பருவமழைக்கு முன் வீட்டின் இந்த 7 இடங்களைச் செக் பண்ணிட்டீங்களா? மின்கசிவு அபாயம் தவிர்க்க டிப்ஸ்!

கனமழை தொடங்கும் முன் வீட்டின் சுவிட்ச்போர்டு, எர்திங் மற்றும் வயரிங் நிலையைச் சரிபார்ப்பது உயிரைப் பாதுகாக்கும்.
மின்கசிவு அபாயம்
மின்கசிவு அபாயம்Gemini image
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

பொதுவாக மழைக்காலம் குழந்தைகளுக்கு சந்தோஷத்தை தரும், ஒன்று அதனால் கிடைக்கும் விடுமுறை, மற்றொன்று ‘நீர்துளிகளின் சத்தங்கள்’. சரி குழந்தைகளுக்கு அது பொருந்தும்; பெரியவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும். பல புயல்கள், வெள்ளப்பெருக்கு சம்பவங்களை பார்த்த நீங்கள், இப்போதுள்ள ‘கணிக்க முடியாத சீசன்களை’ சமாளிக்க நீங்கள் ‘உங்கள் வீட்டில்’ என்ன செய்துள்ளீர்கள்?. பருவமழை இன்னும் தொடங்கவில்லை சரி தான், ஆனால் தொடங்குவதற்கு முன்பு உங்கள் வீட்டில் சரிபார்க்க வேண்டிய 7 முக்கிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பருவமழையால் நிகழும் மின்சார அபாயங்கள்:பருவமழைக் காலம் பொதுவாக வீடுகளை நீரும், மின்சாரமும் ஒன்றோடு ஒன்று சுலபமாக மோதிக்கொள்ளும் அபாயமுள்ள இடங்களாக மாற்றுகிறது. சென்னை அல்லது தமிழ்நாட்டின் பிற நகரங்களில், கனமழை காரணமாக மொட்டை மாடிகளில் நீர்க்கசிவும், சுவர்களில் ஈரப்பதமும் அடிக்கடி ஏற்படுகின்றன. ‘எப்படி மின்சாரம் பாய்ந்து செல்ல காப்பர் வயர் உதவுகிறதா’ இந்த மழைக்கால ஈரப்பதமும் ‘மனித உடலை’ ஒரு சிறந்த வயராக சில நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதனால் சிறிய மின்கசிவு கூட ஒருவருக்கு கடுமையான ‘ கரண்ட் ஷாக்கிங்கை’ ஏற்படுத்தக்கூடும். இதோடு ‘மின்சார ஏற்ற இறக்கங்கள்(Voltage), மின்னல் தாக்குதல்கள்’ இந்த அபாயங்களை மேலும் அதிகப்படுத்தி, வீட்டில் இருக்கும் சாதனங்களை சேதப்படுத்துவதோடு; ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

மின்கசிவு அபாயம்
மின்கசிவு அபாயம்Gemini image

ஆய்வு செய்ய வேண்டிய வீட்டிலுள்ள முக்கிய ஏழு இடங்கள்:

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, வீட்டு உரிமையாளர்கள் ஏழு முக்கிய இடங்களை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, சுவர்கள் வழியாக ஈரப்பதத்தை உறிஞ்சும் சுவிட்ச்போர்டுகள், அதே ஈரப்பத சுவர்களால் நீர்க்கசிவு ஏற்படக்கூடிய சாக்கெட்டுகள் மற்றும் மின் பெட்டிகளை(sockets and junction boxes) ஆராய வேண்டும்; காரணம் இந்த நீர் கசிவு, ‘மின்கசிவை’ (short circuit) ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பழைய வீடுகளில் உள்ள சுவற்றுக்குள் இருக்கும் ‘மின்சார வயர்களில்’ அதிக கவனம் தேவை.

நேரடியாக மழையில் நனையும் ‘வெளிப்புற மின்சார மீட்டர்கள், மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி உபயோகிக்கப்படும் மோட்டார் பம்புகள், சொட்டும் மழைநீரால் பாதிக்கப்படக்கூடிய ‘ஏசி அவுட் டோர்’ பெட்டிகள் மற்றும் மழைக்காலங்களில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் ‘ஹீட்டர், கீசர்களை’ கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட இடங்கள் ஒவ்வொன்றும் உங்களால் கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்டால்; அது கொஞ்சம் கொஞ்சமாக அபாயமாக மாறக்கூடும்.

