WhatsAppன் புதிய விதிகள்... மோசடிகளை குறைக்கும் முயற்சியா?

Whatsapp
Whatsapp
Published on

டெக்னாலஜி தந்த வசதிகளில் அன்றாட நிகழ்வுகள் முதல் உறவுகளுடன் மெசேஜ் மூலம் பேசுவது வரை வாட்ஸ் அப் (Whatsapp) இல்லாமல் இப்போது நம்மால் இயங்கவே முடியாது என்ற சூழலில் தற்போது அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.

வாட்ஸ் அப் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து எளிய அறிவியல் விளக்கத்தை முதலில் காண்போம்.

வாட்ஸ் அப் செயலி SMS போல் மொபைல் சிக்னல் மூலம் இயங்குகிறது என்று நினைப்பது தவறு. இணைய வசதி (Wi-Fi / Mobile Data) மூலமாகவே இயங்குகிறது / தகவல்களை அனுப்புகிறது.

நீங்கள் அனுப்பும் மெசேஜ் உங்கள் மொபைல் → குறியாக்கம் (Encryption) → WhatsApp Server → பெறுபவர் மொபைல் → குறி நீக்கம் (Decryption) என்று முறைப் படுத்தப்படுகிறது. இதனால் நீங்களும் பெறுபவரும் மட்டும் மெசேஜ்களை படிக்க முடியும். உண்மையில் WhatsApp கூட உங்கள் செய்தியைப் படிக்க முடியாது.

அதேபோல் மெசேஜ்கள் நிரந்தரமாக server-ல் சேமிக்கப்படாது. பெற்றவரின் போனுக்கு அனுப்பப்படும் வரை மட்டும் தற்காலிகமாக இருக்கும்.

மெசேஜ் சென்றதை அறியும் வகையில் டிக் வசதி உள்ளது. ஒரு டிக் (✓) Server-வழியே சென்றதை உறுதி செய்யும்.

இரண்டு டிக் (✓✓) வந்தது என்றால் பெறுபவர் அதை பெற்று விட்டார் என்று அறியலாம்.

இரண்டு நீல டிக் (✓✓) வந்தது என்றால் பெறுபவர் அதை படித்து விட்டார் என்று அறியலாம்.

எழுத்து செய்திகள் (Text Messages), புகைப்படங்கள் /வீடியோக்கள் (Photos / Videos), ஆவணங்கள் (Documents), குரல் வழி மெசேஜ் (Voice Messages), இடம் (Location), தொடர்புகள் (Contacts), Video அல்லது Voice Calls போன்றவைகளை வாட்ஸ்அப் மூலம் எளிதில் பகிரலாம்.

WhatsApp Backup வசதியில் Google Drive (Android) iCloud (iPhone) இவற்றில் உள்ள உங்கள் chats backup ஆகும்.

இத்துடன் WhatsApp Groups துவங்கி அனைவரும் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பலாம்.

உங்கள் போன் இணையத்தில் இணைந்திருக்கும்போது QR Code மூலம் லாப்ப்டாப் / கணினியில் WhatsApp Web / Desktop WhatsApp பயன்படுத்தலாம்.

இத்தகைய வசதிகளுடன் இயங்கும் வாட்ஸ் அப் மூலம் (2024–2025 ஆண்டுகளில்) மற்றவர்களிடம் தவறான அணுகல்கள் (spam, மோசடி, சட்டவிரோத செயல்கள்) காரணமாக பலகோடிக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

பொதுவாக வாட்ஸப்பில் நமது சிம் எண்ணை ஒருமுறை ரிஜிஸ்டர் செய்து விட்டால் தடையின்றி வாட்ஸ் அப் சலுகைகளை அனுபவிக்கலாம். மேலும் லேப்டாப்பிலும் வாட்ஸ் அப்பை இணைத்து பணி நேரத்திலும் பயன்படுத்தலாம்.

சில பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வசதிக்கு பிப்ரவரி 2026 ம் ஆண்டில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வரப் போவதாக கூறும் தகவல்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தருகிறது.

