செல்போனை விடுங்கள்... பிள்ளைகளை அணைத்துக்கொள்ளுங்கள்! பெற்றோர்களுக்கான எச்சரிக்கை!

parenting-tips
parenting-tips
Published on

குழந்தைகளுக்கு எப்போதும் வீடு என்பது சுகமான விஷயமாக இருக்கவேண்டும். இனிமையான அனுபங்களைத் தரவேண்டும்.

அதற்கு குழந்தைக்குச் சோறூட்ட ஆரம்பிக்கும்போதே அன்பையும் சேர்த்து ஊட்டவேண்டும். பாசம் என்ற கண்ணுக்குத் தெரியாத உறவுச் சங்கிலியால் பிணைத்து அம்மா, அப்பாவிடம் வைத்திருக்க வேண்டும்.

இப்படி ஒரு குழந்தையை சிறு வயதிலிருந்து குடும்பத்தோடு பிணைக்க பெற்றோர்கள் அதற்கு என்ன செய்யலாம்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் குழந்தைகளை அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ளுங்கள். ஒரு கையில் செல்போனை வைத்துக் கொண்டு பிஸியாக இருந்தபடி இன்னொரு கையால் குழந்தையை தூங்க வைக்காதீர்கள். பெற்றோர்களுக்கு தன் மீதான முழு அக்கறை இல்லாத தன்மையைக் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு இதமாக கால் அமுக்கிவிட்டால் அதில் தெரியும் அன்பும், ஆதரவும் அவர்களை குடும்பத்தோடு பிணைத்து வைக்கும். காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்து பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தால் இப்படி பாதம் பிடித்த அமுக்கிவிட்டு தலைகோதி எழுப்பினால் அவர்கள் உங்களை உணர்வுபூர்வமாக விரும்புவார்கள்.

நிறைய உரையாடுங்கள். சேர்ந்து பாடுங்கள். ஓவியம் வரையுங்கள். அவர்களின் விருப்பு, வெறுப்பு கேளுங்கள். வேறு எதுவும் கேட்காதீர்கள். இது உனக்கு பிடிக்கலையா? புடிச்சி இருந்தால் ஏன்? பிடிக்கலைன்னா ஏன்? என கேட்டால் போதும். தினமும் இதையே கேட்டு வைக்காதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோரை பிடிக்காமல் போகலாம்.

இதையும் படியுங்கள்:
விட்டுக்கொடுத்தலும் புரிதலும்: காலங்கள் கடந்தும் நிலைக்கும் உறவுகளின் ரகசியம்!
parenting-tips

குடும்பத்தில் பெற்றோர்கள் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து நகைச்சுவை கதை சொல்லி விளையாடுங்கள்.

ஆளுக்கொரு சொந்த கற்பனை கதை சொல்லவேண்டும் .அது சுமாரானதாக இருந்தாலும் அவர்களே யோசித்ததாக இருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் விளையாடினால் அவர்கள் குடும்பத்தை இன்னும் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சரி, பெரிய சாட் பேப்பர்களை வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதில் மனதில் தோன்றுபவைகளை எல்லாம் வரைந்து விளையாடும்போது இது அவர்கள் மனதை மகிழ்விக்கும்.

சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள் அதிகம் திட்டமிடப்படாமல் ஆச்சரியமாக அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் அந்த உற்சாகத்தில் இன்னும் குடும்பத்தோடு ஒட்டி விடுவார்கள்.

சமையலறையில் கூட ஏதாவது அவர்களை செய்யச் சொல்லி அழையுங்கள். சிறு சிறு உதவிகளை செய்யும்போது அவர்களுக்கு இதனால் மகிழ்ச்சி பொங்கும். அந்த மகிழ்ச்சியை வைத்தே அவர்கள் குடும்பத்தோடு பிணைந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
கறை படிந்த பழைய வெள்ளை சாக்ஸை நிமிடங்களில் புதுசு போல மாற்றும் சீக்ரெட் ட்ரிக் இதோ!
parenting-tips

அவர்கள் பிறந்தபோது குடும்பத்தார் அதை எவ்வளவு கொண்டாடினார்கள் என்பதை பாட்டி, தாத்தா மூலம் கூறினால் குடும்பத்தினர் மீது இன்னும் அன்பும், நேசமும் அதிகமாகி குடும்பத்தோடு பிணைந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

எனவே, குழந்தைகளிடம் அன்புப் பிணைப்பை சங்கிலி போல இணைந்து குடும்பத்துடன் மகிழ்ச்சி கொண்டிருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com