மனம், உடல், உடைமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையது. எப்படித் தெரியுமா? மனம் கெடுவதால் உடல் கெடும். இங்கு தன் மனதையும், பிறர் மனதையும் புரிதல் என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். மனம், உடல், உடைமையை காக்க பொருள் சேதம் என்பது முக்கியமான ஒன்றாகிறது. ஒழுக்கத்திற்கும், சுத்தத்திற்கும், நோய் பயப்படும். மனதும், உடலும் பல விதங்களில் பலவீனப்படுத்தப்படுகின்றன. தேவையில்லா எண்ணம் அனைவரையும் வெல்கிறது. இங்கே நினைவின் ஓட்டம் தடுக்கப்பட வேண்டும்.
பயம், காயம், கவலை, அமைதியின்மை எல்லாம் சேர்ந்து தன்னையே ஒரு முழு அடிமைப் போல் ஆக்கி விடுகிறது. இந்த வேதனை தூக்கமின்மையை கொடுக்கும். முகத்தில் சுருக்கம் இந்த நிலையை வெளிக் கொணரும் அறிகுறியாகும். மனநிலையை தானே உணர்தல் என்பது நல்லதொரு சிகிச்சை ஆகும். உள்ளே ஒரு நினைவு, வெளியே ஒரு நினைவு என்பது மனநிலை ஆகும்.
மனநோய் என்பது நரம்பு சம்பந்தப்பட்டது. நினைவை வரச் செய்ய முகத்தில் நீர் தெளித்தல், புரையேறும்போது உச்சியில் தட்டுதல், நீர் போகாதபோது எரித்த வத்தலை நுகர்ந்து பார்த்தல் என்ற விதத்தில் பெரிய சிறிய சிகிச்சையினாலேயே இதை சரி செய்து நரம்பு சம்பந்தமான நோய்களை பழங்காலம் தொட்டே நம் முன்னோர்கள் சரி செய்து வந்தனர்.
உடலுக்குத் தேவையான அளவு உப்பின் அளவும், சீனியின் அளவும் அவ்வப்போது சேரும்போது மனநிலை சோர்வு அடைவதில்லை. இதோடு ஊட்டச்சத்தும் கொடுக்கப்பட வேண்டும். சோர்வடைவதால் எண்ணத்தின் அடிமை தனமானது ஓங்குகிறது. இவர்களுக்கு ஊக்கம், பக்தி என்பது கட்டாயமாக தேவைப்படுகிறது. எண்ணெய் தேய்த்தல், சத்தான உணவு அருந்துதல், அமைதியான சூழ்நிலை ஆகியவை கட்டாயமாக தேவை ஆகும்.
நரம்பு சம்பந்தமான வியாதிகள் வேப்பிலை, குப்பைமேனி வேர், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து பல வாரம் பயன்படுத்துவதால் இப்பிரச்னை குறைய வாய்ப்புள்ளது. வயிற்று பூச்சிக்கும் இது சிறந்த மருந்தாகும். பேதியாகும்போது தயிரில் உப்பு கலந்து சாப்பிட குணமடைகிறது.
மக்களின் பலவீனத்துக்கும், ஞாபக சக்திக்கும் வல்லாரையும், திப்பிலியும் வேக வைத்து குடிப்பது அரியதொரு மருந்தாகும். வயிற்றுக் கோளாறு என்பதற்கு ஒரு நேரம் சுக்கு தேவைப்படும். ஒரு நேரம் சீரகத் தண்ணீர் தேவைப்படும். இப்படியாக ஒவ்வொரு நிலையைப் பொறுத்தும் தேவைகள் வருவதுண்டு. வாழை இலை என்பது மனிதர்களின் உடலை எரிச்சலில் இருந்தும், வேதனையிலிருந்தும் காப்பாற்றுகிறது. இது பலவிதமான புண்களையும் ஆற்றும் சக்தியை உடையதாக விளங்குகிறது. மூல சம்பந்தமான வியாதிகளுக்கு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணெயை கலந்து பயன்படுத்தலாம் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.
மெய்ஞானம் என்பது சுத்தமான, மாசுபடாத, கலங்காத, அஞ்சாத, பிழைபடாத அறிவைக் கொடுப்பது என்று கூறப்படுகிறது. நற்சிந்தனையோடு, நற்செயல், நல்ல பழக்க வழக்கம் என்பது மனம் மற்றும் உடலையும் நேராகக் காண்பது. இது குளியல் முதல் உணவு வகைகள் இன்னும் சிகிச்சைகள் வரை அடங்குவதாகும். தலையில் உபயோகிக்கும் எண்ணெய் முதல் தண்ணீர் வரை சுத்தமாக இருக்க வேண்டும். கொழுப்பு சத்தான பொருட்களையும், எண்ணெய் பொருட்களையும் குறைவாக எடுத்தல் என்பது மிகவும் நல்லது. இனிப்பு கலந்த பானங்களை அடிக்கடி எடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல் நிலைக்கு தக்க உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
இசை என்பதும், இறுக்கம் என்பதும் மனதை கட்டுபடுத்தும் சக்தி உடையது. மனதோடு உடல் என்பது அடக்கத்துடன் ஒழுக்கத்தையும் கூட கடைப்பிடிப்பதாகும்.