அனைவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் வாழ்க்கை முட்கள் நிறைந்ததாக மாறிவிடுகிறது. ஆனால், வாழ்க்கையில் 5 கசப்பான உண்மைகளை கடைபிடித்தால் இனிப்பான வெற்றி கண்டிப்பாக உங்கள் வசம் வந்து சேரும். அவற்றை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. எப்போதும் சொகுசாக இருக்க முடியாது: ‘வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும்’ என விட்டுவிடுவது என்பது கூட நம்மை ஒருவித சொகுசான வாழ்க்கையில் வைத்துக்கொள்ளும். இதனால் நமக்குத் தேவையானதை செய்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. எனவே, பெரிய இலக்குகளை வைத்து, சொகுசான வாழ்க்கையை ஒதுக்கி, நம் கனவுகளை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டால் கண்டிப்பாக வெற்றி நம் கைக்கு வரும்.
2. நம்மைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை: இந்த உலகம், நாம் கேட்பதையெல்லாம் கொடுத்து விடாது. நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அதற்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். அதிர்ஷ்டம் வரும் என்றோ, பிறர் வந்து அதை நடத்திக் கொடுப்பார் என்றோ காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். இலக்குகளை அடைய நீங்கள் பொறுப்பேற்று முயற்சி செய்து நடத்திக்காட்ட வேண்டும்.
3. தெரியாததில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது: எளிதான, நமக்குத் தெரிந்த விஷயங்களை செய்துகொண்டு, அதிலேயே இருந்து விடுவது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், வெற்றி கிடைக்க நமக்கு தெரியாத விஷயத்தைச் செய்ய வேண்டும். எந்த விஷயம் நம்மை பயமுறுத்துகிறதோ, அதை பயப்படாமல் செய்து அதில் வெற்றி பெற வேண்டும்.
4. தினசரி பழக்கங்கள் விதியையே மாற்றியமைக்கும்: நம் வாழ்வை மாற்றி அமைக்கக் கூடியது நாம் தினசரி செய்யும் விஷயங்கள்தான். காலையில் உடற்பயிற்சி செய்வது அல்லது கனவுகளை அடைய எடுக்கும் முயற்சிகள் என எதுவாக இருந்தாலும் இந்த சிறிய பழக்கங்கள்தான் நம் விதியையே மாற்றி எழுதுபவை ஆகும்.
5. தோல்வி என்பதும் வளர்ச்சியே: தோல்வி என்பது வளர்ச்சிக்கான வழி என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. தோல்வியை பார்த்து பயந்தே எந்த வேலையையும் செய்யாமல் இருந்து விடுகின்றனர். தோல்விகளும் வெற்றிகளும் நீங்கள் என்ன மாதிரியான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை காட்டும் அளவுகோல்கள். அதுமட்டுமன்றி ஒரு விஷயத்தில் வெற்றி கிடைப்பதற்கு முன் தோல்வியே கிட்டும் என்பதை தெரிந்துகொள்வது நல்லது.
மேற்கூறிய 5 உண்மைகளை கவனமாகக் கடைபிடிக்க ஆரம்பித்தாலே வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவோம்.