இள வயதிலேயே குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்க பயிற்சியளிப்போம்!

Teaching children to love nature
Teaching children to love nature
Published on

ன்லைன் ஸ்கிரீன்லேயே உபரி நேரத்தை உபயோகமின்றி வீணடித்துக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கவும், பூமியுடனான அவர்களின் நெருக்கத்தை வலுவாக்கவும் என்னென்ன வகையில் உதவலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. பிறந்த நாள், லாங் ஹாலிடேஸ் போன்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொம்மை,  பில்டிங் செட் போன்றவற்றை வாங்கி அவர்களுக்குப் பரிசளிக்காமல், ஒரு சாதாரண 'கார்டனிங் கிட்' (gardening kit) வாங்கிக் கொடுக்கலாம். அதிலுள்ள, சிறு தொட்டி, மண் மற்றும் விதைகளை வைத்து அவர்கள் சுலபமாக விதை விதைத்து தண்ணீர் விட்டு, செடி முளைத்து வருவதை கற்றுக்கொள்ள முடியும்.

2. குழந்தை பெயரில் ஒரு மரம் வளர்க்க உதவலாம். இதற்கு ஆன்லைனில் Grow-Trees.com என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு பண்ணலாம். நினைத்தபோது குழந்தையுடன் சென்று மரத்தைப் பார்த்து வரலாம். அவர்கள் அளிக்கும் தகவல் மூலம் மரத்தின் வளர்ச்சி மற்றும் சீசனல் மாற்றங்களை கண்காணித்துக் கொள்ளலாம்.

3. ஒரு சிறிய புத்தகத்தை (A nature explorer's journal) வாங்கிக் கொடுத்து அதில் அவர்கள் வெளியில் செல்லும்போது கண்டு வியந்த நத்தை, பட்டாம்பூச்சி, இலைகள் போன்றவற்றை சுட்டிக் காட்டவும், வரைந்து பழகவும் உதவலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டு மின்சாரச் செலவை கட்டுக்குள் வைக்க இதோ சில வழிகள்...
Teaching children to love nature

4. நகரத்தில் வாழும் குழைந்தைகளுக்கு ஒரு டெர்ரேரியம் கிட் (terrarium kit) வாங்கிக் கொடுக்கலாம். அதிலுள்ள கண்ணாடிக் குடுவைக்குள் மண் போட்டு சில வகை செடிகளை நட்டு, அவர்கள் அதைப் பராமரிக்கவும், அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழவும் உதவலாம்.

5. இயற்கையை கண் முன் கொண்டு வர உதவும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அதன் மூலம், காடுகள், கடல், மலை, புல், குரங்கு, புலி, வண்டு போன்ற இயற்கையின் படைப்புகளை விரிவாக விளக்கிக் கூறி தெரிந்து கொள்ள உதவலாம்.

6. மழை நீர் சேமிப்பு பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறலாம். மொட்டை மாடியில் கொட்டும் மழை நீரை வீணாக்காமல் எவ்வாறு தொட்டிகளில் சேமிக்கலாம் என்பதை, Butterfly Edufields வழங்கும் DIY சயின்ஸ் கிட் மூலம் விவரித்துக் கூறலாம்.

7. உங்கள் வீட்டு ஜன்னல் அருகில் பறவைகளுக்காக  ஒரு சிறிய மர வீடு அமைத்து, தானியங்களைப் பரத்தி வைக்கலாம். காலை நேரங்களில் உங்கள் குழந்தையின் கையில் ஒரு பைனாகுலரைக் கொடுத்து பறவைகள் வந்து தானியங்களை சாப்பிட்டுச் செல்வதை கவனிக்கச் சொல்லலாம்.

8. குழந்தைகளை இயற்கை முறை விவசாயம் (Organic) நடைபெறும் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு, மண்ணைத் தோண்டி நாற்று நடுவது, காய்கறிகள் பறிப்பது, மாடுகளுக்கு உணவளிப்பது போன்ற செயல்களை கவனிக்கச் செய்து அடிப்படை விவசாயத்தை அறிந்து கொள்ள உதவலாம்.

இதையும் படியுங்கள்:
சிந்திக்க வைக்கும் அனுபவப் புதுமைகள்!
Teaching children to love nature

9. உரம் தயாரிக்க உதவும் கிட் (composting kit) ஒன்று வாங்கி அதில் பழத் தோல்கள், காய்கறிக் கழிவுகள் மற்றும் இலை தழைகளைப் போட்டு மேலே சிறிது மண்ணைப் பரப்பி மூடி வைத்தால் சில மாதங்களில் அவை கருப்பு நிறத்தில் சத்து நிறைந்த உரமாக மாறுவதை விளக்கிக் கூறியும், நடை முறையில் செய்து காட்டியும் விளங்க வைக்கலாம்.

10. உறுப்பினர் சந்தா கட்டி நேச்சர் தீம்டு ஆக்ட்டிவிட்டி பாக்ஸ்களை வரவழைத்து சயின்ஸ் ப்ராஜெக்ட், கைவினைத் திறன் மூலம் அறிவை வளர்க்க உதவலாம்.

சிறு வயதில் நாம் அவர்கள் மனதில் ஏற்படுத்தும் சிறு பொறி நீண்ட காலம் அவர்கள் மனதில் நின்று பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com