறைத்தல்: டிஜிட்டல் திரை நேரத்தை குறைப்பது கவனச் சிதறல்களை குறைக்க உதவும்.

சிக்கலான பணிகளில் ஈடுபடும் திறனை மேம்படுத்தும். தொழில்நுட்பத்தை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு இருப்பது அவசியம். இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் மூளை மிகவும் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com