

கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் சொந்தக்காரர் ஒருத்தர் புதுசா வீடு கட்ட பிளான் பண்ணப்போ தான் எனக்கு இந்த விஷயத்துல பிராக்டிகலா இருக்குற ஏகப்பட்ட சிக்கல்கள் புரிஞ்சது. நம்ம ஊர்ல இருக்குற பெரும்பாலானவங்களுக்கு தங்களோட வாழ்நாள் லட்சியமே ஒரு சொந்த வீடு கட்டுறதுதான். ஆனா, நிறைய பேர் நினைப்பாங்க, "பில்டிங் வேலை நடக்கும்போது தான் பல ரிஸ்க் இருக்கு, வராத பிரச்னை எல்லாம் மொத்தமா வந்துடும்'னு." பட் உண்மை என்னன்னா, சில நேரம் முதல் செங்கல்ல எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடியே, அதாவது நாம பண்ற பிளான்லயே பிரச்னை ஸ்டார்ட் ஆகும்.
நான் இதைப் பத்தி ஆன்லைன்ல இருக்குற பல வெப்சைட்டுகளில் தேடிப் பார்த்தப்போ தான், வீடு கட்டுறதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய சயின்ஸும், முக்கியமான ரூல்ஸும் இருக்குன்னு ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன்.
கண்ணை மூடிட்டு களம் இறங்காதீங்க:
நம்ம ஆளுங்கள்ல பல பேரு கடையில போயிட்டு டைல்ஸ் டிசைன், பெயிண்ட் கலர் பார்க்குறதுல காட்டுற ஆர்வத்தை, முதல்ல ‘நிலத்தை நல்லா செக் பண்ணி வாங்குறதுல’ காட்டுறதே இல்லை. ஒரு ‘லேண்ட்ட அவசரப்பட்டு’ வாங்குறதுக்கு முன்னாடி அது இதுக்கு முன்னாடி யார் யார் கையில் இருந்தது, வில்லங்க சர்டிபிகேட் (EC), அப்புறம் அந்த மண்ணோட தரம் எப்படி இருக்குன்னு ‘லேப்’ டெஸ்ட் பண்ணி பார்க்குறதுதான் முதல ரொம்ப முக்கியம். ஏன்னா, மண்ணோட ஸ்ட்ரென்த்(Strength) கம்மியா இருந்தா அஸ்திவாரச் செலவு நம்ம பட்ஜெட்டை தாண்டி அநியாயத்துக்கு எகிறிடும்!.
அதேபோல, தெரிஞ்சவங்க சொன்னாங்கன்னு மொட்டையா ஒரு காண்ட்ராக்டரை(Contractor) ஒகே பண்ணிடாதீங்க. பர்ஸ்ட் அவங்க முன்னாடி கட்டுன நாலைந்து வீடுகளை நேர்ல போய் விசிட் பண்ணுங்க. மெட்டீரியல், லேபர் கூலி எல்லாத்துக்கும் தனித்தனியா அவங்ககிட்ட கொட்டேஷன்(Quotation) கேளுங்க. மலிவா பண்ணித்தரேன்னு சொல்றவங்ககிட்ட குவாலிட்டி இருக்குமான்னு நேரடியாவும், மறைமுகமாவும் டபுள் செக் பண்ணிக்கோங்க.
ஏன்னா, வேர்ல்ட் பேங்கோட(World bank) அதிகாரப்பூர்வ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரிசர்ச் பேப்பர் படி பார்த்தா, உலகத்துல நடக்குற 90% பெரிய பில்டிங் வேலை திட்டங்கள்ல மோசமான பிளானிங் மற்றும் தப்பான பட்ஜெட் கணக்கால தான் நினைச்சதை விட செலவு பயங்கரமா அதிகமாகிடுதுன்னு சொல்லியிருக்காங்க.