சரி மேலே குறிப்பிட்ட அனைத்தும் நல்ல நிலையில் இருந்தால்? கூடுதல் பாதுகாப்பு தேவையா?:

பலரின் வீடுகளில் இந்தப் பகுதிகள் பாதுகாப்பாக தோன்றினாலும், இப்போதுள்ள பருவமழையின் கணிக்க முடியாத தன்மை, பல கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியமாக்குகிறது. முக்கியமாக ரெசிடுவல் கரண்ட் சர்க்யூட் பிரேக்கர்களை (Residual Current Circuit Breakers (RCCB/ELCB) நிறுவுவது, மின் கசிவின்போது உடனடியாக ‘மின்சாரத்தை நிறுத்த’ உறுதி செய்கிறது. இதோடு ‘வீட்டின் முறையான எர்திங்(Earthing)’ அமைப்புகள் ‘மின்சார ஷாக்’’ அபாயங்களைக் குறைக்கின்றன. கூடுதலாக, சர்ஜ் ப்ரொடெக்டர்கள்(surge protectors) போன்ற பொருட்கள், மின்னலால் ஏற்படும் மின்னழுத்த ஏற்றங்களிலிருந்து வீட்டின் மின் சாதனங்களைப் பாதுகாக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள்ள எலித் தொல்லையா? பொறி வைக்காமலே ஓட ஓட விரட்ட 5 எளிய இயற்கை வழிகள்!
மின்கசிவு அபாயம்

வீட்டின் வெளிப்புறங்களில் வயரிங் இருந்தால், அதை நீர்புகா குழாய்களின் உள்ளே விட்டு பாதுகாக்கலாம் மற்றும் அந்த வயர்கள் இணைந்துள்ள ‘சீலிங் ஜங்ஷன் பாக்ஸ்களையும்’ பாதுகாக்கலாம். இந்த நடவடிக்கைகள் திடீர் பிரச்னைகளை தடுக்கின்றன. காரணம் ‘பருவமழையின் வீரியம்’ ‘எப்போ எப்படி இருக்கும்’ என்று இப்போது யாராலும் கணிக்க முடியாது. சிலரின் வார்த்தைகள்:நிக்கோலா டெஸ்லா(Nikola Tesla) ஒருமுறை குறிப்பிட்டது போல, ‘மின்சாரம் என்றால் என்ன என்பதை ‘அனைத்து தரப்பு மனிதர்களும்’ முழுவதுமாக அறியும் நாள், மனித இன வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மற்ற எதையும் காட்டிலும், இந்த நாள் ஒருவேளை மிக முக்கியமான நிகழ்வாக கூட பதிவு செய்யபடலாம்.

இதையும் படியுங்கள்:
இதெல்லாம் தெரியாம போச்சே! வாழ்க்கையை எளிதாக்கும் 15 லைஃப் ஹேக்ஸ்!
மின்கசிவு அபாயம்

'மின்சாரம் இயற்கை விதிகளுக்கு கட்டுப்படுகிறது என்பதையும், பருவமழையின்போது அவற்றைப் கண்டுக்காமல் இருந்தால் ‘பேரழிவை வரவழைக்கலாம்’ என்பதையும் அவரது நுண்ணறிவு நமக்கு நினைவூட்டுகிறது.மேலே குறிப்பிட்ட ஏழு முக்கிய இடங்களை ஆய்வு செய்து, சில நவீனப் பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவதன் மூலம், குடும்பங்கள் தங்கள் வீடுகளை எந்த காலத்திலும் பாதுகாப்பான இடங்களாக மாற்றிக்கொள்ள முடியும். இதிலிருந்து பெற வேண்டிய பாடம் என்னவென்றால்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது வெறும் விருப்பம் சார்ந்த தேர்வு அல்ல; அது உயிர்வாழ்வதற்கான அவசியமாகும்.

பருவமழைக்காலத்தில் வீட்டை மின்கசிவு அபாயம் மற்றும் மின்சார விபத்துகளில் இருந்து முழுமையாகப் பாதுகாப்பதற்கான 7 முக்கிய பகுதிகள் மற்றும் நவீனப் பாதுகாப்பு உபகரணங்களைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதலைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com