

வீட்டில் செடிகள் வளர்க்கவேண்டும் என நினைப்பவர் களுக்கு முதல் தேர்வு மணி பிளான்டாக (Money plant) உள்ளது. ஏனெனில் குறைந்த பராமரிக்கும் கொடி போல வளர்ந்து வீட்டிற்கு பசுமையையும் நேர்மறை ஆற்றலை கொடுக்கிறது. ஆனால் குறிப்பிட்ட இடத்தில் மணி பிளான்ட் வளர்க்காவிட்டால் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படும். அந்த வகையில் மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க கூடாத இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கடன் ஏற்படுத்தும் வடகிழக்கு மூலை
வீட்டின் மங்களகரமான மூலையாக வாஸ்து சாஸ்திரத்தின்படி வடகிழக்கு மூலை உள்ளதால் அந்த இடத்தில் மணி பிளான்ட் வளர்க்கக்கூடாது . அந்த திசையில் மணி பிளான்ட் இருக்கும்போது நீதிமன்ற வழக்குகள், நோய்கள் மற்றும் தேவையற்ற செலவு களுக்கு வீட்டில் வரும் வருமானம் அனைத்தும் கரைந்து வீட்டின் உரிமையாளர் கடனால் பாதிக்கப் படுவார். ஆகவே தவறுதலாக கூட வீட்டின் வடகிழக்கு மூலையில் மணி பிளான்ட் வைப்பதை தவிர்த்துவிடுங்கள்.
நிதி நெருக்கடி ஏற்படுத்தும் குளியலறை
வாஸ்து சாஸ்திரப்படி சுக்கிர கிரகத்தை மணி பிளான்ட் குறிப்பதாக கருதப்படுகிறது. மேலும் ராகு ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடமாக குளியலறை உள்ளது. ஆகவே குளியலறைக்கு அருகில் மணி பிளான்ட் வளர்க்கும் போது இவ்விரண்டு கிரகங்களின் சேர்க்கையானது வீட்டிற்கு வரும் வருமானத்தை குறைக்கச் செய்து நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் குளியல் அறைக்கு அருகில் மணி பிளான்ட் வைக்கக்கூடாது.
மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் படுக்கையறை
பொதுவாக பலரும் மன அமைதிக்காக படுக்கையறையில் மணி பிளான்ட் வளர்க்கின்றனர். ஆனால் படுக்கையின் தலைப்பகுதியில் மணி பிளான்ட் வளர்க்கும் போது கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு சண்டைகள் அதிகரித்து மன அழுத்தமும் பதற்றமும் ஏற்படும் என்பதால் முடிந்தவரை படுக்கையறையில் தலைப் பகுதிக்கு அருகில் மணி பிளான்ட் செடி வைப்பதை தவிர்த்துவிடுங்கள்.
குடும்ப பிரச்னைக்கு வழிவகுக்கும் இருண்ட இடம்
மணி பிளான்ட் செடிகள் எத்தகைய இடங்களிலும் செழித்து வளரும். ஆனால் இருண்ட இடங்களிலும், இருண்ட மூலைகளிலும் மற்றும் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் வளர்க்கும்போது குடும்பத்திற்கு நிதி பின்னடைவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும் என்பதால் இருண்ட இடங்களில் மணி பிளான்ட் வைப்பதை மறந்துவிடுங்கள்.
தரை தொடாத செடிகள்
மணி பிளான்ட் செடிகள் மேல்நோக்கி படர்ந்து வளரும் வகையில் வளர்க்கவில்லை என்றால் வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும். மேலும் வீட்டிற்கு வரும் வருமானத்தை தடுத்து நிறுத்திவிடும் என்பதால் செடிகள் கீழ்நோக்கி வளராத வண்ணம் மேல் நோக்கி வளரும் அதற்கு ஏதுவாக கம்பு அல்லது கயிறு கட்டிவிட வேண்டும்.
மணி பிளான்ட் வைக்க வேண்டிய சரியான இடம்
வீட்டின் தென்கிழக்கு மூலைக்கு அதிபதியாக விநாயகர் பெருமானும் கோள்களில் சுக்கிரனும் இருப்பதால் வாஸ்து சாஸ்திரத்தின்படி தென்கிழக்கு மூலையே மணி பிளான்ட் வளர்ப்பதற்கு மிகவும் சரியான இடம் ஆகும். இது வீட்டிற்கு நல்வாய்ப்புகளை ஈர்த்து குடும்பத்தின் செழிப்பான நிலைக்கு வழிவகுக்கும். மணி பிளான்ட் இருக்கும் வீட்டின் நிதி நிலைமைக்கும் முக்கிய தொடர்பு இருப்பதால் அலங்கார செடியாக அல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வாஸ்து சாஸ்திர குறைபாடு இல்லாமல் மணி பிளான்ட் செடியை வளர்த்து பயன்பெறுங்கள்.