பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய திட்டமிடல்கள்..!

school-going children
School students
Published on

ந்துவிட்டது ஜூன் மாதம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே படித்த பிள்ளைகளே, இரண்டு மாத விடுமுறைக்கு பிறகு பள்ளி செல்ல முரண்டு பிடிக்கும். முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் பயம் போய் பள்ளியை ஒரு மகிழ்ச்சியான இடமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.

யூனிஃபார்ம், பேக், லஞ்ச் பாக்ஸ் என எல்லாம் வாங்கி ரெடியானாலும் சில அம்மாக்களுக்கு, பள்ளிக்கூடம் நம் குழந்தைக்கு பிடிக்குமா? புதிய பிள்ளைகளோடு அனுசரித்து செல்வார்களா? சண்டை போடுவானா? ஒழுங்காக சாப்பிடுவானா? என்றெல்லாம் ஏகப்பட்ட கவலைகள் !

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இனிய அனுபவமாக மாற்றுவது அவசியம். பெற்றோர்கள் அதற்கு சிலவற்றைதிட்டமிட்டு செய்தால் கவலையின்றி இருக்கலாம்.

பள்ளி திறப்பதற்கு சில நாட்கள் முன்பாகவே பிள்ளைகள் தூங்கி எழும்பும் நேரத்தை மாற்ற பழக்கப்படுத்துங்கள். திடீரென காலை 6:00 மணிக்கு எழுப்பிவிட்டால் எழுவதற்கு கஷ்டமாக இருக்கும். அதனால் முதல் நாளே குழந்தைகளிடம் சொல்லி எழ வைக்கவேண்டும்.

குழந்தை முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது கூடவே செல்லுங்கள். பள்ளி வளாகத்தை குழந்தை பழகிக்கொள்ள நீங்கள் உதவி செய்யுங்கள் .பள்ளி அனுபவம் பற்றிஅவர்களுடன் உரையாடுங்கள்:

டைம் டேபிள் போட்டு ஹோம் ஒர்க் செய்யவும், விளையாடவும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். படிக்கவும் எப்படி நேரத்தை பிடித்துக்கொள்வது என அவர்களுக்கு திட்டமிட்டு உதவுங்கள்.

ஒவ்வொரு நாளும் இன்று முடிக்க வேண்டிய வேலை எனஏதாவது இருந்தால் அதை நிச்சயம் முடித்துவிடும் ஒழுங்குக்கு அவர்களை பழக்கப்படுத்துங்கள்.

பள்ளியில் நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது எப்படி என்பதை சொல்லிக் கொடுங்கள். விட்டுக் கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் நண்பர்களோடு பழகும் சமூக அனுபவங்களை அவர்கள் பெறுவதற்கு வழி காட்டுங்கள்.

வீட்டில் குழந்தைகளின் ஸ்கூல் பேக் புத்தகங்களை வைக்க போதுமான இடம் ஒதுக்கி கொடுங்கள். அவர்கள் படிக்கவும், ஹோம் ஒர்க் செய்யவும், போதுமான வெளிச்சம் உள்ள இடங்களை கொடுங்கள்.

எரிச்சலாகவோ விளையாட்டுக்காகவோ பள்ளியைப் பற்றிய பயமுறுத்தும் விதமாக எதுவும் சொல்லக்கூடாது. ஏதாவது தவறு செய்தால் டீச்சர் உன்னை அடி பின்னிடுவாங்க, என சொல்வது ஆபத்தானது. பள்ளி என்பது ஒரு சித்திரவதை கூடம் போலவும் மனதில் பதிந்துவிடும் ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பயஉணர்வை ஏற்படுத்தக் கூடாது.

பள்ளியைப் பற்றிய மகிழ்ச்சியான சிந்தனைகள் குழந்தைகள் மனதில் உருவாக வேண்டும். அதற்கு கல்வி பற்றிய நல்ல விஷயங்களை அவர்கள் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பள்ளிக்கு செல்வது ஜாலியான புதிய அனுபவம், நண்பர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள். அவர்களோடு ஆடலாம் ,, விளையாடலாம் பள்ளிக்கு சென்ற பின்பு நீ வேகமாக வளருவாய், நீங்கள் எங்களைப்போல வளர்ந்து நல்ல வேலைக்கு செல்லலாம் என்றெல்லாம் உற்சாகப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக அம்மாவோட நெருக்கமாக இருக்கும் சிறிது நேரம் அம்மாவை பிரிவது அவர்களுக்கு கஷ்டமான அனுபவம். அதனால்தான் பள்ளிக்கு செல்லும் நாட்களில் இந்த பிரிவை நினைத்து அழுகின்றன. பள்ளியில் சேர்க்கும் முன்பே அவர்கள் இப்படி தனியாக இருக்க பழகவேண்டும் பொறுப்பான பாதுகாப்பில் குழந்தையை விட்டு விட்டு சில மணி நேரங்கள் எங்காவது போய் வருவது பிரிந்து கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்யவேண்டும்.

