Psychological tricks from Chanakya
Lifestyle articles

புத்தகம் படிப்பதுபோல மனிதர்களை படிப்பது எப்படி? -சாணக்கியர் கூறும் உளவியல் தந்திரங்கள்!

Published on

பிறருடைய மனதைப் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நமக்கு அவ்வப்போது தோன்றும். சாணக்கியர், புத்தகம் படிப்பது போல பிறரை படிக்கலாம். அதற்கு சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

மக்கள் சொல்வதை அல்ல, செய்வதை கவனியுங்கள்;

மனிதர்களின் உண்மையான குணம் அவர்களின் வார்த்தைகளில் அல்ல செயல்களில் வெளிப்படுகிறது. ‘உதவி செய்கிறேன்’ என்று தேனொழுக பேசுவதுபோல நடித்துவிட்டு உதவி செய்யாமல் இருக்கும் நபர்களின் செயல்களை கவனியுங்கள். வெறும் வார்த்தைகளை மட்டும் மதிப்பதுபோல நடிக்கிறார்களா என கவனியுங்கள். பிறர் வார்த்தைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அவர்களது நடத்தையை கூர்ந்து கவனித்தால் அவர்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சாணக்கியர்.

கண்களைக் கவனியுங்கள்;

கண்கள் ஆன்மாவின் ஜன்னல் என்கிறார் சாணக்கியர். உங்களிடம் பேசும் நபர்களின் கண்கள் உறுதியாகவும் அமைதியாகவும் இருக்கின்றனவா? நேருக்கு நேர் பார்த்து பேசுகிறாரா எனக் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அவரை தாரளமாக நம்பலாம். பேசும் போது பார்வையை எங்கேயோ அலையவிட்டு பேசுபவர்கள் நம்பிக்கை கூறியவர்கள் அல்ல. 

இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் குறித்து சாணக்கிய நீதி சொல்வது என்ன?
Psychological tricks from Chanakya

எளிய மக்களை நடத்தும் விதம்;

தம்மை விட பதவியில் உயர்ந்தவரை, பணக்காரரை மிகவும் மதிப்போடு நடத்தும் மக்கள் பலரும், மிகவும் எளிய மக்களை, பணியாளர்களை மரியாதையோடு நடத்துவதில்லை. ஒருவரின் உண்மையான குணம் தம்மைவிட தாழ் நிலையில் உள்ளவரை நன்றாக நடத்துவதில்தான் உள்ளது. பணியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு உங்களிடம் இனிமையாக பேசும் நபர்களை நம்பவே நம்பாதீர்கள். அவர்கள் போலி ஆசாமிகள் என அறிந்து கொள்ளலாம்.

சிரிப்பு;

நன்றாக சிரிக்கும்போது கண்களும் சேர்ந்து சிரிக்க வேண்டும். போலியாக சிரிப்பவரை முகத்தைப் பார்த்து கண்டுபிடித்து விடலாம். சிலர் சிரிப்பு என்ற பேரில் உதடுகளை மட்டும் வளைப்பார்கள். பிறரைப் புண்படுத்தும் நோக்கில் ஏளனப் புன்னகை புரிவார்கள். நல்ல மனம் படித்தவர்கள் சிரிக்கும் போது முகத்தில் அழகிய புன்னகை தோன்றும். கூடவே கண்களில் கருணையும் தெரியும். மனமும் முகமும் மலர  நன்றாக சிரிக்கும் நபர்களை நம்பலாம்.

அமைதியாக கேட்பது;

குறைவாக பேசி சுற்றிலும் உள்ளவர்களை அதிகமாக கவனிப்பவர்கள் புத்திசாலிகள் என்கிறார் சாணக்கியர். சத்தம் போட்டு பேசும் நபர்கள் உண்மையில் பலவீனமானவர்கள். மிகக் குறைவாக பேசி அமைதியாக பிறரை கூர்ந்து கவனிப்பவர்கள் மற்றவர்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். பிறர் பேசுவதை பொறுமையாக கேட்கும் நபர்கள் அனுதாபம் மிக்கவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சாணக்கியர்.

இதையும் படியுங்கள்:
சமூகப் பேரழிவுக்குக் காரணமாகும் போதைப் பழக்கம் தவிர்ப்போம்!
Psychological tricks from Chanakya

உங்களிடம் புரணி பேசும் நபர்கள்;

பிறரை பற்றி உங்களிடம் கோள் சொல்லி அல்லது குறை சொல்லும் நபர்கள் உங்களைப் பற்றியும் பிறரிடம் போய் மோசமாக பேசுவார்கள். ஏனென்றால் அது அவர்களின் இயல்பு.  இப்படிப்பட்ட நபர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். இந்த  ஆறு வழிமுறைகளும் பிறரை படிக்க உதவும்.

logo
Kalki Online
kalkionline.com