வெறும் 10 நிமிட மாற்றத்தில் உங்கள் வீட்டை அரண்மனை போல மாற்றலாம்!

Make the house like a palace
Make the house like a palace
Updated on

ரு சிலரது வீடுகளுக்கு சென்றால், அவர்கள் வீட்டை அலங்கரிக்கும் பொருட்களைப் பார்த்தால் மிகப் பிரமிப்பாகவும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும். ஒவ்வொரு பொருளையும் கலைநயத்துடன் வைத்து இருப்பார்கள். அவ்வாறு நம் வீட்டையும் மாற்ற முடியும். அதற்கு கொஞ்சம் மெனக்கெடல் வேண்டும். ஷாப்பிங் செல்லும்போது கிடைக்கும் அழகான பொம்மைகள் மற்றும் பொருட்களை வாங்க கொஞ்சம் நேரம் ஒதுக்கவேண்டும்.

அதேபோல் நம் வீட்டில் உள்ள பல பொருட்களை சரியான இடத்தில் வைத்தால் அதன் மதிப்பு உயரும்.

வீட்டின் வரவேற்பறையில் ஒரு மர ஊஞ்சலை அமைத்து வைக்கலாம்.

இரண்டு அல்லது நான்கு பெரிய தொட்டிகளில் இன்டோர் செடிகளை வைத்தால் அறை அழகாக இருக்கும். அங்கங்கே செடிகளை தொட்டிகளில் தொங்கவிடலாம்.

முன் அறையின் அழகை உயர்த்தும் வகையில் வண்ணக் கூழாங்கற்களை பரப்பிய கண்ணாடி காபி மேசையை வைத்துக்கொள்ளலாம்.

சோபா செட்களுக்கு நம் வீட்டின் சுவர்களுக்கு பொருந்தும் நிறத்தில் கவர்களைத் தேர்ந்தெடுத்து போடவேண்டும்.

அதன் சைட் டேபிள்களில் சிறிய பூந்தொட்டிகள் மற்றும் சிறிய பித்தளை சிற்பங்களை வைத்துக்கொள்ளலாம்.

சோபாவின் பின்புறம் உள்ள சுவரில் கலை நயமிக்க ஃபிரேம் கொண்ட புகைப்படங்களை மாட்டி வைக்கலாம்.

இரண்டுக்கும் மேற்பட்ட நாற்காலிகளை வைத்து, அதில் வண்ண வண்ண சாய்வு தலையணைகளை போடலாம்.

தரைக்கம்பளம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அது சோபாவின் நிறத்திற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். தரையில் உள்ள டைல்ஸ்க்கும் மேட்ச் ஆக இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனமே மாமருந்து: அமைதியும் நிதானமும் தரும் ஆச்சரியமான மாற்றங்கள்!
Make the house like a palace

வீட்டின் முன் அறையில் மரத்தாலான சாய்வு நாற்காலி மற்றும் அழகான வேலைப்பாடு கொண்ட மர அலமாரி அல்லது மர மேசை வைத்து, அதன் மேல் சில புத்தகங்களை வைத்து அந்த அறையின் தோற்றத்தையே மாற்றிவிடலாம்.

சரியான வண்ணத்தில் வேலைப்பாடு கொண்ட மிதியடிகள் கூட அந்த இடத்தை மெருகேற்றும்.

சாப்பாட்டு மேசையில் பழங்கள் வைக்க அழகான கூடைகள் வாங்கி வைக்கலாம்.

வண்ணமிகு காபிக் குவளைகள், பீங்கான் பொருட்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அழகுபடுத்தலாம்.

சாப்பாட்டு மேசையின் மேலே குறைந்த ஒளி தரும் தொங்கும் சரவிளக்குகளை பொருத்துவதால், கான்டில் லைட் டின்னர் சாப்பிடுவது போன்ற உணர்வு தோன்றச்செய்யலாம்.

வித்தியாசமான வடிவங்களில் ஸ்பூன் ஹோல்டர்கள் வாங்கி வைக்கலாம்.

கை கழுவும் இடத்திலும் துண்டுகளை போட அழகான பொம்மை வடிவங்கள் கிடைக்கின்றன. அவற்றை அங்கே வைக்கலாம்.

இதை எல்லாம் செய்த பின் பாருங்கள், உங்கள் வீடும் தேவலோகம் போல காட்சி அளிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com