கூடி வாழ்ந்தால் மட்டும் நன்மை இல்லை… கூடி சேர்ந்து சாப்பிட்டாலும் கோடி நன்மை..!

Living together has many advantages!
indian happy family
Published on

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வசனத்தை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். நம் முன்னோர்கள் ஏன் அப்படி சொன்னார்கள்?

ஒன்றாக சேர்ந்து வாழ்வதால் பல நன்மைகள் இருக்கின்றன. சில நேரங்களில் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலிருக்கும் மற்றவர்கள் நம்மை கவனித்து கொள்வார்கள். தேவையான உதவியும் செய்வார்கள். கைக்குழந்தை இருந்தால் அனைவரும் சிறிது சிறிது நேரத்திற்கு பார்த்து கொள்வார்கள். வீட்டு வேலைகளும் பகிரப்படும்.

எப்போதாவது குடும்பத்திற்குள் ஏதாவது மனஸ்தாபம் வந்து சண்டை வந்தால் கூட அந்த விஷயம் அங்கேயே முடிந்து விடும். வீட்டில் உள்ள தாத்தாவே பாட்டியோ வந்து, சரி சரி போதும், போய் வேலையைப் பாருங்கள் என்று ஜோராக கூச்சிலிடுவார்கள். வீட்டில் நிறைய பேர் இருக்கும்போது வேலைகளும் அதிகமாக இருக்கும், ஆகவே நடந்ததை மறுபடியும் நினைத்து பார்க்ககூட நேரமிருக்காது.

இப்போது உள்ளதுபோல் அப்போதெல்லாம் தனித்தனி bed room கிடையாது, ஆகவே யாரும் இரவு நேரத்தில் குசுகுசு வென நடந்ததை பேசவும் மாட்டார்கள். அதிக வேலையின் காரணமாக படுத்தவுடனேயே கண்கள் மூடிவிடும். நீங்களே பாருங்கள், ஒன்றாக சேர்ந்து இருப்பதால் எத்தனை பயன் என்று.

indian family eating food
indian family eating food

அடுத்து, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன நன்மை:

பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, மனநிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.

ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது மனநிறைவு ஏற்படுகிறது. ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது கிடைக்கிற அந்த சந்தோஷம், திருப்தி எதிலும் கிடைக்காது. எல்லோரும் சேர்ந்து சிரித்து கொண்டே சாப்பிட இன்னும் ஆனந்தம்..

நீங்கள் கேட்கலாம், இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரே இடத்தில் ஒன்றாக இருப்பது சாத்தியமா..என்று?

சாத்தியமில்லை. ஆனால் குறைந்தபட்சம் கணவன் மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிடலாமே.. பகல் நேரத்தில் முடியாது, இரவு நேரத்தில் சாப்பிடலாமே.

இதையும் படியுங்கள்:
ஆன்மா புனிதமானது என்பதை தீர்மானிப்பவை எவை என்பது தெரியுமா?
Living together has many advantages!

குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை களுக்கும் எல்லா உணவையும் சாப்பிடும் வழக்கம் வரும். எனக்கு அது பிடிக்கவில்லை, இது பிடிக்கவில்லை என்று கூற மாட்டார்கள், நீங்கள் எதை எல்லாம் சாப்பிடிகிறீர்களோ, எல்லாவற்றையும் அவர்களும் உண்பார்கள்.

இதில் இன்னுமொரு plus point இருக்கிறது. குழந்தைகள் இந்த மாதிரி சேர்ந்து சாப்பிடும் போது மனதளவில் தெம்பாக இருப்பார்கள், மனதில் உள்ள பிரச்னையை அல்லது சந்தேகத்தை நம்மிடம் தயக்கமில்லாமல் கேட்க கூடிய சூழ்நிலையை இது உருவாக்கி கொடுக்கும். நாமும் எதாவது அவர்களிடம் கேட்க வேண்டி இருந்தால் அழகாக பொறுமையாக சாப்பிட்டு கொண்டே தட்டி கொடுத்து கேட்கலாம்.

இது மட்டுமா தம்பி, இன்னும் நிறைய பலன் இருக்கு கேளு…

ஆபீஸில் கூட lunch நேரத்தில் சேர்ந்து சாப்பிடும்போது நமக்குள்ள இருக்கிற பாகுபாடு விலகி பரஸ்பரம் அதிகமாகும். சில பேர் எதாவது problem இருந்தால் lunch சாப்பிடும்போது மெதுவாக நிதானமாக manager கிட்ட சொல்லுவார்கள், சத்தமில்லாமல் problem solve ஆகிவிடும்.

இதையும் படியுங்கள்:
எண் 12க்கு இத்தனை சிறப்பா? அடேங்கப்பா!
Living together has many advantages!

அதனால்தான் நீங்கள் பார்த்திருக்கிலாம் முக்கியமாக mnc like accenture, cognizant, infosys etc etc எல்லாம் மாதத்திற்கு ஒருமுறை lunch with team or dinner with team என்று வெளியே சென்று சாப்பிடுவார்கள். அதில் எத்தனை மாற்றம் கிடைக்கிறது, தெரியுமா.

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி,சகோதரன், சகோதரி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழ்வது இப்போதைக்கு சாத்தியமாகாது. குறைந்தபட்சம் அவரவர்கள் அவர்களின் மனைவி மக்களோடு சேர்ந்து சாப்பிடுங்கள். இன்பத்தோடும் அமைதியோடும் வாழ அது வழி வகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com