வீட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்! உங்களுக்கே தெரியாத உண்மைகள்!

Lifestyle articles
Residential house
Published on

நிம்மதியான, பாதுகாப்பான ஒரே இடம் நாம் வசிக்கும் வீடு. அதைவிட சிறந்த அழகிய இடம்  வேறு எதுவும் இல்லை. அங்கே நம்மை அறியாமல் செய்யும் ஆபத்துகள் உள்ளே நுழைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அதனை  எப்படி சரி செய்யலாம் பார்ப்போம் வாங்க!

கதவைத் திறந்தவுடன் நுழை வாயில் போட்டு இருக்கும் மிதியடி . மிதியடிகள், கம்பளங்கள்  வழுக்கிக்கொண்டு போகாததாக இருக்க வேண்டும். ஏனென்றால் காலில் உள்ள அழுக்குகளை நீக்கி கொள்ளத்தான் மிதியடிகள் போடுவது. தவிர ஸ்கேட்டிங் செய்வதற்காக அல்ல! கம்பளங்களின் முனைகள் மடிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். மிதியடிகளில் தலைமுடி, நூல் போன்ற குப்பைகளை சேரவிடாமல் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

வரவேற்பு அறையில் உள்ள சோபா செட்டுகளில் கீறல் விழுந்த அதே நிறம் உள்ள உதட்டு சாயத்தை தேய்த்து ஒரு துணியால் துடைத்தால் கீறல் மறைந்துவிடும்.

வரவேற்பு அறையில் கூடிய வரையில் அனாவசியமான பொருட்களை சேர்க்காமல் சுத்தமாக வைத்திருந்தால் அதுவும் ஒருவித அழகு.

வீட்டினுள்ளே மாடிப்படிகள் கொண்ட வீடு என்றால் படிகள் ஒட்டி   எப்போதும் இரும்புக் கைப்பிடிகள் தளர்ந்து ஆடாமலும் உடைந்து போகாமல் இருப்பதை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

மாடிப்படிகளில் எந்தப்  பொருளையும் வைக்க கூடாது. பலரது வீடுகளில் பழைய பேப்பர்கள், செருப்பு, ஷீக்கள் போன்றவற்றை  படியில் வைத்திருப்பார்கள். இதனால் கால் தடுக்கி விழ வாய்ப்புண்டு. இதனை தவிருங்கள்.

வீட்டை 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டை சுத்தப் படுத்தினால் அதிகமாக சேர்ந்ததை உபயோகிக்காத பொருட்களை தகுதியானவர்களுக்கு  தானமாகவோ, விலைக்கோ கொடுத்துவிட்டால் அனாவசியமான சாமான்கள் சேர்வதை தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சமையலறை சிங்க் அடியில் ஒளிந்திருக்கும் ஆபத்து! கட்டாயம் தவிர்க்க வேண்டிய 7 பொருட்கள்!
Lifestyle articles

பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க, முதலில் சிறிது சோப்பு நீரால் நன்கு துடைத்த பிறகு இளஞ்சூடான உப்பு நீரால் துடைத்து வெயில் காயவைத்தால் பழைய நிலைக்கு வந்துவிடும்.

பாலீஷ் செய்யப்பட்ட மரச்சாமான்களின் மேல் உள்ள கறையை போக்க சிறிதளவு தண்ணீர் உடன் இரண்டு ஸ்பூன் வினிகரை கலந்து துடைத்தால் பளபளப்பாகும்.

கதவில் சில நேரம் கீழ் எண்ணெய் இல்லாமல் சத்தம் போடும் . அந்த இடத்தில் பென்சிலால் நன்கு தேய்த்துவிட்டால் சத்தம் போடாது. சிறிது எண்ணெய் ஊற்றினாலும் சத்தம் வராது.

இழுப்பைறை மேசைகைளை சுலபமாக திறந்து மூட ஓரங்களில் சிறிது சோப்பு அல்லது மெழுகு தேய்த்தால் சுலபமாக திறந்து மூடலாம்.

சுவர்களில் உள்ள சிறிய ஓட்டைகளை பற்பசை கொண்டு அடைக்கலாம். சுவரின் நிறத்தையே அந்த பற்பசைமீது அடித்தால் ஓட்டையை தேடினாலும் கிடைக்காது.

வீட்டிற்கு வெள்ளை அடிக்கும்போது கதவுகளில் உள்ள கைப்பிடிகளை ஒரு பிளாஸ்டிக் கவரை பொருத்தி கட்டிவிட்டால் வெள்ளையடிக்கும்போது பெயிண்ட் அவைகளின் மேல் விழுந்து அழுக்காகவதை தடுக்கலாம்.

சுவரில் ஆணி அடிப்பதற்கு முன் ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஒரு துண்டு  செலோபென் டேப்பை ஒட்டி ஆணிஅடித்தால் சுண்ணாம்பு பெயர்த்து வராது.

அலமாரியின் உட்பக்கத்தை வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்தால் நல்ல வெளிச்சமாக இருக்கும். துணிகளை எடுப்பதும் எளிது. இருட்டில் வரும் பூச்சிகளும் சேராது.

பருவகாலத்திற்கு ஏற்றவாறு வீட்டை சுத்தம் செய்தல் வேண்டும்.

காலநிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதற்கேற்றவாறு நாம் நம் வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும்  தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குளிர்காலங்களிலும் வெயில் காலங்களில் ஒவ்வொரு வகையான மாறுபாடுகளை நாம் உணரலாம்.

இதையும் படியுங்கள்:
பழைய பாத்திரமும் புதுசா மாறணுமா? வீட்டில இருக்க இந்த 3 பொருள் போதும்! நம்புவீர்களா?
Lifestyle articles

அதற்கு ஏற்றவாறு நாம் நம் உடலையும் நம் வீட்டையும் சுற்றுப் புறத்தையும்  தூய்மையாகவைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்கி இருப்பதால் அதில் கொசுக்கள், ஈக்கள் போன்ற நோய் ஏற்படுத்தும் கிருமிகள தங்கும். அதனால் அதனை போக்க சுத்தமாக்க வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் சேரும் குப்பைகளே வீட்டின் தூய்மை கெட முக்கிய காரணம். அதனால் வீட்டில் குப்பைகள் அதிகமாக சேராமல், குப்பைகள் போடும் கூடையில் போட்டு மூடி அவ்வப்போது சேர விடாமல் அகற்றி விடவேண்டும்.

இதிலிருந்து வரும் துர்நாற்றம் சேர்ந்து நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதால் வீட்டை தூய்மையாக வைத்து பராமரித்தால் உடல் ஆரோக்கியமும், வீடும் அழகு பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com