இதையும் படியுங்கள்:
பணியாளர்கள் எதிர்பார்க்கும் இந்த 8 குணாதிசயங்களும் இருப்பவரே நல்ல பாஸ்!
school-going children

குழந்தைகளிடம் பொறுமையையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் உருவாக்குங்கள். பள்ளியில் அதுதான் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும். ஏதோ ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து எல்லா குழந்தைகளையும் போய் நம் குழந்தையை அனுப்பி வைத்தோம், என்று இருக்க வேண்டாம். குழந்தைக்கு கல்வி போலவே ஒழுக்கம், பாதுகாப்பும் முக்கியம். எதிலும் அக்கறை காட்டும் பள்ளியில் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

ஒவ்வொரு பொருளையும் எங்கேயோ வைத்துவிட்டு தேடாமல் அவர்களின் பொருட்களை எங்கே வைப்பது? என இடம் ஒதுக்கி அங்கேயே வழக்கமாக வைப்பதற்கு பழக்கப்படுத்துங்கள்.

மண்ணிலிருந்து விடுதிற வேகம் சில நிமிடங்கள் இன்றைய நாள் பற்றி உரையாடுங்கள். அதன் பின் சாப்பிட ஏதாவது கொடுத்து அவர்களை சிறிது நேரம் விளையாடவிட்டு, ஹோம் ஒர்க் செய்ய பழக்குங்கள்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்க செல்வதை வழக்கமாக்குங்கள். போதுமான ஓய்வு கிடைத்தால்தான் அவர்களால் மறுநாள் பள்ளியில் உற்சாகமாக இருக்க முடியும்.

நீங்கள் முடிக்க வேண்டிய ஆஃபீஸ் வேலை ஏதாவது இருந்தால் அதை குழந்தைகளோடு உட்கார்ந்து செய்யுங்கள் அதை பார்த்து குழந்தையும் ஹோம் ஒர்க் செய்யும்.

பள்ளிப் பேருந்து அல்லது ஆட்டோவில் பள்ளிக்கு சென்று திரும்பும் குழந்தைகள் என்றால் ஒருவேளை பேருந்து அல்ல ஆட்டோவை தவிரவிட்டால் எப்படி வீட்டுக்கு திரும்புவது என்பது பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் யாரிடம் உதவி கேட்பது என்ன தொலைபேசி எண்களையும் கொடுங்கள் அவசர தேவைக்கு சிறிது பணம் அவர்களிடம் கொடுத்து வையுங்கள்.

மதிய உணவு, தண்ணீர் சரியாக பள்ளியில் சாப்பிடுகிறார்களா? குடிக்கிறார்களா? என்பதை மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் கவனியுங்கள்.

உங்கள் குழந்தை முதல் நாள் பள்ளியில் அடியெடுத்து வைக்கும்போதே இன்றைய போட்டி நிறைந்த உலகத்திற்கு அதுவும் பந்தயதில் குதித்துவிடுகிறது. பள்ளியில் தாக்கு பிடிக்க தளறாத மனமும், கடும் உழைப்பும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் புரிந்து செயல்படும் ஆற்றலும், தோல்வியைக் கண்டு துவளாத மனோதிடமும் அர்களுக்கு தேவை.

இதையும் படியுங்கள்:
கதவு தாழ்ப்பாள் போடும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
school-going children

அவை இயல்பாக வளர நீங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். இதனை எல்லாம் நன்றாக தெரிந்து புரிந்துகொண்டு பெற்றோர்கள் புதிதாக பள்ளியில் சேர்க்கும் போதும் அடுத்த வகுப்புக்கு குழந்தைகள் செல்லும் போதும் அவர்களை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்து அவர்களை படிக்க வையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com