இருக்குற கவர்மெண்ட் ரூல்ஸும், நாம செய்ய வேண்டிய குவாலிட்டி செக்கும்:
இப்ப நம்ம தமிழ்நாட்டுல வீடு கட்ட, பிளான் அப்ரூவல் வாங்குறதுக்கு சிஎம்டிஏ (CMDA) அல்லது டிடிசிபி (DTCP) ஆபீஸ்க்கு அலையத் தேவையே இல்லைங்க. கவர்மெண்ட்டோட ஒரிஜினல் தமிழ்நாடு வெப்சைட் மூலமா ‘இப்ப தனித்தனி ஆபீஸ்க்கு அலையாம, ஒரே வெப்சைட்லயே எல்லா பெர்மிஷனும் தந்துடுறாங்க’ (onlineppa.tn.gov.in). அதேபோல, சிமெண்ட், கம்பி வாங்குறப்போ பிராண்டை மட்டும் பார்க்காம, அது ‘கவர்மெண்ட்டோட பிஐஎஸ்’ (bis.gov.in) முத்திரை வச்சிருக்கான்னு செக் பண்ணி வாங்குங்க. இதுதான் குவாலிட்டிக்கான பக்கா புரூஃப்.
அப்புறம், கொத்தனார், கூலி ஆளுங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கணும்னு ஒரு ஐடியா கிடைக்க, (PWD) ‘கவர்மெண்ட் சொன்ன ரேட் சார்ட்டை’ சும்மா உதாரணத்துக்கு ஒரு தடவை பார்த்துக்கோங்க. ஏன்னா, தமிழ்நாட்டுல பிரைவேட் பில்டர்ஸ் கூலி ரேட் எப்போதுமே கவர்மெண்ட் (PWD) ரேட்டை விட ரொம்பவே அதிகமாதான் இருக்கும். அவங்க நம்மகிட்ட ரெண்டு மூணு மடங்கு எக்ஸ்ட்ராவா கேட்டு ஏமாத்துறாங்களான்னு செக் பண்ண இந்த PWD சார்ட் ஹெல்ப் பண்ணும்.
தமிழ்நாட்டுல சொந்த வீடு கட்ட பிளான் பண்ணுறீங்கன்னா, அக்டோபர் டூ டிசம்பர்ல வர்ற வடகிழக்கு பருவமழை டைம்ல அஸ்திவாரம் தோண்டுற வேலையை வச்சுக்காதீங்க. ஏன்னா, மழை பெஞ்சா குழிக்குள்ள தண்ணி தேங்கி, மண் சேறாகி, மெட்டீரியலும் வீணாயிடும். அதனால, டிசம்பர் டூ ஜூன் வரை இருக்குற டைம்ல வீடு கட்ட ஆரம்பியுங்கள்.
அதாவது, டிசம்பர் டூ பிப்ரவரில மண் பரிசோதனை செஞ்சு, அஸ்திவாரம் போட்டுட்டு. மார்ச் டூ ஜூன் நடக்குற சம்மர் சீசன்ல ஸ்லாப்(Slab), மொட்ட மாடி போடுறது மாதிரியான கொத்தனார் வேலைகளை முடிச்சா மழை வர்றதுக்குள்ள பில்டிங் ஸ்ட்ராங்காயிடும்.
சோ, காண்ட்ராக்டர் கிட்ட ‘ரேட் பேசி கம்மி பண்றதையும்’ சேர்த்து, இந்த மாதிரி சரியான சீசன்ல வேலையை ஆரம்பிச்சாலே பொருள் வேஸ்ட் ஆகுறதும், லேபர் காஸ்ட்டும் குறைஞ்சு ஏகப்பட்ட காசு மிச்சமாகும்! ஆனா, சிமெண்ட், கம்பி விலை ரொம்ப அதிகமா இருந்தா மட்டும் கொஞ்ச நாள் தள்ளிப்போடலாம். ஆக, வானிலை, பட்ஜெட், நல்ல இன்ஜினியர்கள்னு இப்படி இந்த மூணையும் அக்குவேரா ஆணிவேரா அலசிப் பார்த்து ஸ்மார்ட்டா பிளான் பண்ணுங்க மக்களே!.
சொந்த வீடு கட்டும் கனவில் இறங்குவதற்கு முன்பாக, அஸ்திவாரச் செலவைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற பண விரையத்தைத் தவிர்க்கவும் உதவும் நடைமுறை ஆலோசனைகளைப் பெறுவீர்கள்.