

புதுத் துணிகளை வாங்கும்போது அதன் லேபிளில் தண்ணீர் தொட்டி, முக்கோணம், சதுரம் போன்ற சின்னங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். இவை வெறும் வடிவங்கள் அல்ல; துணியை எப்படித் துவைக்க வேண்டும், உலர்த்த வேண்டும், சலவை செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் சர்வதேச சலவைப் பராமரிப்புக் குறியீடுகளாக உள்ளது. ஒவ்வொரு சின்னமும் எதைக் குறிக்கிறது என்று பார்ப்போம்.
1. தண்ணீர் தொட்டி (Washing Symbol)
இந்தச் சின்னம் துணியை எப்படித் துவைக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. தண்ணீருக்குள் அதிகபட்சம் 30°C வெப்பநிலையில் துவைக்கலாம். கைகளால் மட்டுமே மென்மையாகத் துவைக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது கை சின்னம்.
தண்ணீர் தொட்டியில் X சிம்பள் இருந்தால் தண்ணீரில் துவைக்கக் கூடாது.
தொட்டிக்குக் கீழே ஒரு கோடு மென்மையான சலவை முறை பயன்படுத்த வேண்டும் என்கிறது.
இரண்டு கோடுகள் இருந்தால் மிகவும் மென்மையான சலவை முறை அவசியம்.
2. முக்கோணம் (Bleaching Symbol)
இந்தச் சின்னம் துணியில் ப்ளீச்சிங் ரசாயனங்களைப் பயன்படுத்தலாமா என்பதைக் குறிக்கிறது.
வெற்று முக்கோணம் ப்ளீச்சிங் செய்யலாம் என்கிறது.
இரண்டு கோடுகள் கொண்ட முக்கோணம் குளோரின் இல்லாத ப்ளீச் மட்டும் பயன்படுத்தலாம் என்பதற்கான குறியீடு.
X குறியிட்ட முக்கோணம் ப்ளீச்சிங் செய்யக்கூடாது என எச்சரிக்கை தருகிறது. குறிப்பாக வண்ணத் துணிகளுக்கு இந்தக் குறியீட்டை கவனிக்க வேண்டும்.
3. சதுரம் (Drying Symbol)
இந்தச் சின்னம் துணியை எப்படிக் காய வைக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. வெற்று சதுரம் இயற்கையாக உலர்த்தலாம் என்பதையும், சதுரத்திற்குள் வட்டம் டிரையரில் (Tumble Dryer) காய வைக்கலாம் என்றும் சொல்கிறது.
வட்டத்திற்குள் ஒரு புள்ளி இருந்தால் குறைந்த வெப்பத்தில் காய வைக்க வேண்டும் என்றும் வட்டத்திற்குள் இரண்டு புள்ளிகள் இருந்தால் மிதமான வெப்பத்தில் காய வைக்கலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் டிரையரில் காய வைக்கக் கூடாது என்பதை சதுரத்தில் X ம், சமதளத்தில் விரித்துக் காய வைக்க வேண்டும் என்று சதுரத்திற்குள் கிடைமட்டக் கோடும் தொங்கவிட்டுக் காய வைக்க வேண்டும் என்பதை சதுரத்திற்குள் இருக்கும் செங்குத்துக் கோடுகளும் குறிக்கிறது.
இன்னும் இரண்டு முக்கியமான சின்னங்களாக இஸ்திரி (Ironing) செய்வதைப் பற்றியது.
ஒரு புள்ளி - குறைந்த வெப்பம்.
இரண்டு புள்ளிகள் – மிதமான வெப்பம்.
மூன்று புள்ளிகள் – அதிக வெப்பம்.
X குறியீடு – இஸ்திரி செய்யக்கூடாது.
வட்டம் (Dry Cleaning) தொழில்முறை உலர் சலவை செய்யலாம் என்கிறது.
வட்டத்தில் X இருந்தால் உலர் சலவை செய்யக்கூடாது. மேலும் வட்டத்திற்குள் உள்ள எழுத்துகள் எந்த வகையான ரசாயன முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும்.
புதுத் துணி வாங்கும்போது அவசியம் இந்தச் சின்னங்களைக் கவனிக்க வேண்டுமா? ஏன்?
1. இந்த குறியீடுகள் தரும் ஆலோசனைபடி துவைத்தால் துணியின் நிறம் விரைவில் மங்காமல் பாதுகாக்கலாம்.
2. துணி சுருங்குவதைத் தவிர்க்கலாம்.
3. துணியின் தரமும் ஆயுளும் நீடிக்க உதவும். குறிப்பாக தவறான வெப்பத்தில் இஸ்திரி செய்வதால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம். தேவையற்ற ப்ளீச்சிங் ரசாயனப் பயன்பாட்டைத் தடுக்கலாம்.
புதுத் துணியின் நிறம், வடிவம், தரம் ஆகியவற்றை நீண்ட காலம் பாதுகாக்க ஆர்வமுள்ளவர்கள் இனி துணியின் லேபிளில் உள்ள இந்தச் சின்னங்களைப் புரிந்துகொண்டு துவைக்கலாம்.
வாசகர்கள் துணி லேபிள்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், துணிகளின் தரம் நீண்ட காலம் நீடிக்கவும் இது வழிவகுக்கிறது.