தற்போது இந்திய Department of Telecommunications (DoT) — WhatsApp, Telegram, Signal மற்றும் பிற மெசேஞ்சர்-ஆப்ஷன்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவித்துள்ளது. 'SIM-binding' என்று - அதாவது, நீங்கள் முகவரி பதிவு செய்த மொபைல் SIM கார்டு இல்லாமல் அந்த செயலிகளை பயன்படுத்த முடியாது எனவும் Web/Desktop இணைக்கும் வாட்ஸ் அப் செயலி 6-மணி நேரம் மட்டுமே செயல்படும், அதற்கு மேல் பயன்படுத்த மறுபடியும் QR-code மூலம் re-login செய்ய வேண்டும், என்பது போன்ற கட்டுப்பாடுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வந்தது புது விதி..! இனி சிம் கார்டு இல்லாமல் WhatsApp, Telegram இயங்காது..!
Whatsapp

இனிமேல் ஒருமுறை பதிவு செய்த SIM கார்டு (Mobile Number) செயலில் மற்றும் சாத்தியமாக உள்ள SIM-கார்டு பயனாளர் டிவைசில் இருக்க வேண்டும் எனும் இந்த விதிமுறைகள் ஏன்?

ஒரு முறை ரிஜிஸ்டர் செய்து பெறும் வாட்ஸ் அப் வசதியை வெளிநாடுகளுக்கு சென்றாலும் பயன்படுத்தலாம் என்பதால் இதை பயன்படுத்தி நடைபெறும் “மோசடிகள், ஸ்கேம்கள் (fraud) தடுக்கவும் மற்றும் பயனாளரை (anonymity) அடையாளமறிதல் போன்றவைகளுக்கு உதவும் வண்ணம் இந்த நடவடிக்கை என்று DoT அறிவித்துள்ளது.

வரப்போகும் மெசேஞ்சர்-சேவையின் பயன்பாட்டு விதிமுறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் சில சிக்கல்களையும் தரலாம். மெட்டா, டெலிகிராம் போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் ஓவர் கண்ட்ரோல் என இந்த உத்தரவின் மீது தங்கள் எதிர்ப்பையும் காட்டுகிறது.

Web-login இருந்து 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை, automatic logout — பின்னர் QR-code மூலம் மீண்டும் login செய்வது நேர விரயம் தரும். இது குறிப்பாக வேலை, பிசினஸ், github-like சேவைகள் நிறைய WhatsApp மூலம் நடத்துபவர்கள் அல்லது வேலைநேரத்தில் Web-version பயன்படுத்துபவர்களை பாதிக்கலாம். பயனாளர்கள் வேறு டிவைஸ் மாறும் போதும், பிசினஸ் ஆப் மற்றும் வெளிநாட்டு பயனர்களும் சிக்கல்களை சந்திக்கலாம்.

இதையும் படியுங்கள்:
'Whatsapp'க்கு போட்டியாக களம் இறங்கியுள்ள 'அரட்டை'
Whatsapp

நீங்கள் ஒரே SIM-நம்பருடன் பதிவுசெய்து இருந்தால் — அந்த SIM அல்லாமல் வேறு டிவைசில் WhatsApp பயன்படுத்த முடியாது என்பதால் 'இருவேறு சாதனங்களில் உடனடி அணுகல் பெறும் வசதி' (multiple devices, WiFi-tablet ) இல்லாமல் பாதிக்கப்படலாம்.

ஆனால் இந்த கட்டுப்பாடுகள் 'பயனர் தனிப்பட்ட தனிமை (privacy)'– விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்பட வேண்டும். ஒருவரது தொலைபேசி நம்பர் + சரியான SIM மூலம் மட்டுமே செயலிகளை பயன்படுத்த முடியும்.

இணையத்திலும் மெசேஜிங் உலகத்திலும் 'அடையாளத் தெளிவு (traceability)' — நீக்கம் செய்யப்பட்ட (anonymous) நம்பர்கள், தற்காலிக SIM-கள், வெளிநாட்டு SIM-கள் மூலம் சேவைகளை பயன்படுத்தி செய்யும் மோசடிகளை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை கருதலாம்.

அறிவியல் தரும் வசதிகளை, பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டியது நமது கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com