நவராத்திரி கொண்டாட்டத்தை அசத்தலாக திட்டமிடுவது எப்படி? எளிய கொலு கைட்!

9 நாட்கள் வழிபாட்டையும் பிரசாதங்களையும் வீட்டிலேயே எளிமையாக திட்டமிட சூப்பர் யோசனைகள்.
நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,
நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,Image credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நவராத்திரி திருவிழா என்றாலே வீடுகளில் கொலுப்படிகள் அமைத்து, விதவிதமான பொம்மைகளை அடுக்கி, ஆன்மீகமும் கலையும் ஒன்றிணையும் ஒரு உன்னதமான நிகழ்வாகும். இந்த வருட நவராத்திரி வழிபாட்டையும், கொண்டாட்டங்களையும் சிறப்பாக்க சில ஐடியாக்கள்.

நவராத்திரி கொண்டாட்டம்:

சுண்டல் பஜார்:

நவராத்திரியின் 9 நாட்களுக்கும் அம்பிகைக்கு படைக்க வேண்டிய பிரசாதங்கள் மற்றும் சுண்டல் வகைகளை முன்கூட்டியே திட்டமிடலாம். நவராத்திரியின் பொழுது 9 நாட்களும் வெவ்வேறு வகையான சுண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை புரதச்சத்து நிறைந்ததாகவும், சாத்வீக பொருட்களால் லேசான மசாலா பொருட்கள் கலந்து செய்யப்பட்டதாகவும் இருக்கும்.

சுண்டல்களை அனைத்து பருப்பு வகைகளாலும் தயாரிக்கப்பட முடியும் என்பதே இதன் ஸ்பெஷாலிட்டி‌. இதனை நவராத்திரி நேரத்தில் மட்டுமல்லாது, மாலை நேரச் சிற்றுண்டியாகக் கூட செய்து சுவைக்கலாம். மிகவும் ஹெல்தியானது. கருப்பு கொண்டைக்கடலை, பச்சை பயிறு, ராஜ்மா, பட்டாணி, காராமணி, வெள்ளை கொண்டைக்கடலை (காபுல் சென்னா) மற்றும் மொச்சை போன்ற பயறு வகைகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,
நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,Image credit: Gemini

ஹோல்சேல் டீலிங்:

சுண்டல் போட்டுக் கொடுக்க கப் பேப்பர் பிளேட் பிளாஸ்டிக் ஸ்பூன் போன்றவை எந்த அளவுக்கு தேவைப்படும் என்று கணக்கு போட்டு மொத்தமாக வாங்கி வையுங்கள்.

கொலுவுக்கு வருகிறவர்களுக்கான கிப்ட், பாக்கு, மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு, கேரிபேக் போன்றவற்றையும் ஹோல்சேல் கடையில் வாங்கி வைக்க செலவு கணிசமாக குறையும்.

டிரஸ் டெசிஷன்:

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் என்ன டிரஸ் அணியப் போகிறோம் என்பதை முன்னரே முடிவு செய்துவிட குழப்பங்கள் இருக்காது. புடவையாக இருந்தால் மேட்சிங் பிளவுஸ், சுடிதாராக இருந்தால் 'ஷாலும்' ஒரே செட்டாக எடுத்து வைத்துவிடுவது டென்ஷனை போக்குவதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்தும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இந்த நிறங்கள் தெய்வத்தின் தன்மையையும், பண்டிகையும் சாராம்சத்தையும் பிரதிபலிக்கின்றன. எனவே அணிய விரும்பும் உடைகளின் வண்ணங்களை தேர்வு செய்து எடுத்து வைப்பது கடைசி நேர டென்ஷனை குறைக்கும்.

வர்ணஜாலங்கள்:

நவராத்திரி ஒன்பது நாட்களும் விதவிதமான கோலங்கள் போட்டு நம் கைத்திறனை காட்டலாம். குந்தன் கற்களை பயன்படுத்தி ஒரு நாள், பேப்பர் பிளேட்டில் பெவிகால் தடவி ஜவ்வரிசி ஒட்டி முத்துக்கோலம், ஜமிக்கி வைத்து ஒரு நாள், பூக்கோலம், ரங்கோலி, நீர் மேல் கோலம், நவதானிய கோலம், அரிசி மாவு கோலம் என விதவிதமாக போடலாம்.

நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,
நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,Image credit: Gemini

பாட்டுக் கச்சேரி:

தினம் தினம் மாலையில், நம் ஏரியாவில் பாட்டு, வீணை, வயலின் என்று அசத்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை கூப்பிட்டு கொலுவில் கச்சேரி செய்ய வைக்கலாம். நடு நடுவே நம் வீட்டு வாண்டுகளையும் மேடையேற்றலாம். நம் ஏரியாவில் அந்த மாதிரி உள்ள குழந்தைகள் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். வீட்டிற்கு கொலு பார்க்க வரும் குழந்தைகளை, ஒரு பாட்டு பாடினால் தான் சுண்டல் என்று அன்பு கட்டளை போட்டு நம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

ஆனால் ஒன்று, குழந்தைகள் பாடும் வரை அவர்களை இடைஞ்சல் பண்ணாமல் அவர்களைப் பாட சொல்லி விட்டு, ஒரு பக்கம் பேச்சு கச்சேரி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஆசையாக பாடி முடித்ததும் மறக்காமல் அவர்களை உற்சாகப்படுத்தி கைதட்டி பாராட்ட வேண்டும்.

தினம் ஒரு ஆரத்தி:

முத்து மணிகளால் அலங்கரித்து எடுக்கப்படும் முத்து ஆரத்தி, நவமணிகளைக் கொண்டு எடுக்கும் ஆரத்தி, விதவிதமான பூக்களைக் கொண்டு தட்டை அலங்கரித்து எடுக்கப்படும் ஆரத்தி, நவதானிய ஆரத்தி, தீப ஆரத்தி எனப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகளை ஏற்றி ஆரத்தி எடுப்பது, பகவத் ஆரத்தி எனப்படும் தெய்வத்திற்கு தூபம் காட்டி, மலர்களைப் படைத்து செய்யப்படும் ஆரத்தி என தினம் ஒன்றாக ஆரத்தி எடுப்பது விசேஷம்.

இவை வீட்டில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
கொழுக்கட்டை செய்ய நேரமில்லையா? 10 நிமிடத்தில் செய்யும் 5 நவராத்திரி பிரசாதம் இதோ!
நவராத்திரி கொண்டாட்டம் - Navarathri Celebration,
logo
Kalki Online
kalkionline.com