
வீட்டு நிர்வாகத்தில், சமையலில் தொடங்கி, குழந்தைகளுக்கான எதிர்கால திட்டங்கள், இந்த மாதம் கட்ட வேண்டிய பில்கள், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள் இப்படி பல விதமான பணிகளை பெண்கள் ஒற்றை ஆளாக செய்கின்றனர். தொழில் என்று வரும்போது அந்த நிறுவனத்தின் பலவிதமான வேலைகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு கவனிப்பது அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தாலும் சில பிரச்னைகளை தவிர்க்க பிசினஸில் பெண்கள் பெரிய உயரத்தை எட்ட தங்கள் இலக்கில் மிக கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது. அதற்கு பெண்கள் தங்களிடம் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என என்று பார்ப்போம்.
நேரத்தை திட்டமிடுங்கள்.
நம்மில் பலரும் கவனம் எடுக்க முக்கிய காரணத்தில் ஒன்று சரியான திட்டம் இல்லாதது. இதன் விளைவாக நமது குரங்கு மனம் தன்னைதானே அவிழ்த்துவிட்டு எங்கெங்கோ தாவுகிறது. உங்கள் நாளை ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை உண்டான வேலைகளை திட்டமிடுங்கள் இது உங்கள் வேலை நாளுக்கும் ஒரு கட்டமைப்பை கொடுக்கும். அதிக கவனம் தேவைப்படும் அல்லது அதிக ஆற்றல் தேவைப்படும் பணிகளை காலையில் முதல் வேலையாக செய்ய திட்டமிட்டு வேலைகளை முடியுங்கள்.
தள்ளிப் போடுவதை நிறுத்துங்கள்.
அப்புறமா பார்த்துக்கலாம் என்று பல விஷயங்களை நாம் தள்ளிப் போடுகிறோம் இல்லையா? அதற்கு ஒரு முடிவு புள்ளி இல்லை குன்று செய்ய வேண்டியவை அடுத்த நாளைக்கு செய்ய முடிவு செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம், உங்கள் மனதின் பின்புறத்தில் அது இன்னும் உங்களை தொந்தரவு செய்யும் அதன் விளைவாக கையில் இருக்கும் பணியில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். எதையும் தள்ளிப்படாமல் அந்த வேலையை செய்ய முயற்சி எடுங்கள்.
குறுகிய கால இடைவேளையை தேர்ந்தெடுங்கள்.
சில நேரங்களில் உங்களால் ஒரு பணியில் கவனம் செலுத்த முடியாதபோது நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், ஓய்வு எடுப்பதுதான். நம் மூளை நீண்ட நேரம் கவனத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை எனில் தொடர்ச்சியாக ஒரு செயலில் மூழ்கி இருப்பதால், சோம்பல், சோர்வு மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும் அதனால்தான் அறுபது நிமிடங்கள் தொடர்ச்சியான வேலைகளுக்குப் பிறகு சிறிய இடைவெளி எடுப்பது நல்லது.
ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுங்கள்.
நாம் அனைவரும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன்களுடன் பிறக்கவில்லை. ஆனால் நம்மில் பலரும் அதற்கு நிறைய மெனக்கெடுகிறோம். இது உங்களை சோர்வடையச் செய்து கவனசிதறலை கொடுக்கும். ஒரு வேலையை செய்யும்போது மற்றொரு வேலைக்கு மாறுவது, அவற்றில் ஏதேனும் ஒன்றை சரியான நேரத்தில் முடிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அதிக தவறுகளும் நடக்கின்றன. நேரத்தை சேமிப்பதற்கு பதிலாக நேர விரயம் ஆகிறது. ஒரு நேரத்தில் ஒருவேலையை மட்டும் தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். இதனால் நேரம் மிச்சமாகும்.
போனை தவிர்த்து விடுங்கள்.
வேலை செய்யும்போது உங்கள் போன் மிகப் பெரிய எதிரியாக இருக்கலாம். தொடர்ச்சியாக whatsapp செய்திகள், பேஸ்புக், இன்ஸ்ட்ரா கிராம் , மின்னஞ்சல்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கலாம். ஒரு கணக்கெடுக்கின்படி ஒரு சராசரி அலுவலக ஊழியர் ஒரு நாளைக்கு 56 நிமிடங்கள் தேவையற்ற செயல்களுக்காக தன் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார் என ஆய்வு உறுகிறது.
போன் உங்களின் ஆற்றலை வீண் அடித்து உற்பத்தி திறனை கொல்லும். உங்கள் ஆற்றலை வீணடித்து போன் பார்ப்பதை சிறிது நேரம் தள்ளி வைத்து வேலை செய்வதில் கவனத்தை செலுத்தலாம்.
உடற்பயிற்சி செய்யுங்கள்.
நேர்மறையான உற்சாகம் தரவும், மனது, உடல் ரிலாக்சாக இருக்கவும் நீங்கள் தினமும் உடற்பயிற்சி, தியானம், உற்சாகம் தரும் இசை கேட்பது, இதனைசெய்யும் போது உங்கள் பயிற்சி உறுதியுடன் உங்கள் மூளையைச் சிறப்பாக கவனம் செலுத்தும் விதமாக மாற்றலாம்.
நேரத்தோடு வேலை முடிய திட்டமிடுங்கள்.
சிலர் தொடர்ச்சியாக வேலை செய்யும்போது சிறப்பாக செயல்படுவார்கள். சிலர் சிறிய இடைவேளை எடுத்து மீண்டும் உற்சாகமாக வேலை செய்வார்கள். நாம் எப்படிப்பட்டவர் என்பதை முதலில் அறிந்து அதற்கேற்றபடி நமது வேலைகளை செய்யலாம். ஓட்டம் பெறுவது எவ்வாறு உங்கள் செயல்திறன் மற்றும் கற்றல் நிலைகளை ஒருமுகப்படுத்தவும், அதிகரிக்கவும் உதவும். இதனால் வீட்டிலும். பிசினஸிலும் பெண்கள் கவனம் செலுத்தி அதன் கலை அறிந்து திட்டங்களை வகுத்து செய்தால் வெற்றி பெறலாம்.