
முதலில் நளபாகம் என்றால் என்ன என்று பார்ப்போம். மகாபாரதத்தில் நளன் என்ற மன்னன் இருந்தார். அவர் சமையலில் நிபுணத்துவம் பெற்று இருந்தார். மிகவும் சுவையான, ருசியான சமையல் செய்வதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது. அவரது சமைக்க பட்ட உணவே ‘நளபாகம்’ எனப்படும்.
நமது கல்யாணங்களில் வழங்கப்படும் உணவு நளபாகம் என சொல்ல வேண்டும். நளன் சமையலை விடுங்கள். நகரங்களில் உள்ள அனைத்து ஹோட்டலிலிலும் ஆண்கள்தான் சமையல் கலைஞர்கள். எவ்வளவு ருசியாக, சுவையாக உணவு தருகிறார்கள்…? ஆம். இதுவே நளபாகம்.
வீட்டில் பெண்கள் சமைக்கிறார்கள். அவர்களும் சுவையான, ருசியாக சமைத்து தள்ளுகிறார்கள். நளன்போல் இல்லாவிட்டாலும் ஆண்கள் இந்தக் காலத்தில் சமைக்க வேண்டும். அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மிக பிரபலமான ஹோட்டல்களில் பெரும்பாலும் ஆண்தான் சமையல் கலை நிபுணர். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் வீட்டிலும் ஆண் சமைக்க வேண்டும்.
சமையல் ஒரு கலை. ஒரு விதத்தில் பார்த்தால் அது விஞ்ஞானம் கூட. ஆம். ரசாயனம் சம்பந்தப்பட்டது. ஏன் காலம் காலமாக பெண்கள்தான் வீடுகளில் சமைத்து வருகிறார்கள்?
ஆண்கள் உணவை விமர்சிப்பது மட்டுமே செய்கிறார்கள். சில ஆண்கள் சமையலை மதிப்பது இல்லை. வாய் முட்ட சாப்பிட்டுவிட்டு சென்று விடுவார்கள்.ஆணும் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும். சமையலும் செய்ய வேண்டும்.
வீட்டில் சமையல் செய்யும் பெண் உடல் நலம் இல்லாமல் இருந்தால் ஹோட்டலில் இருந்து வாங்காமல் ஆணே சமையல் செய்ய வேண்டும்.
உணவு... சாப்பாடு மட்டும் அல்ல. டிபன் செய்யவும் ஆண் தெரிந்து இருக்க வேண்டும். மாவு அரைப்பதில் இருந்து இட்லி, தோசை செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே மாதிரி ஸ்நேக்ஸ் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். இது சிறிது சுலபம். வடை, போண்டா, பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, பக்கெளடா என்று அனைத்தும் ஆண்கள் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள பெண்களும் ஆணுக்கு சமையல் கற்றுத் தர முன்வர வேண்டும். ஆண்கள் சமையல் கற்பதும், சமைப்பதும் தரம் குறைந்த விஷயம் இல்லை.
நாம் சாப்பிட்டு விட்டுத்தான் வளர்கிறோம். எனவே நமது வாழ்க்கைக்கு, உயிருக்கு உதவக்கூடிய கலை சமையல் கலை.
ஆண்- பெண் இருவரும் சமைக்க வேண்டும். பெண்ணின் பாரம் சற்று குறையும். நீங்கள் விரும்பும் அம்மா, மனைவி ஆகியோருக்கு பேருதவியாக இருக்கும் உங்கள் சமையல்.
சமையல் கற்றுக்கொள்ள கடினமானது இல்லை. எதை எதை எவ்வளவு சேர்க்கவேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும். அதேபோல் தாளிக்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.
சாதம் செய்ய எளிதாக குக்கரில் செய்து விடலாம். அதே குக்கரில் பருப்பு, காய்கறி ஆகியவற்றை வேக வைத்து விட வேண்டும்.
உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மசாலா அரைக்க என்ன என்ன சேர்க்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
பின்னர் கிட்டத்தட்ட சமையலின் முக்கால் பங்கு முடிந்து விட்டது. ஆம். இனி சாம்பார், ரசம் வைக்க வேண்டும். சாம்பாருக்கு பருப்பு, காய்கறி சேர்த்து வைத்து கேசில் ஒரு கொதி வந்ததும் சாம்பார் ரெடி.
கரைத்த புளி வைத்து ரசம் கொதிக்க வைக்க வேண்டும். பருப்பு நீர் (குக்கரில்) மற்றும் சிறு மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு ஒரு கொதி கொதிக்க வைக்கவும். ரசம் ரெடி.
ஆண்களே…!
சமையல் கற்றுக் கொள்ளுங்கள். நளபாகம் தாருங்கள்.