வீடுகளின் அடையாளம் BHK குறியீட்டு என்பது தெரியும்... 1RK என்றால் என்ன தெரியுமா?

1RK House
1RK House
Published on

வீடுகளைக் கட்டித்தரும் கட்டுமான நிறுவனங்கள், தங்களது வீடுகளை BHK எனும் குறியீட்டால் அடையாளப்படுத்துகின்றன. BHK என்றால் என்ன? இதனைக் கொண்டு வீடுகளை எப்படி வகைப்படுத்துகின்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கு விடையளிக்கப்படுகிறது.

BHK என்பது ஆங்கிலத்தில் Bed Room, Hall, Kitchen என்பதைக் குறிக்கிறது. அதாவது, படுக்கையறை, கூடம், சமையலறை ஆகியவற்றைக் குறிக்கிறது.

1BHK என்பது, ஒரு படுக்கையறை, ஒரு கூடம், ஒரு சமையலறை மற்றும் ஒரு கழிவறை / குளியலறை கொண்டது. இந்த உள்ளமைவு வழக்கமாக 400 முதல் 500 சதுர அடி அளவில் இருக்கும். கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட ஒரு தனிக் குடும்பத்திற்கு 1BHK கொண்ட வீடு சரியானதாக இருக்கும். கீழ், நடுத்தர, குடும்பத்திற்கும் போதுமானதாகக் கருதப்படுகிறது.

0.5BHK என்பது, வழக்கமான படுக்கையறை அளவை விட சிறிய படுக்கையறையைக் குறிக்கும் ஒரு கட்டமைப்பு அலகு மற்றும் ஒரு சமையலறை மற்றும் ஒரு கழிவறை / குளியலறை கொண்டது.

1.5BHK என்பது, ஒரு படுக்கையறை மற்றும் வழக்கமான அளவை விட சிறியதான ஒரு படுக்கையறை, ஒரு கூடம், ஒரு சமையலறை மற்றும் ஒரு கழிவறை / குளியலறை கொண்டது.

2BHK என்பது, இரண்டு படுக்கையறைகள், ஒரு கூடம், ஒரு சமையலறை கொண்டது. இங்கு இரண்டு படுக்கையறைகளில், ஒரு கழிவறை இணைக்கப்பட்ட பெரிய படுக்கையறையும், மற்றொன்று நிலையான படுக்கையறை அளவை விடச் சிறியதாகவும் இருக்கும். மேலும் ஒரு கழிவறை / குளியலறை கொண்டது.

இதையும் படியுங்கள்:
இங்க வீடு வாங்கினா ஆறு மாசத்துக்கு வெளிய வரவே தேவையில்லை!
1RK House

2.5BHK என்பது, இரண்டு படுக்கையறைகளில் ஒன்று கழிவறை இணைக்கப்பட்டும், மற்றொன்று நிலையான படுக்கையறை அளவை விடச் சிறியது மற்றும் வழக்கமான அளவை விட சிறியதான ஒரு படுக்கையறை, ஒரு கூடம், ஒரு சமையலறை கொண்டது. மேலும், ஒரு கழிவறை / குளியலறை கொண்டது.

3BHK என்பது, மூன்று படுக்கையறைகள், ஒரு கூடம், ஒரு சமையலறை கொண்டது. இங்கு இருக்கும் மூன்று படுக்கையறைகளில், இரண்டு படுக்கையறைகள் கழிவறை இணைக்கப்பட்ட பெரிய படுக்கையறைகளாகவும், மற்றொன்று நிலையான படுக்கையறை அளவை விடச் சற்று சிறியதாகவும் இருக்கும். மேலும், ஒரு கழிவறை / குளியலறை கொண்டது.

4 BHK என்பது, நான்கு படுக்கையறைகள், ஒரு கூடம், ஒரு சமையலறை கொண்டது. இங்கு மூன்று படுக்கையறைகள் கழிவறை இணைக்கப்பட்ட பெரிய படுக்கையறைகளாகவும், மற்றொன்று வழக்கமான அளவு படுக்கையறையாகவும் இருக்கும். மேலும், ஒரு கழிவறை / குளியலறை கொண்டது.

2BHK 2T என்பது, இரண்டு படுக்கையறை மற்றும் இரண்டு கழிவறைகள், ஒரு கூடம், ஒரு சமையலறை. இந்த கட்டமைப்பில் ஒரு பெரிய படுக்கையறை மற்றும் ஒரு வழக்கமான படுக்கையறை கொண்டதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வீடு கட்ட கடன் வாங்குவது எப்படி?
1RK House

மேற்காணும் வகைகளைத் தவிர்த்து, புதிதாக 1RK எனும் புதிய வகை வீடுகள் மும்பை, புனே, நொய்டா, குர்கான், பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற மாநகரங்களில் வரத் தொடங்கியிருக்கிறது. இங்கு, 1RK என்பது ஆங்கிலத்தில் Room, Kitchen என்பதைக் குறிக்கிறது. அதாவது ஒரு அறை மற்றும் ஒரு கழிப்பறைக்கான இடத்துடன் கூடிய சமையலறையைக் குறிக்கிறது. இவ்வகையில் கூடம் அல்லது சாப்பாட்டு பகுதிக்கு இடமில்லை.

வீடு சொந்தமாக வாங்க முடியாது, வீடு வாடகைக்குத்தான் தேவைப்படுகிறது என்று சொல்பவர்களும், தங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ற வீட்டைத் தேர்வு செய்வதற்கு மேற்காணும் BHK அடையாளங்களைக் கொண்டு முடிவெடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com