நிஜமான 'சூப்பர் ஹீரோ' நீங்கள்தான்!

Lifestyle articles
Lifestyle articles
Published on

சினிமா தியேட்டர், அலுவலகம், பெரிய மால்களில் உள்ள கடைகள், ரெஸ்ட் ரூம் போன்ற பொது இடங்களில் உள்ள நுழைவு வாயில் கதவுகளை திறந்து மள மளன்னு நேரா உள்ளே செல்வதுதான் நம்மில் பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் ஒரு சில பேர்கள் கதவைத் திறந்து, தனக்குப் பின்னால் எவரும் வருகிறார்களா என நின்று கவனித்துப் பின் அவர்கள் உள்ளே நுழையும் வரை கதவைப் பிடித்துக் கொண்டு நிற்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சில பேர்களிடம் காணப்படும் எட்டு விதமான தனித்துவ குணங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

மரியாதை: இவர்கள் பிறரை மதித்து நடத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பர். தனது வயது, ஸ்டேட்டஸ் மற்றும் பதவி போன்றவை எதுவாக இருந்தாலும், எல்லோரையும் சமமாக நடத்த விரும்புவார்கள். அவர்களின் இந்த மரியாதை உணர்வு, சமுதாய உறவுகளை இனிமையாக்கும்.

பிறரை கவனிக்கும் மனம்: சுற்றுப்புற நடவடிக்கைகளை கண்காணிப்பது மற்றும் தனக்குப் பின்னால் வரும் நபருக்கு தான் கதவைத் திறந்து, பிடித்து நிற்பது உதவியாக இருக்குமா என்பதை எண்ணிப்பார்க்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இவர்கள் தங்களின் அவசரத்தைவிட பிறரின் வசதிக்கே எப்பொழுதும் முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

பொறுமை (Patience): வாழ்க்கையில் அனைத்தும் உடனடியாக நடந்துவிட வேண்டும் என இவர்கள் நினைப்பதில்லை. சில நிமிட காத்திருப்பு இவர்களுக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. பொறுமை ஒரு நல்ல குணம் என்பதை இவர்கள் அறிந்திருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டை சொர்க்கமாக்க சில எளிய ஆலோசனைகள்!
Lifestyle articles

இரக்கம் மற்றும் அன்பு (compassion and kindness): இவர்கள் மற்றவர்களிடம் கருணையும் அன்பும் கொண்டு அவர்களுக்கு ஏதாவது சிறிய அளவிலான உதவியை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த உதவி, அதைப் பெறுபவருக்கு அந்த நாளை மகிழ்ச்சிகரமானதாக்க உதவும் எனவும் இவர்கள் நினைப்பார்கள்.

சமூகப் பொறுப்புணர்வு (Social Responsibility): தனி நபர்களால் உருவாக்கப்படுவதே ஒரு சமுதாயம் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். தங்களின் நல்ல நடத்தை மற்றவர்களையும் நல்ல முறையில் நடக்கத்தூண்டும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு உண்டு.

நல்ல வளர்ப்பு மற்றும் மதிப்பீடுகள்: இவர்களிடம் காணப்படும் நற்பண்புகள் பெரும்பாலும் இவர்களின் மூத்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைகளாகவே இருக்கும். பிறருக்கு உதவி செய்யும் குணம் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதையும் இவர்கள் தம் குடும்ப சூழல் மூலமே அறிந்திருப்பார்கள்.

எளிமை (Humility): இவர்கள் எப்பவுமே எளிமை விரும்பிகள். பிறருக்கு சிறு சிறு உதவிகள் செய்வதை கடமையாகக் கருதுபவர்கள். அவற்றை பெருமைப்படக் கூடிய விஷயங்களென்றெண்ணி ஒருபோதும் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
படபடக்கும் சத்தம்... பதறும் மனம்: காதுக்குள் பூச்சி நுழைந்தால் கையாள்வது எப்படி?
Lifestyle articles

நேர்மறை எண்ணங்கள் (Positive Attitude): பிறருக்கு உதவி செய்யும்போது இவர்கள் தம் மனதுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாகவே உணரக்கூடியவர்கள். உலகம், மனித இனம் வாழ்வதற்கு சிறந்த இடமாக மாறுவதற்கு இத்தகைய சிறு சிறு செயல்களே அடிப்படையாக அமையுமென அவர்கள் நம்புகிறார்கள்.

தூரத்தில் வந்து கொண்டிருப்பவருக்காக கதவைப் பிடித்துக்கொண்டு நிற்பதென்பது ஒரு சாதாரண செயலாகாது. அது அவருக்குள்ளிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடு என கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com