தீபாவளி புத்தாடையை துவைக்காமல் அணியலாமா? தெரிந்து கொள்ளுங்கள் உண்மையை!

புதுத் துணியில் உள்ள ரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா? முதல் முறை துவைக்கும் முறைகள்!
புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,
புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

தீபாவளி வந்தாச்சு. நமக்கு பிடித்த டிசைன் கலரில் கடை கடையாக தேடித்தேடி எடுத்த புதுத்துணிகளில் மஞ்சள் வைத்து அணியும்போது வரும் மகிழ்ச்சியே தனிதான். புத்தம் புது ஆடைகளில் இருந்து வரும் மணம் நமக்கு விழாக்கால உணர்வை அதிகப்படுத்தும். சரிதான்.. ஆனால் தீபாவளி அன்று புதுத்துணியை துவைக்காமல் அணியலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

பலரின் கை பட்டு வருவது ஆரோக்கியமல்ல என்றாலும் துவைத்தால் புதுத்துணியின் பொலிவு போய்விடுவது மட்டுமின்றி சாயம் போனால் என்ன செய்வது ? என்ற பயமும் வரும். இதனாலேயே பலரும் புதுத்துணிகளை துவைக்காமல் அப்படியே அணிவதுண்டு. சிலர் கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சளை புதுத்துணிகளில் வைப்பது உண்டு.

புத்தாடையை வாங்கியவுடன் அப்படியே அணிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசைதான் பலருக்கும் இருக்கும். ஆனால், புதிதாக வாங்கிய ஆடைகளைத் துவைக்காமல் அணிவது நல்லதா? முதல் துவையலில் சாயம் போகாமல் இருக்க (புத்தாடை பராமரிப்பு) என்ன செய்யவேண்டும்? இதற்கான விளக்கங்கள் இதோ இங்கு...

முதல் சந்தேகமே புதுத்துணியைத் துவைக்காமல் அணியலாமா என்பதுதான். நிபுணர்கள் பதில் இதுதான். முடிந்தவரை புதிதாக வாங்கிய ஆடைகளை முதல் முறை துவைத்த பிறகே அணிவது நல்லது. காரணம் தரமற்ற உடல் நலனை பாதிக்கும் மேற்பட்ட ரசாயனங்கள. துணி தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதலின்போது பயன்படுத்தப்படும் சில தொழிற்சாலை ரசாயனங்களின் மிச்சங்கள் துணியில் படிந்து இருக்கலாம்.

புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,
புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,

துணியில் முழுமையாக ஒட்டாத அதிகப்படியான வண்ணச் சாயம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தயாரிப்பு, பேக்கிங், போக்குவரத்து, கடையில் காட்சிக்கு வைப்பது எனப் பல நிலைகளில் துணியில் தூசி மற்றும் அழுக்குகள் படியலாம். இது மட்டுமா? தோல் ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்களுக்கு துணியில் இருக்கும் ரசாயனங்கள் அல்லது சாயங்கள் அரிப்பு, சிவத்தல் போன்ற தோல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக குழந்தைகள், உணர்திறன் அதிகமுள்ள சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் புதுத் துணியைத் துவைத்த பிறகே அணிவது நல்லது என்கின்றனர் சரும மருத்துவர்கள்.

அடுத்து துவைத்தால் சாயம் போகுமோ எனும் சந்தேகம். முதல் துவையலில் சாயம் போகாமல் இருக்க செய்ய வேண்டிய 7 விஷயங்களின் பட்டியல் இதோ...

1. முதல் முறை துவைக்கும்போது புதுத்துணியை மற்ற துணிகளுடன் சேர்த்துத் துவைக்கவேண்டாம். குறிப்பாக பிரவுன் மெரூன் வயலட் போன்ற அடர் நிற ஆடைகளைத் தனித்தனியாக ஊறவைத்து துவைப்பதே நல்லது.

2. சிலர் சூடான நீரில் துவைப்பதே நல்லது என நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. இதனால் கலர் மங்குவதற்கான வாய்ப்பு அதிகம். குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் துவைப்பதுதான் நிறம் மங்குவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும்.

3. மைல்டு டிடர்ஜென்ட் பயன்படுத்துவதே நல்லது. அதிக வீரியமுள்ள வாஷிங்பவுடர்களுக்குப் பதிலாக மென்மையான திரவ டிடர்ஜென்ட் பயன்படுத்தலாம். இல்லையெனில் வெறும் நீரில் நனைத்து அலசி பயன்படுத்தலாம். தவறில்லை.

