ஆபத்து! உங்கள் வீட்டு கேஸ் சிலிண்டர் எப்போது காலாவதியாகிறது தெரியுமா?

காலாவதியான சிலிண்டர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளும், அவற்றை அடையாளம் காணும் வழியும்.
கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder) கழுத்துப் பகுதியில் உள்ள மூன்று இரும்புப் பட்டைகளில் ஒன்றில் D-26, A-27 போன்ற குறியீடுகள் அச்சிடப்பட்டிருக்கும். இந்தக் குறியீடு அந்த சிலிண்டரின் சோதனை செய்ய வேண்டிய காலக்கெடுவை (Testing Due Date) குறிக்கிறது. இது சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய அரசு அமைப்புகளால் பயன்படுத்தப்படும் ஒரு காலாவதி தேதியாகும்.

உண்மையில் சிலிண்டர்களுக்கு என்று தனியாகக் காலாவதி தேதி கிடையாது. ஆனால் அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சோதனை நடத்தப்படும். சிலிண்டர்கள் அதிக அழுத்தத்தில் எரிவாயுவை வைத்திருப்பதால் அவை குறிப்பிட்ட கால இடைவெளியில், பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயமாக பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதனைப் புரிந்து கொள்வது மிகவும் எளிது. இந்த குறியீட்டைப் புரிந்து கொண்டு காலாவதி தேதியைக் கண்டறிந்து கொள்வது தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

இந்தக் குறியீடு இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒரு ஆங்கில எழுத்து மற்றும் இரண்டு எண்கள் இதில் காணப்படும்.

ஆங்கில எழுத்துக்கள் (மாதங்கள்): 

ஆண்டின் 12 மாதங்கள், 3 மாதங்கள் கொண்ட 4 காலாண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

*A: ஜனவரி முதல் மார்ச் வரை

*B: ஏப்ரல் முதல் ஜூன் வரை

*C: ஜூலை முதல் செப்டம்பர் வரை

*D: அக்டோபர் முதல் டிசம்பர் வரை 

இரண்டு எண்கள் (ஆண்டு): 

எழுத்துக்கு அடுத்து வரும் இரண்டு எண்கள், அந்த சிலண்டரைச் சோதனை செய்ய வேண்டிய ஆண்டைக் குறிக்கும். உதாரணத்திற்கு 26 என்பது 2026 ஆம் ஆண்டையும், 27 என்பது 2027 ஆம் ஆண்டையும் குறிக்கும்.

D-26 என்பது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் இந்த சிலிண்டர் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

A-27 என்பது 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று பொருள். 

இதையும் படியுங்கள்:
உஷார்! கேஸ் சிலிண்டர் அருகில் இந்த 1 பொருள் இருந்தால் பெரும் ஆபத்து!
கேஸ் சிலிண்டர்

காலாவதி தேதியை பார்ப்பது எப்படி? 

புதிய சிலிண்டர் வாங்கும் போது அதன் மேல் வளையத்தைத் தாங்கி நிற்கும் 3 இரும்புப் பட்டைகளில் உட்புறமாகப் பெயிண்ட் மூலம் எழுதப்பட்டிருக்கும் குறியீட்டைப் பாருங்கள். நடப்பு ஆண்டையும் மாதத்தையும் சிலிண்டரில் உள்ள குறியீட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தற்போதைய தேதியை விட முந்தைய ஆண்டோ அல்லது மாதமோ குறியீட்டில் இருந்தால் அந்த சிலிண்டரின் சோதனைத் தேதி முடிந்து விட்டது என்று அர்த்தம்.

அதாவது நம் வீட்டிற்கு புதிய சிலிண்டர் வரும்பொழுது நமக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டரில் உள்ள ஆண்டை கவனிக்க வேண்டும். நடப்பு ஆண்டு மற்றும் மாதத்தை விட அந்தக் குறியீடு கடந்த காலமாக இருந்தால், அந்த சிலிண்டரின் சோதனைத் தேதி முடிந்துவிட்டது (Expired) என்று அர்த்தம். உதாரணத்திற்கு தற்போதைய தேதி நவம்பர் 2026 என்பதால் நம் சிலிண்டரில் A-26, B-26 அல்லது C-26 என்று இருந்தால் அதன் சோதனைக்கான காலக்கெடு முடிந்து விட்டது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்Gemini image

அப்படிப்பட்ட சிலிண்டர்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்பதால் அவற்றை வாங்குவதைத் தவிர்த்து, நம் கேஸ் ஏஜென்சியிடம் மாற்றித் தருமாறு கேட்க வேண்டும். அவை காலாவதி ஆனவை என்பதால் கசிவு ஏற்படுவதற்கும், வெடிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
மழையில வயர் அறுந்து விழுந்தா இத மட்டும் செய்யாதீங்க... உசுருக்கே ஆபத்து!
கேஸ் சிலிண்டர்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவல் படி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் வலுவான எஃகு மூலம் தயாரிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தான் நம்முடைய பயன்பாட்டிற்கு வருகின்றன. இருப்பினும் காலப்போக்கில் அவற்றில் ஏற்படும் தேய்மானத்தைக் கண்டறிவதற்கு அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது கட்டாயமாகும்.

புதிய சிலிண்டருக்கு முதல் சோதனை 10 ஆண்டுகள் கழித்தும், அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த சோதனை மற்றும் வண்ணப்பூச்சுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனைக்கு அனுப்பப்படும் பொழுது தகுதியற்றவை பயன்பாட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகின்றன. தகுதியான சிலிண்டர்களோ புதிய சோதனை தேதியுடன் மீண்டும் விநியோகத்திற்கு வருகின்றன. எனவே நாம் சிலிண்டர் வாங்கும் போது மறக்காமல் சிலிண்டரில் உள்ள தேதி மற்றும் வருடத்தை கவனித்து வாங்க வேண்டும்.

காலாவதியான சிலிண்டர்களால் ஏற்படும் மறைமுக ஆபத்துகளை உணர்ந்து, உடனடியாக விழிப்புடன் செயல்படும் எச்சரிக்கை உணர்வைப் பெறும்.