யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச புத்தகங்களை பெறும் 7 வழிகள்!

NCERT Official Website
Civil Services Examination
Published on

வ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக யூபிஎஸ்சி வினாத்தாளில் ncert புத்தகங்களில் இருந்து கேள்விகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேட்கப்படுகின்றன. பல மாணவர்களுக்கு இத்தகைய விலையுயர்ந்த புத்தகங்களை வாங்குவது கடினமாக உள்ளது .அந்த வகையில் இலவசமாக படிப்பதற்கான மெட்டீரியல்களை.பெறும் ஏழு வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1.NCERT அதிகாரப்பூர்வ வலைத்தளம்

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான NCERT- புத்தகங்கள் UPSC தேர்வுக்குத் தயாராவதற்கு குறிப்பாக ஆரம்ப மற்றும் பிரதான தேர்வுக்கு மிகவும் முக்கியம். இந்த வகுப்புகளின் அனைத்து பாடப்புத்தகங்களையும் NCERT-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ncert.nic.in-லிருந்து PDF வடிவத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் புத்தகங்களைப் படிப்பது UPSC தேர்வுக்கான அடித்தளத்தை அமைக்கும்.

2.e-Pathshala தளம்

NCERT புத்தகங்களை ஆன்லைனில் படித்து பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு அரசு தளமாக epathshala.nic.in உள்ளது. இதில் ஆடியோ-விஷுவல் கன்டென்டுகளும் கிடைப்பதால் படிப்பவர்களுக்கு புரிதலை மேம்படுத்துகிறது.

3.இலவச ஆன்லைன் வலைதளங்கள்

UPSC தேர்வுக்கு தயாராவதற்கான இலவச மெட்டீரியல்கள் மற்றும் நோட்ஸ்கள் மாதிரித் தேர்வுகளை Testbook, BYJU'S மற்றும் கான் அகாடமி போன்ற வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் நிறைய பயனுள்ள கன்டென்டுகளோடு வழங்குகின்றன. மேலும், பல ஆன்லைன் பயிற்சி தளங்கள் UPSC தயாரிப்பிற்கான இலவச நேரடி வகுப்புகள், நோட்ஸ்கள் மற்றும் மாதிரி தேர்வுகளையும் வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நம்பக் கூடாத 4 பேர் யார் தெரியுமா?
NCERT Official Website

4.அரசாங்க நூலகம்

அரசாங்க நூலகங்களில் யுபிஎஸ்சி தொடர்பான புத்தகங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் நூலகங்களில் உறுப்பினராக சேர்ந்து புத்தகங்களை எடுத்து படிக்கலாம். பெரும்பாலான அரசு நூலகங்கள் ஆண்டு உறுப்பினர் கட்டணத்தை பெயரளவுக்கு குறைத்து வாங்குவதால் இந்த வாய்ப்பினை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். UPSC தொடர்பான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் டெல்லி பொது நூலகம், தேசிய நூலகம் மற்றும் மாநில மத்திய நூலகத்தில் கிடைக்கின்றன.

5.Kindle reading app-ஐப் பயன்படுத்தவும்

உங்கள் தொலைபேசியில் Kindle reading app-ஐ பதிவிறக்கம் செய்து "kindle-ல் இலவச புத்தகங்கள்" என்று தேடவும். UPSC பாடத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் பல கிளாசிக் மற்றும் பொது அறிவு தொடர்பான புத்தகங்களை இங்கே இலவசமாக உங்களுக்கு கிடைக்கும்.

6.சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் குழுக்கள்

UPSC தேர்வர்களுக்கு உதவும் வகையில் உள்ள Facebook, Telegram மற்றும் WhatsApp-ல் பல குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களில் சேர்வதன் மூலம் நல்ல நோட்ஸ்கள், பயிற்சி கேள்விகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை இலவசமாகப் பெறலாம்.

7.அரசாங்கத்தின் இலவச பயிற்சித் திட்டம்

பல மாநில அரசுகளும் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு மற்றும்SC, ST மாணவர் களுக்கு இலவச UPSC பயிற்சியை வழங்குகின்றன. இது குறித்த தகவல்கள் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் அல்லது சமூக நலத் துறையிலிருந்து பெறலாம். இந்தத் திட்டங்களின் கீழ் இலவச படிப்புப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் நீங்கள் அதிக செலவு செய்யாமல் UPSCக்கு நன்கு தயாராகலாம்.

வெற்றிபெற வறுமை தடை இல்லை. நோக்கமே பெரிது என்ற அடிப்படையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மேற்கூறிய ஏழு வழிமுறைகளின் மூலம் இலவசமாக பயிற்சியை விடாமுயற்சியோடு தொடர்ந்து ஜெயித்துக்காட்டுங்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் பயத்தை போக்குவது தாயின் கையில்தான் இருக்கிறது!
NCERT Official Website

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com