நவீன சமையலறை லேமினேட்டுகளை பளிச்சென மாற்றுவது எப்படி?

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்த முறையை ட்ரை பண்ணுங்க, கிச்சன் புதுசு போல இருக்கும்!
சமையலறை லேமினேட்டுகள
சமையலறை லேமினேட்டுகள்AI image
Updated on

வ்வொருவருக்கும் அவரது வீடுதான் சொர்க்கமாகும். அதிலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு சமையலறை மிகவும் பிடித்த பகுதியாகும். ஆகவே தான் நவீன பெண்கள் தற்போது சமையலறையை நவீனமாக அதிக செலவு செய்து விதவிதமான அலமாரிகள் வடிவமைத்து அலங்கரிக்கின்றனர். அவ்வாறு அமைக்கப்படும் அலமாரிகளின் லேமினேட்டுகளை எளிய முறையில் சுத்தம் செய்யும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

சமையலறை லேமினேட்டுகள் நீண்ட நாள் உழைக்க வாராந்திர எளிய திட்டம்

முதலில் தூசியை அகற்றுங்கள்

தினமும் அலமாரியின் மேற்பரப்பில் உள்ள தூசிகளை திரவத்தை பயன்படுத்தி துடைப்பதற்கு முன்பாக மைக்ரோ பைபர் துணியால் துடைத்து தூசிகளை அகற்ற வேண்டும்.

வெதுவெதுப்பான நீர் + மென்மையான சோப்பு

வெந்நீரில் மென்மையான சோப்பு கலந்த கரைசலில் மைக்ரோ பைபர் துணியை நனைத்து அலமாரி பலகையை வழக்கமாக சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.

சமையலறை லேமினேட்டுகள்
சமையலறை லேமினேட்டுகள்AI Image

எண்ணெய் பிசுக்கு பகுதியில் கவனம்

அடுப்பிற்கு அருகில் உள்ள அலமாரிகளில் எண்ணெய் கறைகள் அதிகமாக இருக்கும். ஆகவே இந்தப் பகுதிகளில் உள்ள பிசுபிசுப்பான கறைகளை கூடுதல் கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.

பிடிவாதமான கறைகளுக்கு வினிகரே தீர்வு

வெதுவெதுப்பான நீர் மற்றும் வெள்ளை வினிகர் கலந்த கரைசலை அலமாரியின் மிகவும் பிசுபிசுப்பான அழுக்கான இடங்களில் துடைக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான நீரைக் கொண்டு அலமாரியின் முகப்பை தூய்மைப்படுத்த பளிச்சென மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
1 டன் ஏசி, 1.5 டன் ஏசி ... 'டன்' எடையை குறிக்குதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்
சமையலறை லேமினேட்டுகள

சமையலறை லேமினேட்டுகள் கைப்பிடிகள் மற்றும் மூலைகளை சுத்தம் செய்யும் முறை

தினமும் அலமாரியின் கைப்பிடிகள் பலமுறை தொடப்படுவதால் சேரும் அழுக்குகளையும் மூலைகள் மற்றும் விளிம்புகளில் உள்ள அழுக்குகளையும் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

ஸ்க்ரப்பர்களுக்கு 'நோ' சொல்லுங்க

சொரசொரப்பான கம்பி நார்கள், மற்றும் கடினமான பிளாஸ்டிக் தூரிகைகள் அலமாரிகளின் வெளிப்புறத்தில் சிராய்ப்பு மற்றும் கீறல்களை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைக் கொண்டு அலமாரிகளை சுத்தப்படுத்தக் கூடாது. அலமாரிகளை சுத்தப்படுத்த மிருதுவான துணிகளே சிறந்தது.

கடுமையான ரசாயனங்கள் பயன்படுத்த கூடாது

அலமாரியின் மேற்புறத்தில் உள்ள லேமினேட்டுகளின் நிறத்தையும் பளபளப்பையும் கடுமையான ரசாயனங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைக் கொண்டு அலமாரிகளை சுத்தப்படுத்துவதை தவிர்த்து மென்மையான தயாரிப்புகளை சுத்தப்படுத்த பயன்படுத்த வேண்டும்.

ஈரத்தை சுத்தப்படுத்துவது முக்கியம்

அலமாரியின் மேற்பரப்பில் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திய பிறகு தேங்கி இருக்கும் தண்ணீர் கோடுகளை ஏற்படுத்தி அசிங்கப்படுத்தி விடும் என்பதால் வழக்கமான சுத்தத்திற்கு பிறகு உலர்ந்த துணிகளை போல் கொண்டு அலமாரிகளை துடைக்க வேண்டும்.

புதிய கறைகளை உடனே நீக்கி சமையலறை லேமினேட்டுகள் அழகை காப்பது எப்படி?

பழைய கறைகளைவிட புதிய கறைகளை சுத்தம் செய்வது எளிது என்பதால் தேநீர், சாஸ்கள், எண்ணெய் தெறிப்புகளை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பழைய பிரிட்ஜை தூக்கிப் போடுங்க! ₹20,000-க்குள் அட்டகாசமான 5 மாடல்கள்!
சமையலறை லேமினேட்டுகள

சமையல் அறையை ஒரு நாள் முழுவதும் மணிக்கணக்காக சுத்தப்படுத்துவதற்கு பதிலாக வாரத்தில் இரண்டு நாட்கள் என சிறு சிறு பகுதிகளாக பிரித்து சுத்தப்படுத்தினால் நவீன சமையலறை அலமாரிகள் எப்பொழுதும் சுத்தமாக காட்சி தரும்.

மணிக்கணக்கில் சமையலறையைச் சுத்தம் செய்யும் சலிப்பான வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வாரத்தில் சில நிமிடங்கள் மட்டும் ஒதுக்கி, உங்கள் கனவுச் சமையலறையை எப்போதும் விருந்தினர்கள் வியக்கும் வண்ணம் சுத்தமாக வைத்திருக்க இந்த உத்தி உதவும்.

logo
Kalki Online
kalkionline.com