4. துணியைத் தலைகீழாகத் திருப்புவது முக்கியம். துவைப்பதற்கு முன்பு ஆடையை உள்ளே திருப்பிப் போடவும். இதனால் துணியின் வெளிப்புற நிறம், வேலைப்பாடுகள் மற்றும் அச்சு ( பிரிண்ட்) வடிவங்கள் தேய்மானம் அடைவது குறையும்.

இதையும் படியுங்கள்:
துணியில் சாயம் ஒட்டிக்கொண்டதா? அதை எளிதில் போக்க இந்த 3 சமையலறைப் பொருட்கள் போதும்!
புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,

5. அதிக நேரம் ஊறவைப்பதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைப்பதால் சாயம் வெளியேற வாய்ப்புள்ளது. எனவே ஊறவைத்து (5 நிமிடங்கள்) விரைவாகத் துவைத்து அலசவும்.

6. அதேபோல் அதிகமாக முறுக்கிப் பிழியக்கூடாது. குறிப்பாக மென்மையான துணிகள், பிரிண்டட் ஆடைகள், கல் முத்து வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் போன்றவற்றை முறுக்கிப் பிழிவதைத் தவிர்க்கவும்.

7. கூடுமானவரை நிழலில் உலர்த்துவதே சிறந்தது. நேரடி வெயிலில் நீண்ட நேரம் காயவைத்தால் கலர் மாறலாம். நிழலில் காற்றோட்டமாக உலர்த்துவது நிறம் மங்குவதைத் தடுக்க உதவும்.

புத்தாடைகளின் முதல் துவையலில் இந்த ஏழு டிப்ஸ்களையும் கவனத்தில் வைத்து கடைபிடியுங்கள்.

சிலர் உப்பு அல்லது வினிகர் சேர்க்கிறார்கள். இதனால் சாயம் போகாதா?

புதுத் துணியைத் துவைக்கும்போது உப்பு அல்லது வினிகர் சேர்த்தால் சாயம் நிரந்தரமாக இருக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? உப்பு, எல்லா வகையான துணிகளிலும் சாயத்தை நிலைநிறுத்தும் என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,

மேலும், வீட்டில் பயன்படுத்தும் வினிகர் எல்லா வகை சாயங்களையும் துணியில் நிரந்தரமாகப் பதிய வைக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதற்கு ஒரே வழி இதுபோன்ற வழிமுறைகளை தவிர்த்து.துணியின் பராமரிப்பு லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள துவைக்கும் முறையைப் பின்பற்றுவதே சிறந்தது.

எந்தத் துணியை எப்படி முதல் முறை துவைக்க வேண்டும் என்பதற்கான சின்ன கைடு.

காட்டன் -தனியாகக் குளிர்ந்த நீரில் துவைக்கவும்.

சில்க்-லேபிளைப் பார்த்து, தேவையானால் டிரை கிளீனிங் செய்யவும்.

சிந்தடிக்-மைல்டு டிடர்ஜென்ட் பயன்படுத்தவும்.

அடர் நிற ஆடைகள்- மற்ற துணிகளுடன் சேர்க்காமல் துவைக்கவும்.

பிரிண்டட் ஆடைகள்- உள்ளே திருப்பி மெதுவாகத் துவைக்கவும்.

குழந்தைகளின் ஆடைகள்- மென்மையான டிடர்ஜென்ட் கொண்டு துவைக்கவும்.

புதுத் துணியில் சாயம் போகிறதா என்பதை கண்டறியவும் ஒரு சிறிய பரிசோதனை செய்யலாம்.

துணியின் கண்ணுக்குத் தெரியாத ஒரு பகுதியில் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

வெள்ளை நிறத் துணியால் அந்த இடத்தை மெதுவாக அழுத்தித் துடைக்கவும். வெள்ளைத் துணையில் நிறம் படிந்தால், புதுத் துணியில் சாயம் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி: நாம் தொலைத்த அந்த பொன்னான தருணங்கள்!
புத்தாடை பராமரிப்பு - new clothes washing tips,

அந்த ஆடைகளைத் நிச்சயமாக தனியாகத் துவைக்க வேண்டும். இறுதியாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்.தீபாவளிப் புத்தாடையின் புதுப் பொலிவைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட சருமப் பாதுகாப்பு முக்கியம். முதல் துவையலைச் சரியாகச் செய்தால் புத்தாடையை நீண்ட நாட்களுக்குப் புதிதுபோலப் பராமரிக்கலாம்.