பல்லிகளின் பதுங்கு குழிகள்: உங்கள் வீட்டில் பல்லி முட்டையிடும் 'டாப் 5'இடங்கள்!

Lizard egg
Lizard egg
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

பொதுவாக பல்லிகள் மனித நடமாட்டம் இல்லாத, இருட்டான மற்றும் பாதுகாப்பான இடங்களையே முட்டையிடத் தேர்ந்தெடுக்கின்றன. அந்த இடங்களைப் பற்றி பார்க்கலாம்!

அலமாரிகளின் பின்புறம் மற்றும் இடுக்குகள்: மர அலமாரிகள் (Wardrobes) அல்லது சமையலறை அலமாரிகளுக்குப் பின்னால் உள்ள சிறிய இடைவெளிகளில் பல்லிகள் முட்டையிடும். இவை பெரும்பாலும் மனிதர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை.

சுவரில் தொங்கும் புகைப்படங்கள் மற்றும் கடிகாரங்கள்: சுவரில் மாட்டப்பட்டுள்ள போட்டோ பிரேம்கள் அல்லது கடிகாரங்களுக்குப் பின்னால் உள்ள இருட்டான பகுதி பல்லிகளுக்கு மிகவும் பிடித்தமான இடம்.

சுவிட்ச் பாக்ஸ் மற்றும் மின்சார பெட்டிகள்: மின்சார மீட்டர்கள் அல்லது பழைய சுவிட்ச் பாக்ஸ்களுக்குள் இருக்கும் வெப்பம் மற்றும் இருட்டு பல்லி முட்டைகள் பொரிவதற்கு ஏற்ற சூழலைத்தருகின்றன.

பழைய பொருட்கள் சேமிக்கும் இடம்: வீட்டில் பயன்படுத்தாத அட்டைப் பெட்டிகள் (Cardboard boxes), பழைய துணிகள் அல்லது குப்பை போன்ற பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்.

குழாய்கள் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்கள்: குளியலறை அல்லது சமையலறையில் உள்ள சிங்க் (Sink) அடியில் இருக்கும் குழாய் இடுக்குகள்.

பல்லி முட்டைகள் பொதுவாக சிறியதாகவும், வெள்ளை நிறத்திலும், வட்ட வடிவிலோ அல்லது நீள்வட்ட வடிவிலோ இருக்கும். இவை பெரும்பாலும் ஒட்டும் தன்மையுடன் இருப்பதால், சுவர்களிலோ அல்லது பொருட்களின் பின்புறமோ ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரே இடத்தில் 2 முதல் 3 முட்டைகள் வரை இட வாய்ப்புள்ளது.

பல்லிகள் வீட்டில் வராமல் தடுப்பதற்கான இயற்கை வழிகள்

முட்டை ஓடுகள் (Eggshells): பல்லிகளுக்கு முட்டை ஓடுகளின் வாசனை சுத்தமாகப் பிடிக்காது. அதனால் முட்டை ஓடுகளைக் கழுவிவிட்டு, பல்லிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் (ஜன்னல்கள், கதவு ஓரங்கள்) வைக்கவும். அந்த இடத்தில் ஏதோ பெரிய உயிரினம் இருப்பதாக நினைத்து பல்லிகள் பயந்து ஓடிவிடும்.

வெங்காயம் மற்றும் பூண்டு (Onion & Garlic): வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள வாசனையும், அதில் உள்ள சல்பர் (Sulfur) தன்மையும் பல்லிகளைத் தற்காலிகமாகப் பாதிக்கும். அதனால் பூண்டுப்பற்களை ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம் அல்லது வெங்காயச் சாற்றைத் தண்ணீரில் கலந்து சுவர்களில் தெளிக்கலாம்.

மயில் தோகை (Peacock Feathers): பல்லிகளின் இயற்கை எதிரி பறவைகள். மயில் தோகையைப் பார்த்தால் ஏதோ பெரிய பறவை இருப்பதாக எண்ணி பல்லிகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடும். எனவே வரவேற்பு அறையிலோ அல்லது பல்லிகள் வரும் இடங்களிலோ மயில் தோகையை அலங்காரமாக வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? இந்த சூப்பரான இண்டக்ஷன் அடுப்புகளில் ஒன்றை உடனே வாங்குங்கள்!
Lizard egg

காபி தூள் மற்றும் புகையிலை (Coffee & Tobacco): இது பல்லிகளுக்கு ஒரு நச்சுப் பொருள் போலச் செயல்படும். எனவே காபி தூளையும் புகையிலையையும் கலந்து சிறிய உருண்டைகளாகச் செய்து, பல்லிகள் பதுங்கும் இடங்களில் வைக்கவும். இதைச் சாப்பிட்டால் அல்லது நுகர்ந்தால் பல்லிகள் இறக்கக்கூடும் அல்லது ஓடிவிடும்.

மிளகுத் தூள் ஸ்ப்ரே (Pepper Spray): பல்லிகளின் தோலில் மிளகுத் தூள் பட்டால் எரிச்சல் ஏற்படும்.மிளகுத் தூளைத் தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும். பல்லிகள் இருக்கும் இடங்களில் இதைத் தெளித்தால், அந்த எரிச்சல் தாங்காமல் அவை வெளியேறிவிடும்.

தவிர்க்க வேண்டியவை

பூச்சிகள் வெளிச்சத்திற்கு வரும், பூச்சிகளைச் சாப்பிட பல்லிகள் வரும். எனவே, தேவையற்ற விளக்குகளை அணைத்து வைக்கவும். சமையலறை மற்றும் குளியலறையை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருக்கவும். வீட்டில் தேவையற்ற அட்டைப் பெட்டிகள் மற்றும் குப்பைகளைச் சேர்த்து வைக்க வேண்டாம். இவற்றை நடைமுறை படுத்தி பல்லிகளை விரட்டி பயமின்றி வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com