
பொதுவாகவே நாம் நமது வீட்டிற்கு தேவையான தளவாட சாமான்களான டிவி, பிாிட்ஜ், வாஷிங்மெஷின், சமையலறை சாதனங்கள், போன்ற அத்யாவசிய பொருட்களை சுலபத் தவணைகளில் வாங்கிக் குவிப்பது ஒருபறம்.
அதேபோல வசதிக்கேற்ப இருசக்கரவாகனங்கள், மிதி வண்டிகள் என்பது போன்ற இனங்களும் அடங்கும்.
சரி அதற்கென்ன வீட்டிற்கு தேவையானதுதான் ஆனால் அவற்றையெல்லாம் சரிவர பராமரிக்காமல் நமது அலட்சியப் போக்கினால் மேற்படி உபகரணங்கள் விரைவிலேயே பழுதாகிவிடுகிறதே! அவசரகதியின் நோக்கத்தில் உடனே அதை மூலையில் தூக்கி வீசிவிடுவதும், அதற்குப்பதில் புதிய பொருளை வாங்குவதும் பல குடும்பங்களில் நடைபெறுவதும் வாடிக்கையான ஒன்று.
சரி விஷயத்திற்கு வருவோம்.
எப்படி பராமரிப்பது? அது நம்கையில்தான் உள்ளது. டிவி, பிாிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, கிரைண்டர், இவைகளை குறைவான மின்சாரம் வரும் நிலையில் பயன்படுத்தக்கூடாது.
அப்படி அந்த பொருட்கள் ஒடிக்கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டுவிட்டால் உடனடியாக நாம் அலுப்பு பாா்க்காமல் தொடர்புடைய சுவிட்ச் பட்டனை ஆப் செய்யவேண்டும். கரண்ட் வந்தால் ஓடும் என நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. அது ஆபத்து.
அதேபோல குடிதண்ணீா் போடும்போதும் கடைபிடித்தல் நல்லது. இது போன்ற விஷயங்களில் நாம் கவனமுடன் செயல்படவேண்டும்.
அதேபோல அனைத்து பொருட்களையும் வாராவாரம் சரிவர துடைத்து வைப்பது மிகவும் சிறப்பான செயலாகும்.
இருசக்கர வாகனங்களை நன்கு துடைத்து காற்று குறைவாய் இருந்தால் போதுமான ஏா் பிடித்து வைப்பதும் நல்லதே.
அவ்வப்போது இன்வெட்டர் கருவி, மற்றும் பேட்டரியை நன்கு துடைத்து வைத்து அதற்கான டிஸ்டில்டு வாட்டர் வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ளலாம்.
சிலர் வீட்டிலேயே அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி துணிகளை அயர்ன் செய்வதும் உண்டு அதை ஞாயிறு தினமே செய்து முடித்துவிடுவது நல்லது.
வாராவாரம் மின் விசிறிகளை துடைத்து வைப்பதும் நல்லதே!
வீட்டில் உள்ள சைக்கிள்களை குழந்தைகளை விட்டு துடைத்து வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் பொறுப்பு வரும்.
வீட்டின் ஜன்னல் கதவு, வாசல் கதவுகள், அதே போல ரும் கதவுகளை நன்கு துடைப்பதும் நல்லது. கப்போா்டுகளில் பழைய பேப்பரை மாற்றிவிடும் பணிகளைமுடிந்தால் மாமியார் மேற்கொள்ளலாம். வாசல் கதவுகள் மற்றும் ஏனையகதவு தாழ்ப்பாள்களில் எண்ணைய் விட்டு துடைத்துவைத்தால் துருப்பிடிக்காது.
எக்காரணம் கொண்டும் கரண்ட் இல்லாத நேரத்தில் இன்வெட்டர் மின்சாரத்தில் மிக்சி, டிவியை இயங்க வைக்கவேண்டாம்.
அதேபோல இடி மின்னல் காற்று பலமாக அடித்து மழை பெய்தால் தொலைக்காட்சியை பாா்க்காமல் நிறுத்துவே சாலச்சிறந்த ஒன்று.
ஒரு வாரத்திற்குண்டான காய்கறிகளை ஞாயிறு தினத்தில் வாங்கி வைத்துவிடலாம்.
அனைவரும் ஞாயிறு தினங்களில் ஒன்றாக கூடிப்பேசி அவரவர் எண்ணங்களை பகிா்ந்து கொள்ளலாம்.
தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிக்குவிப்பதும், பட்ஜெட்டை மீறிய விஷயமே!
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்களை வாங்கி அட்டைப்போட்டு வைக்கலாம்.
பூஜை அறையில் மாவு விளக்கு, வெள்ளிவிளக்கு, அகல்விளக்கு, போன்றவைகளை பயன்படுத்தும் நாம் அவைகளை சுத்தம்செய்து வைக்கலாம்.
இப்படி நமது வீட்டில் பயன்பாட்டில் உள்ள விலையுயர்ந்த, அல்லது சுமாா் விலையினான பொருட்களை நாம் பயன்படுத்தும்போது கவனமாக பொறுப்பாக கையாளும் வித்தை தொிந்தாலே பொருட்கள் நீண்ட நாட்கள் நமக்கு உபயோகமாக இருக்கும்.
அதேபோல உணவு வகைகளிலும் ஆரோக்கிய உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்தாலே நமது ஹெல்த நமக்கு வெல்த்தாக இருக்கும்.
நாம் கையாளும் விதத்தில்தான் பொருட்களின் ஆயுள் கூடுதலாகும் என்பதை உணருங்கள். நமது ஹெல்த்தை பராமரிக்க மருந்து மாத்திரைகள் கொடுக்க, மருத்துவர்கள் இருப்பதுபோல நமக்கு நல்லவிதமாய் உழைத்துவரும் வீட்டு உபயோக பொருட்கள் நீண்ட நாள் உழைக்க நாமே நல்ல மருத்துவர்போல செயல்படலாமே! உங்களை யாா் தடுப்பாா்கள்?