உங்கள் இல்லத்தில் அமைதி நிலவ நீக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Peace prevail in the house
Peace prevail in the house
Published on

மது வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் கற்களால் ஆன கட்டிடம் அல்ல; அது நமது மனதின் பிரதிபலிப்பு. ஒரு வீடு குழப்பமாக இருந்தால், அங்கே வசிப்பவர்களின் மனமும் குழப்பமாகவே இருக்கும். ஸ்டாயிக் (Stoicism) என்ற பழங்காலத் தத்துவம் நமக்குச் சொல்லும் ஒரு முக்கியமான பாடம்: "உன்னால் எதை மாற்ற முடியுமோ அதை மாற்று, எதை மாற்ற முடியாதோ அதை ஏற்றுக்கொள்.’ என்பதுதான்.

நமது வீட்டின் சூழல் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அமைதியும், செழிப்பும் நிலைக்க வேண்டுமெனில், பின்வரும் ஏழு விஷயங்களை உடனே நீக்கவேண்டும்.

1. தேவையற்ற பழைய பொருட்கள்

நாம் பயன்படுத்தாத, ஆனால் "என்றாவது உதவும்" என்று சேர்த்து வைத்திருக்கும் பொருட்கள் நமது சிந்தனையைத் தடுக்கும் தடைகள். ஸ்டோயிக் தத்துவப்படி, தேவையற்ற பொருட்கள் உங்கள் மன ஆற்றலை உறிஞ்சுகின்றன. எதை நீங்கள் ஒரு வருடமாகப் பயன்படுத்தவில்லையோ, அதை யாருக்காவது கொடுத்துவிடுங்கள் அல்லது அகற்றிவிடுங்கள். இடம் காலியாகும்போது, அங்கே புதிய சிந்தனைகள் பிறக்கும்.

2. கசப்பான நினைவுகளைத் தரும் பொருட்கள்

உங்களுக்குத் துக்கத்தையோ அல்லது கடந்த கால கசப்பான விஷயங்களையோ நினைவுபடுத்தும் சில பொருட்கள் வீட்டில் இருக்கலாம். ஒரு பழைய புகைப்படமோ அல்லது ஒரு தோல்வியின் அடையாளமோ நிம்மதியைக் குலைக்கலாம். அவற்றை பார்வையில் இருந்து நீக்குங்கள். கடந்த காலத்தின் பாரத்தை சுமந்துகொண்டு உங்களால் எதிர்காலத்தை நோக்கி ஓடமுடியாது.

3. உடைந்த அல்லது பழுதடைந்த பொருட்கள்

உடைந்த கடிகாரங்கள், விரிசல் விட்ட கண்ணாடிகள் அல்லது வேலை செய்யாத மின்னணு சாதனங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. ஒரு பொருள் உபயோகமற்றதாகிவிட்டால், அதன் பயன் முடிந்துவிட்டது என்று அர்த்தம். அதுபோன்ற பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மனநிம்மதியைக் குலைத்துவிடும் என பழைமையான தத்துவங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
கூட்டுக் குடும்பம்: அன்பால் கட்டப்பட்ட அழகிய அரண்மனை!
Peace prevail in the house

4. பிறருக்காகச் சேர்த்த ஆடம்பரங்கள்

உங்களுக்குப் பிடிக்காமல், வெறுமனே மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக வாங்கிய ஆடம்பரப் பொருட்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். உங்கள் வீடு உங்கள் தேவைக்காக இருக்கவேண்டுமே தவிர, அடுத்தவர் பாராட்டுக்காக இருக்கக் கூடாது. ஆடம்பரத்தைக் குறைத்து, எளிமையைக் கடைபிடிப்பதே ஸ்டோயிக் தத்துவத்தின் அடிப்படை.

5. தேவையற்ற காகிதங்கள் மற்றும் குப்பைகள்

பழைய செய்தித்தாள்கள், காலாவதியான ரசீதுகள் என எங்கும் காகிதங்கள் குவிந்து கிடப்பது உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும். இந்த "டிஜிட்டல்" காலத்தில் தேவையில்லாத காகிதங்களைக் களைவது, உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

6. எதிர்மறை எண்ணங்களைத் தூண்டும் கலைப்பொருட்கள்

சில நேரங்களில் நாம் அலங்காரத்திற்காக வைக்கும் சில படங்கள் அல்லது சிலைகள் சோகத்தையோ அல்லது வன்முறையையோ வெளிப்படுத்துவதாக இருக்கலாம். உங்கள் கண்கள் எதைப் பார்க்கிறதோ, அதுவே உங்கள் ஆழ்மனதில் பதிவாகும். எனவே, அமைதி மற்றும் ஊக்கத்தைத் தரும் கலைப்பொருட்களை மட்டுமே வீட்டில் வைத்திருங்கள்.

7. அதிகப்படியான மின்சாதனங்கள்

அறைக்கு ஒரு தொலைக்காட்சி, எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கைபேசிகள் போன்றவை வீட்டின் அமைதியை கெடுக்கும். ஒருவரோடு ஒருவர் நிம்மதியாக உரையாட விடாமல் தடுக்கின்றன. தொழில்நுட்பம் உங்கள் வீட்டை ஆளவிடாதீர்கள். அமைதியான நேரத்தைச் செலவிட சில இடங்களை "தொழில்நுட்பம் இல்லாத இடமாக" (Tech-free zone) மாற்றுங்கள்.

இதையும் படியுங்கள்:
பழைய துண்டை தூக்கிப் போடும் முன் இதை ஒருமுறை படியுங்கள்... அப்புறம் வருத்தப்படுவீங்க!
Peace prevail in the house

உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது என்பது வெறும் வேலையல்ல, அது அவசியமான ஒன்றாகும். தேவையற்றதை நீக்கும்போது, அங்கே அமைதி குடியேறுகிறது. அமைதி இருக்கும் இடத்தில் செல்வம் தானாகவே வந்து சேரும். இன்று உங்கள் வீட்டைத் தூய்மைப்படுத்துங்கள்; நாளை உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com