மண்பானை - சிறந்த இயற்கை தண்ணீர் சுத்திகரிப்பு கருவி

தண்ணீரை நாம் பில்டர் செய்கிறோம் என்ற பெயரில் பல நவீன முறைகளை கையாண்டாலும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றது மண்பானை குடிநீர்.
மண் பானை குடிநீர்
மண் பானை குடிநீர்
Published on

கோடைக்காலம் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் செஞ்சுரி அடித்துள்ளது. அக்னி நட்சத்திரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நம் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கோடையில் உயிர்நாடியாக இருப்பது தண்ணீர்தான்.

தண்ணீரை நாம் பில்டர் செய்கிறோம் என்ற பெயரில் பல நவீன முறைகளை கையாண்டாலும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றது மண்பானை குடிநீர். மண்பானையில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா? முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நம் ஆரோக்கியத்தோடு இணைத்தே நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

ஆதிமனிதன் முதன்முதலில் பயன்படுத்தியது மண்பாண்டங்கள்தான். சமைப்பது முதல் உணவு பொருட்களை சேமிப்பது வரை அனைத்து தேவைகளுக்கும் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. மண்பானை தண்ணீரை குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் தனித்துவமான சுவை, குளுமையான உணர்வுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பதை அதனை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.

மண்பானை ஒரு சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவி. மண்பானையில் தண்ணீரை ஊற்றி சில மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து நச்சு உப்புக்கள், தாதுக்களை மண்பானை உறிஞ்சி வெளியேற்றி விட்டு தூய்மையான குடிநீரை தருகிறது. மண்பானையில் நிரப்பப்படும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக மாறிவிடும். அதாவது, பானையின் மேற்பரப்பில் உள்ள சிறிய துளைகள் வழியாக நீர் விரைவாக ஆவியாகும். அப்படி ஆவியாகும்போது பானையின் உட்புறத்தில் வெப்பத்தின் வீரியம் குறையும். அதனால் வெப்பநிலையும் கட்டுப்படும். இயற்கையாக வெப்பத்தணிப்பு செய்யப்பட்ட இந்த நீர், மனித உடலுக்கு மிகவும் நன்மை தரும் என இயற்கை மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரை குடிப்பது வெப்ப பக்கவாதத்தை தடுக்க உதவும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தண்ணீரில் கலந்திருக்கும் சத்து மிகுந்த மண் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவி செய்கிறது. உடலின் அதீத வெப்பத்தால் ஏற்படும் தாது உப்பு இழப்புகளை ஈடுகட்டுகிறது. மேலும், உடலின் அமில நிலை அதிகரிக்காமல் தடுக்கும் இயல்பு மண்பானையில் வைக்கப்படும் நீருக்கு உண்டு. இது போல பல நன்மைகள் மண்பானை குடிநீர் மூலம் கிடைக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மண்பானை குடிநீரில் இத்தனை நன்மைகளா?
மண் பானை குடிநீர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com