கருஞ்சீரகம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?

Does black cumin control sugar levels?
Does black cumin control sugar levels?
Published on

ன்றைக்கு உலகில் பல பேருக்கு இருக்கக்கூடிய நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும். இதை கட்டுக்குள் வைக்க எண்ணற்ற மருந்துகளை உட்கொண்டாலும், இயற்கையான வழிகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்களும் உண்டு. அதன்படி கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதின் மூலமாக சர்க்கரை அளவுவை கட்டுக்குள் வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Nijella sativa என்று சொல்லப்படும் கருஞ்சீரகம் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிகமாக வளரக்கூடிய வாசனை பொருளாகும். இங்குள்ள பாரம்பரிய மருத்துவத்தில் இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மருந்தாக சொல்லப்படுகிறது. இதில் இருக்கும் Thymoquinone என்னும் ரசாயனம்தான் சர்க்கரை நோயை குறைக்க உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.

இது கல்லீரலில் உருவாகும் குளுக்கோஸை குறைக்கிறது, இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை குறைக்கிறது. இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களின் மூலமாக சர்க்கரை அளவை குறைக்கிறது. இது எந்த அளவு சர்க்கரை அளவை குறைக்கிறது என்றால், முதலில் கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து அதை இரண்டு அல்லது மூன்று கிராம் அளவில் சாப்பிட்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்!
Does black cumin control sugar levels?

கருஞ்சீரகத்தில் எண்ணெய் எடுத்து அதை 2 மில்லி குடித்திருக்கிறார்கள். மேலும், இதில் இருக்கும் Thymoquinoneஐ மாத்திரையாக மாற்றி அதை சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுத்து எந்த அளவிற்குப் பயன் தருகிறது என்று பார்த்திருக்கிறார்கள்.

இதில் கருஞ்சீரகப் பொடி அல்லது எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களிடம் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது HbA1c சராசரி சர்க்கரை அளவு 8.5 உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் எடுத்துக்கொண்டதால் 8.1ஆக குறைந்திருக்கிறது.

கருஞ்சீரகத்தில் இருக்கும் Thymoquinone ரசாயனத்தில் செய்யப்பட்ட மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலமாக HbA1c சராசரி சர்க்கரை அளவு 7.3ல் இருந்து 6.8ஆக குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் நாளே நிகழ்த்திய அசத்தல் விஷயங்கள்!
Does black cumin control sugar levels?

எனவே, கருஞ்சீரகத்தை எண்ணெய், பொடி, மாத்திரை என்று சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்ததில் HbA1c 0.5 சதவீதம் குறைவதாகக் கண்டுபிடித்துள்ளனர். எனவே, கருஞ்சீரகத்தை தினமும் அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை அளவை குறைக்க நினைக்கும்போது மாவுச்சத்து உணவுடன் இதை கூடுதலாக எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.

கருஞ்சீரகத்தை விட மாவுச்சத்து குறைவான உணவுகளை பின்பற்றினால், HbA1c சராசரி அளவை 13ல் இருந்து Complete reversal அளவிற்குக் கொண்டு வந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com