உங்கள் பார்வைத் திறனை கண்டறிய உதவும் ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்!

Optical illusion test
Optical illusion test
Published on

மக்கு ஏற்படும் பார்வை குறைபாட்டை உணர சில எளிய வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பது. இது விளையாட்டுத்தனமாக, பொழுதுபோக்காக இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கது. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். மனித மனங்களை குழப்புவதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத் திறனைக் கூட இதன் மூலம் சோதிக்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும்போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிதைந்துப் போன கூட்டு குடும்பங்கள்... சிந்திக்கவேண்டிய தருணங்கள்!
Optical illusion test

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 505 என்ற எண்கள் வரிசையாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், அதில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தையான SOS மட்டும் உங்கள் பார்வைக்கு எளிதில் தெரியாமல் மறைந்துள்ளது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இங்கே இடம்பெற்றுள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். உங்கள் நேரம் சென்று கொண்டே இருக்கிறது. சில நொடிகளில் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் கண் பார்வை கூர்மையாக இருந்தால் சொல்லப்பட்ட நேரத்தை விட சீக்கிரமாகவே இதை கண்டுபிடித்துவிடுவீர்கள். இன்னும் தெரியவில்லையா? சொன்ன நேரத்திற்குள் சரியான விடையை கண்டுபிடித்த நபர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். உங்கள் கண் பார்வை மிகவும் அற்புதமாக உள்ளது. பதில் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் விரைவாக சரியான பதிலை கண்டுபிடித்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
வாதத்திலேயே மிகவும் ஆபத்தான வாதம் இதுதான்!
Optical illusion test

இந்தப் படத்தில் எல்லா இடத்திலும் 505 என்ற எண்கள் வரிசையாக இருந்தாலும், படத்தின் மேலிருந்து நான்காவது வரிசையை கொஞ்சம் கூர்மையாக பாருங்கள். அதில் SOS என்ற ஒரேவொரு ஆங்கில எழுத்து மட்டும் வித்தியாசமாக இருப்பது தெரிகிறதா? இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விடை.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் ஒரு சில நொடிகளில் கண்டுபிடித்திருந்தால், உங்கள் கண் பார்வை மிகவும் கூர்மையாக இருப்பதாக அர்த்தம். இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது உங்கள் அறிவுத்திறனும், பார்வைத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

இன்றைய நவீன உலகில் அறிவுத்திறனும், புத்திக்கூர்மையும் மிகவும் அவசியமாகும். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்களின் அவதானிப்பு திறனை கூர்மைப்படுத்துவதோடு, அறிவுத்திறனையும் அதிகப்படுத்துகின்றன. ஆனால், இவற்றை மட்டுமே வைத்து உங்கள் பார்வை குறைபாட்டை இல்லை என்று முடிவு செய்து விட வேண்டாம். கண்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் கண்டிப்பாக உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com