
ஃபெங் சுயி வாஸ்துவின்படி உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க, மார்பிள் குயின் போத்தோஸ் (Marble Queen Pothos) செடியை வளர்க்கலாம். இதன் விஞ்ஞானப் பெயர் epiremnu aureum ஆகும். இதய வடிவில் உள்ள இதன் இலைகள் கண்களைப் பறிக்கும் பச்சை நிறத்தில் இருக்கும். நல்ல பச்சை நிறம் மற்றும் க்ரீமி வெள்ளை நிறமும் கலந்து இருக்கும்.
இது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும். வீடுகளில் தொட்டியில் வைத்து தொங்க விட அலங்காரமாகவும் காணப்படும். இதன் வேர்கள் மற்றும் நிறமும் வீட்டிற்கே அழகை சேர்க்கும். இந்தச் செடி இருட்டு மற்றும் வெளிச்சம் என இரண்டு இடங்களிலும் வளரக்கூடியது. இந்தத் தாவரம் செல்வச் செழிப்பை அதிகரிக்கவும் மற்றும் சக்தியை மேம்படுத்திக்கூடிய பண்புகளைப் பெற்றதாகும்.
ஃபெங் சுயி வாஸ்துவின்படி இந்தச் செடி செல்வம், ஆரோக்கியம் மற்றும் நேர்மறை ஆற்றல்களை ஊக்குவிக்கக்கூடியதாக நம்பப்படுகிறது. இந்தச் செடி ஏந்த உலோகமாக இருந்தாலும் மற்றும் மரச் சாமான்களாக இருந்தாலும் இணையக் கூடியது. இதனால் இச்செடி இருக்கும் இடம் நல்ல மனநிலையை அளிக்கும்.
இந்தச் செடியின் அசுர வளர்ச்சி வீட்டில் செல்வம் அதிகரிக்க உதவி செய்கிறது. இச்செடியை செல்வச் செழிப்புக்கான வீட்டின் தென் கிழக்கு திசையில் வைப்பது மிகச் சிறந்தது. அலுவலகங்களிலும் இதை வைத்துப் பயன் பெறலாம். இச்செடி அமைதியான சூழலை ஊக்குவிப்பதால் நாம் வசிக்கும் மற்றும் தியானம் செய்யும் இடங்களிலும் வைப்பது மிகவும் சிறந்தது.
அதேபோல், வீட்டின் கிழக்குப் பகுதியிலும் இச்செடியை வைத்துப் பராமரிக்கலாம். வீட்டின் வரவேற்பறையில் இந்தச் செடியை வைப்பதன் மூலம் வீட்டிற்கு வரும் விருந்தினருடன் நல்ல நேர்மறையான உரையாடலை நடத்த முடியும்.
இச்செடிக்கு அதிகம் தண்ணீர் தேவையில்லை. வாரம் ஒருமுறை விட்டால் போதுமானது. இச்செடி வீட்டிற்கு செல்வச் செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தைத் தருவதோடு, காற்றில் உள்ள நச்சான ஃபார்மல்டீஹைடை நீக்குகிறது. இதனால் காற்று சுத்தமாகிறது. அதிக செலவு மற்றும் பராமரிப்பு இல்லாத இந்தச் செடி, இருக்கும் இடத்தின் அழகை மேம்படுத்துகிறது. இதைப் பார்ப்பதால் மனச் சோர்வு நீங்கி, புத்துணர்வையும் சந்தோஷத்தையும் தரக்கூடியது.